சந்திரயான் 2 பணி வெற்றியடைந்தது - இஸ்ரோ

நிலவின் தென்துருவப் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக இந்தியா தயாரித்த சந்திராயன் 2 விண்கலம் கடந்த 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான் 2 பணி வெற்றியடைந்தது - இஸ்ரோ
சந்திராயன் - 2
  • News18
  • Last Updated: July 24, 2019, 5:02 PM IST
  • Share this:
சந்திரயான் 2 சுற்றுவட்டப்பாதையை மாற்றியமைக்கும் பணி வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென்துருவப் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக இந்தியா தயாரித்த சந்திராயன் 2 விண்கலம் கடந்த 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் - 2  16 நிமிடங்களில் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. தற்போது சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை மாற்றியமைக்கும் பணி வெற்றியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ, ‘சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை மாற்றியமைக்கும் பணி வெற்றியடைந்தது. சந்திரயான் 2-வின் புவி சுற்றுவட்டப்பாதை 45,475 கி.மீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 170 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 2 தற்போது 230 கி.மீ -ல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14-ம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலகி சந்திரயான் 2 நிலவுக்கு புறப்படும். திட்டமிட்டபடி சந்திரயான் 2 பயணித்தால் ஆகஸ்ட் 20-இல் நிலவின் சுற்றுவட்ட பாதையை சென்றடையும். அடுத்த 21 நாட்களுக்கு மேலும் 14 முறை விண்கலத்தின் சுற்றுவட்டப்பாத மாற்றப்படும்’ அறிவித்துள்ளது.


Also watch

First published: July 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்