சந்திரயான் 3 அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ

சந்திரயான் 3 அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ
  • News18
  • Last Updated: November 14, 2019, 9:43 AM IST
  • Share this:
சந்திரயான் 3 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய 'சந்திரயான்-2' விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்து செயல்படாமல் போனாலும், அதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றிவந்து சிறப்பான முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இதனால், சந்திரயான் 3-ன் மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும் என்றும், சந்திரயான் 3-ன் மூலம் அனுப்பப்படும் லேண்டரின் கால்கள் வலுவானதாகவும், எந்தச் சூழலிலும் தரையிறங்கும் வண்ணம் வடிவமைக்கப்படும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


சந்திரயான்-2 விண்கலம் எடுத்த நிலவின் நிலப்பரப்பின் முப்பரிமாண புகைப்படத்தை இஸ்ரோ நேற்று வெளியிட்டது. டெரைய்ன் மேப்பிங் கேமரா -2 மூலமாக மும்மடங்கு தெளிவுத்திறன் கொண்ட ஸ்டீரியோ படங்களை ஆர்பிட்டர் வழங்கியுள்ளது. இதனை டிஜிட்டல் மேம்பட்ட மாதிரிகளாக மாற்றும்போது, நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளம், எரிமலைக் குழிகள், எதிர்கால வாழ்விடத்திற்கான சாத்தியமான இடங்கள் குறித்து அறிய முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது


First published: November 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading