நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு சென்றது சந்திரயான் -2

சந்திரயான் -2 செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: August 20, 2019, 10:34 AM IST
நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு சென்றது சந்திரயான் -2
சந்திரயான் -2 செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
news18
Updated: August 20, 2019, 10:34 AM IST
நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு வெற்றிகரமாக சென்றடைந்தது சந்திரயான் -2

நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, சந்திரயான் 2 விண்கலம், கடந்த மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது.

ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை படிப்படியாக 5 முறை அதிகரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.  இதைத் தொடர்ந்து பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தூரமாக சென்ற சந்திரயான்-2 கடந்த ஆகஸ்ட் 14-ம்- தேதி அதிகாலை 2.21 மணிக்கு 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கி வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தது.


இந்த நிலையில் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க இஸ்ரோ முடிவெடுத்தது. இதற்காக சந்திராயனின் திரவ என்ஜின் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை இயக்கப்பட்டது. இதையடுத்து வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு சந்திரயான் 2 சென்றடைந்தது.



இதையடுத்து ஆகஸ்ட் 21, 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில், விண்கலத்தின் திசையானது நான்கு முறை மாற்றியமைக்கப்படும். அதன்பின்னர், நிலவின் கடைசி சுற்றுவட்டப்பாதையை சந்திரயான் 2 விண்கலம் அடையும். தொடர்ந்து, செப்டம்பர் 2-ம் தேதி, விக்ரம் லேண்டர் எனப்படும் தரையிறங்கும் சாதனம், சந்திரயான்-2 வில் இருந்து பிரிந்து, நிலவின் மேற்பரப்பில் சுற்றிவரும்.

விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதையானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். இறுதியாக, செப்டம்பர் 7-ம் தேதி, நிலவில் மெதுவாக தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also watch

First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...