தொழில்நுட்ப கோளாறு - சந்திரயான் 2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

சந்திரயான் 2-க்கான புதிய கவுண்ட்டவுன் விரைவில் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 15, 2019, 8:03 AM IST
தொழில்நுட்ப கோளாறு - சந்திரயான் 2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
சந்திரயான்-2
Web Desk | news18
Updated: July 15, 2019, 8:03 AM IST
சந்திரயான் 2 ஏவும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளறு காரணமாக திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மறுபடியும் விண்கலம் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் மேற்பரப்பு மற்றும் மேற்பரப்பிற்கு அடியில், நிலவின் வெளிப்புறத்தில் தண்ணீர் மூலக்கூறுகளின் விநியோக அளவு ஆகியவற்றை கண்டறிய மேலதிக ஆய்வுகளை செய்வதற்காக சந்திரயான்-2 திட்டம் உருவாக்கப்பட்டது.

இதற்கான 20 மணி நேர கவுன்ட்டவுண் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது. இதை தொடர்ந்து இன்று அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான்-2, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட இருந்தது.


இஸ்ரோவின் பாகுபலி என விஞ்ஞானிகளால் செல்லமாக அழைக்கப்படும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் சந்திரயான்-2 செயற்கைக்கோளை சுமந்து செல்ல இருந்தது.

இந்நிலையில் விண்கலம் விண்ணில் ஏவப்பட 56 நிமிடங்கள் இருந்த போது சந்திரயான் 2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். விண்கலம் ஏவும் லான்ச்பேட் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சந்திரயான் மறுபடியும் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர்
இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரயான் 2 கவுண்ட்டவுன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் புதிய கவுண்ட்டவுன் விரைவில் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Loading...
First published: July 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...