சந்திரயான்-2: இந்தியாவுக்கு முன்னதாக நிலவில் தடம் பதித்த நாடுகள் எவை?

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, 1969-ம் ஆண்டில் முதன்முதலாக, நிலவுக்கு மனிதன் செல்லும் விண்கலத்தை அனுப்பியது.

news18
Updated: July 14, 2019, 9:53 PM IST
சந்திரயான்-2: இந்தியாவுக்கு முன்னதாக நிலவில் தடம் பதித்த நாடுகள் எவை?
சந்திரயான்-2
news18
Updated: July 14, 2019, 9:53 PM IST
நிலவுக்கு சந்திரயான்2 விண்கலத்தை நாளை அதிகாலை 2.51 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் இந்தியா அனுப்பவுள்ளது. உலக அளவில் சந்திரயான் 2 விண்கலத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் அனுப்படவுள்ளது.

நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில், இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் இதுவாகும். இந்தியாவுக்கு முன்னதாக, நான்கு நாடுகள் இதுவரையில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளனர். அந்த நாடுகள், நிலவுக்கு விண்கலம் அனுப்பியது குறித்து விவரங்களைப் பார்ப்போம்.

அமெரிக்கா: இதுவரையில், நிலவுக்கு மனிதர்களை அனுப்பியுள்ள ஒரே நாடு அமெரிக்காதான். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, 1969-ம் ஆண்டில் முதன்முதலாக, நிலவுக்கு மனிதன் செல்லும் விண்கலத்தை அனுப்பியது.


நிலவில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்


அதன்மூலம், நீல் அம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்த முதல் மனிதராக வரலாற்றில் இடம் பிடித்தார். அதற்கு, முன்னதாக அமெரிக்கா ஆள்இல்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது. மனிதனுடன் சென்ற விண்கலத்துக்குப் பிறகும், அமெரிக்கா பல விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியுள்ளது. கடைசியாக, 2013-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி லாடி என்ற ஆய்வு விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.

ரஷ்யா: பனிப்போர் காலத்திலிருந்தே, வல்லாதிக்க நாடுகளில் முதலிடம் பிடிப்பதில், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் கடும் போட்டி நிலவிவருகிறது. ரஷ்யா, சோவியத் யூனியாக இருந்த காலத்தில் பல ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு ரஷ்யா அனுப்பியுள்ளது. ரஷ்யா, கடைசியாக, 1976-ம் ஆண்டு லுனா 24 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.

Loading...

சீனா: 2007-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி சீனாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சி.என்.எஸ்.ஏ முதல் ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அந்த விண்கலத்தின் பெயர் சாங் ஈ-1. அதன்பிறகு, 2013-ம் ஆண்டு சாங் ஈ-3 என்ற மற்றொரு விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. பின்னர், 2019-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி சாங் ஈ-4 என்ற விண்கலத்தை நிலவின் மற்றொரு பகுதிக்கு அனுப்பியது.

ஜப்பான்: இதுவரையில், நிலவின் வட்டப்பாதையில் சுற்றிவரும் இரண்டு விண்கலத்தை ஜப்பான் அனுப்பியது. 1990-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி ஹிடென் என்ற பெயரிடப்பட்ட விண்கலம் நிலவின் வட்டப்பாதைக்கு அனுப்பப்பட்டது. அந்த விண்கலம், 1993-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி செயல்இழக்கச்செய்யப்பட்டது. பின்னர், 2007-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி செலீனி என்ற பெயரிடப்பட்ட விண்கலம் நிலவின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. பின்னர், 2009-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி அது செயலிழக்கச்செய்யப்பட்டது.
First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...