ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஹேக்கர்கள் ஜாக்கிரதை.. கூகுள் குரோம் பயன்பாட்டாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை !

ஹேக்கர்கள் ஜாக்கிரதை.. கூகுள் குரோம் பயன்பாட்டாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை !

கூகுள் குரோம்

கூகுள் குரோம்

ஹேக்கர்கள் எளிதாக மக்களின் கூகுள் குரோம் கணக்குகளுக்குள் நுழைய வாய்ப்புகள் அதிகம். இதனால் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தரவுகள், தேடல் விபரங்கள், இணைய கணக்குகள் திருடப்படலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நீங்க கூகுள் குரோம் தான் அதிகம் பயன்படுத்துகிறீர்களா? அப்போது ஹேக்கர்கள் ஆபத்து இருக்கு ... இதை செக் பண்ணுங்க.... மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை  இதோ..!

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-IN), இணையப் பாதுகாப்பு குறித்த புது செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பயனர்களுக்கு தீவிர எச்சரிக்கையை வெளியிட்டு வருகிறது.

CERT-IN இன் படி, தளவமைப்பில் இலவசமாகப் பயன்படுத்துதல், எஸ்ட்டேனேஷன்கள், அணுகல்தன்மை மற்றும் Chrome OS இல் கருத்துச் சேவை, கோப்பு முறைமை மற்றும் நீட்டிப்புகளில் போதுமான தரவு சரிபார்ப்பு மற்றும் முறையற்ற செயலாக்கம் ஆகியவற்றின் காரணமாக கூகுள் குரோமில் பல பாதிப்புகள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

இனி ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கும் மாதம் ரூ.1600 கட்டணம்... புதிய திட்டத்தில் எலான் மஸ்க்!

CERT-IN கூற்றுபடி மேலுள்ள காரணங்களால் கூகுள் குரோமின் பாதுகாப்பு அரண் என்பது போகிறது. இதனால் ஹேக்கர்கள் எளிதாக மக்களின் கூகுள் குரோம் கணக்குகளுக்குள் நுழைய வாய்ப்புகள் அதிகம். இதனால் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தரவுகள், தேடல் விபரங்கள், இணைய கணக்குகள் திருடப்படலாம்.

இப்போதுள்ள காலங்களில் எல்லா பாஸ்வோர்ட்களையும் கூகுள் குரோமில் தான் சேமித்து வைத்துள்ளோம். அப்படி இருக்கும்போது பாஸ்வோர்டுகள் திருடப்படும் அபாயமும் அதிகம் உள்ளது.

Twitter செயலிக்கு மாற்றாக Bluesky உருவாக்கும் ஜாக்!

முக்கியமாக , Mac கணினிகளுக்கான செயலி முறையில் 107.0.5304.62 க்கு முந்தைய Google Chrome பதிப்புகள், Linux க்கு 107.0.5304.68 க்கு முந்தைய பதிப்புகள் மற்றும் Windows க்கு 07.0.5304.62/63 க்கு முந்தைய பதிப்புகள் பாதிக்கப்படக்கூடிய மென்பொருள்கள் ஆகும்.

எனவே பழைய பதிப்புகள் வைத்துள்ள மக்கள் விரைவில் கூகுள் குரோம் உலாவிக்கான சமீபத்திய பதிப்புகளுக்கு உடனடியாக மேம்படுத்திக் கொள்ள மத்திய ஏஜென்சி பரிந்துரைக்கிறது. தங்களது தனிப்பட்ட விபரங்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள இதுவே சிறந்த வழியாகும்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Central government, Google Chrome