சந்திரயான்-2 திட்டத்தை வழிநடத்தி வரலாற்றில் தடம் பதித்த இரண்டு பெண்கள்!

இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர், 2006-ம் ஆண்டின் சிறந்த பெண் விஞ்ஞானி என்ற விருதை வென்றவர்.

news18
Updated: July 15, 2019, 12:33 AM IST
சந்திரயான்-2 திட்டத்தை வழிநடத்தி வரலாற்றில் தடம் பதித்த இரண்டு பெண்கள்!
சந்திரயான்-2 ரோவர்
news18
Updated: July 15, 2019, 12:33 AM IST
சந்திரயான்-2 திட்டப் பணிகள் முழுவதும் முத்தயா வனிதா, ரிது காரிதால் என்ற பெண்களின் தலைமையில் நடைபெறுவது வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

நிலவுக்கு சந்திரயான்2 விண்கலத்தை நாளை அதிகாலை 2.51 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் இந்தியா அனுப்பவுள்ளது. உலக அளவில் சந்திரயான் 2 விண்கலத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் அனுப்படவுள்ளது. நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில், இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் இதுவாகும். இந்த விண்கலத்துக்கான 20 மணி நேர கவுண்டவுன் இன்று காலை 6.51 மணிக்குத் தொடங்கியது.

ரிது காரிதால்சந்திரயான்-2-ன் திட்ட இயக்குநராக முத்தையா வனிதா செயல்பட்டுவருகிறார். இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர், 2006-ம் ஆண்டின் சிறந்த பெண் விஞ்ஞானி என்ற விருதை வென்றவர்.

முத்தையா வனிதா:


Loading...

முத்தையா வனிதா குறித்து சந்திரயான்-1-ன் திட்ட இயக்குநர் அண்ணாதுரை, நியூஸ் 18-க்கு அளித்தப் பேட்டியில், ’டேட்டாக்ளை(data)கையாளுவதில் வனிதா நிபுணத்துவம் பெற்றவம். அவர், மின்னணு(digital), ஹார்டுவேர்(hardware) பகுதியில் சிறப்பாக பணியாற்றிவர். திட்ட இயக்குநர் பொறுப்புக்குச் செல்வதில் அவருக்கு பெரும் தயக்கம் இருந்தது. நான், தான் அவரை ஒப்புக்கொள்ளச்செய்தேன். இந்தப் பணி என்பது, வெறும் 18 மணி நேர வேலை அல்ல. அதற்காக, பல தியாகங்களைச் செய்யவேண்டும். தேசிய அளவில் அதன் மீது பெரும் கவனம் இருப்பதால், நாம் பொறுப்புணர்வை ஏற்கவேண்டியது உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

ரிது காரிதால்:

ரிது காரிதால், இந்தியாவின் ’ராக்கெட் பெண்’ என்று அழைக்கப்படுபவர். லக்னோ பல்கலைக்கழகத்தில், எம்.எஸ்சி இயற்பியல் முடித்தவர். பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்.டெக் முடித்துள்ளார். அவர், சந்திரயான்-2-வின் மிஷன் இயக்குநராக பணியாற்றிவருகிறார். அவர், 2013-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தின் வட்டப்பாதைக்கு விண்கலம் அனுப்பியத் திட்டத்தில் இணைந்து பணியாற்றியவர்.

Also see:

First published: July 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...