நிலவை ஆராய நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2.. கவுன்ட் டவுன் தொடக்கம்!

News18 Tamil
Updated: July 14, 2019, 10:21 AM IST
நிலவை ஆராய நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2.. கவுன்ட் டவுன் தொடக்கம்!
சந்திராயன் 2
News18 Tamil
Updated: July 14, 2019, 10:21 AM IST
நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சார்பில் சந்திரயான்-2 விண்கலம், நாளை அதிகாலை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்ட் டவுன் இன்று காலை தொடங்கியுள்ளது.

2008-ஆம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-1 விண்கலம், 312 நாட்கள் செயல்பாட்டில் இருந்து நிலவின் மேல் பகுதியில் உள்ள தாதுக்கள் குறித்து ஆய்வு செய்தது. நிலவில் நீர்த் துளிகள் இருப்பதையும் கண்டுபிடித்தது.

அதனைத் தொடர்ந்து வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 20 மணிநேர கவுன்ட் டவுன், இன்று காலை 6-51 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் சிவன் வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியாவின் மதிப்பை பறைசாற்றும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்காக புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விண்கலம் செப்டம்பர் 6 அல்லது 7ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் எனவும் அவர் கூறினார்.

First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...