Home /News /technology /

Apple, Google Chrome பயனர்களே உஷார்... மத்திய அரசு வெளியிட்ட திடீர் எச்சரிக்கை!

Apple, Google Chrome பயனர்களே உஷார்... மத்திய அரசு வெளியிட்ட திடீர் எச்சரிக்கை!

google chrome

google chrome

Google Chrome | கூகுள் குரோம், ஆப்பிள் , மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சைபர் அட்டாக் நடத்துபவர்களுக்கு  சாதகமான பல அமைப்புகள் கூகுள் குரோமில் பதிவாகியுள்ளதாகவும், இது ஹேக்கர்களை ரிமோட் மூலமாக தன்னிச்சையாக இயக்கவும், பாதுகாப்பு கட்டுப்பாடுகளை உடைக்கவும் கூடியதாக உள்ளது என CERT-In எச்சரித்துள்ளது.

கூகுள் குரோமில் 99.0.4844.74 க்கு முந்தைய உலாவியின் பதிப்பைப் பயன்படுத்தும் கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தீவிரமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கூகுள் குரோமில் பல தீங்கிழைக்க கூடிய பக்ஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், கூகுள் குரோம் உலாவி மூலம் மடிக்கணினிகள், மொபைல், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களில் சைபர் தாக்குதல்களுக்கு இந்த பக்ஸ் காரணமாக இருக்கலாம் என்றும் CERT-In அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் மூலம் ஹேக்கர்கள், தன்னிச்சையான குறியீட்டை இயக்கி யூஸர்களின் செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர்களை அணுகலாம் என்றும், இதனால் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தவிர்க்கப்பட்டு, யூஸர்களின் தனியுரிமை தகவல்கள் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறலாம் என்றும் எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பிளிங்க் லேஅவுட், எக்ஸ்டென்ஷன்ஸ், பாதுகாப்பான புரோவுசிங், ஸ்ப்ளிட் ஸ்கிரீன், ஆங்கிள், புதிய டேப் பக்கம், உலாவி UI மற்றும் GPU இல் ஹீப் பஃபர் ஓவர்ஃப்ளோ ஆகியவற்றை இலவசமாக பயன்படுத்துவதால் கூகுள் க்ரோமில் தீங்கிழைக்கும் பக்ஸ் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க,இந்த வாரம் கூகுள் குரோம் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட 99.0.4844.74 பதிப்பை அப்டேட் செய்யும் படி கூகுள் குரோம் பயனாளர்களை CERT-In கேட்டுக்கொண்டுள்ளது.

Also Read : இனி வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் பயன்படுத்தலாம்!

ஆப்பிள் ப்ரோடக்ட்ஸ்:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஐபேட்கள், ஆப்பிள் டிவி, மேக் மற்றும் ஆப்பிள் வாட்சுகளை பயன்படுத்துவோர் அதனை உடனடியாக அப்டேட் செய்யும் படி CERT-In எச்சரித்துள்ளது.

ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பு பிரச்சனைகள் இருப்பதாகவும், அதன் மூலம் ஹேக்கர்கள் ஆப்பிள் சாதனங்களுக்குள் நுழைந்து சில முக்கிய தகவல்களை எடுத்துவிட முடியும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய ஆப்பிள் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டுக்கு உடனே மாற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Also Read : 34 வயது நபரின் உயிரைக் காத்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்... 

அறிவிப்பின் படி “நினைவக துவக்க சிக்கல்கள், வரம்புக்கு அப்பாற்பட்ட வாசிப்பு மற்றும் எழுதுதல், நினைவக சிதைவு, வகை குழப்பம், இலவச முடிந்த பிறகும் செயலியின் சேவை தொடர்வது, அங்கீகாரம், குக்கீ மேலாண்மை சிக்கல், சரிபார்ப்பு சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஆப்பிள் தயாரிப்புகளில் உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



14.4 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் ஐஓஎஸ் ஐபேட் ஓஎஸ், 8.5 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் வாட்ச் ஓஎஸ், 15.4 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் டிவி, 12.12.13 விண்டோஸ் வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் ஐடியூன்ஸ், 12.3 மோண்டெரே வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் மேக் ஓஎஸ், 11.6.5 பிக் சர் வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் மேக் ஓஎஸ், ஆப்பிள் மேக் ஓஎஸ் கேட்டலினா, 7.9 சாஃப்ட்வேர் வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் டிவி, 10.4.6 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் கேரேஜ்பேண்ட், 10.7.3 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் லாஜிக் ப்ரோ எக்ஸ், 13.3 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் Xcode ஆகிய ஆப்பிள் சாதனங்களில் உள்ள மென்பொருளை அப்டேட் செய்யும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read : Youtube Vanced சேவை கிடைக்கவில்லை என வருத்தமா? - ஆட் ஃப்ரீ வீடியோக்களுக்கு இதை முயற்சி செய்யலாம்!

மைக்ரோசாஃப்ட் எட்ஜ்:

ஆப்பிள், கூகுள் குரோமை தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மென்பொருளிலும் சிக்கல் இருப்பதாக CERT-In எச்சரித்துள்ளது.

வெப் ஷேரில் காலம் முடிந்த பிறகும் இலவசம், Blink Layoutல் குழப்பம், Mojo இல் வரம்பிற்கு அப்பாற்பட்ட மெமரியை அணுகல், Media Stream இல் பயன்பாடு முடிந்த பிறகும் இலவசம், மற்றும் நிறுவியில் போதுமான கொள்கை அமலாக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என தெரிவித்துள்ளது. எனவே மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பயனர்கள் அதனை அப்டேட் செய்து கொள்ளும் படி எச்சரித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Central government, Google Chrome, Technology

அடுத்த செய்தி