முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர்.. விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்.! 

அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர்.. விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்.! 

Smartphone

Smartphone

C Type Charger | அனைத்து வகையான ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்களுக்கும் பொருத்தக்கூடிய வகையில் C டைப் சார்ஜர்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிடுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Last Updated :

மத்திய அரசு சமீப காலமாகவே இந்தியாவில் விற்பனையாகி வரும் ஸ்மார்ட்போன்கள் மீது கவனம் செலுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 ஆயிரத்திற்கும் குறைவான சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு தடை விதிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. உள்நாட்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, சீன ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் வருங்காலத்தில் ஆண்ட்ராய்டு, ஐபோன் உள்ளிட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஒரே வகையான சி டைப் சார்ஜர்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின் படி, இதுதொடர்பாக விவாதிக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுடன் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது தெரிய வந்துள்ளது.

அந்த ஆலோசனை கூட்டத்தில், பல வகையான சார்ஜர்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டு, அனைத்து வகையான ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்களுக்கும் பொருத்தக்கூடிய வகையில் C டைப் சார்ஜர்களை அறிமுகப்படுத்தும் வேண்டுமென ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மற்றும் அந்த துறை சார்ந்த நிறுவனங்களிடம் மத்திய அரசு வலியுறுத்த உள்ளது. இதனை ஸ்மார்ட்போன் யூஸர்கள் பல வகையான சார்ஜர்களை பயன்படுத்த சிரமப்படுவதை தடுக்கவும் மற்றும் எலெக்ட்ரிக்கல் கழிவுகள் உற்பத்தியை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2024ம் ஆண்டுக்குள் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஸ்மார்ட்போன்கள், டேப் போன்ற அனைத்து கையடக்க மின்னணு சாதனங்களுக்கும் சி டைப் சார்ஜரை அறிமுகப்படுத்த வேண்டும் என ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே கோரிக்கை தொடர்பாக அமெரிக்காவிலும் நடவடிக்கை எடுக்கப்படும் வரும் நிலையில், தற்போது இந்தியாவிலும் சி-டைப் போர்ட் தொடர்பான கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Also Read : 5ஜி தொழில்நுட்பத்தால் 65% உயர்ந்துள்ள வேலை வாய்ப்பு..!

உலகம் முழுவதும் முன்னணியில் உள்ள பல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனகள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தங்களது ஸ்மார்ட்போன்களுக்கு சி டைப் சார்ஜர்களை கொடுக்க முடியும் என்றால், இந்தியாவிலும் அதையே ஏன் நடைமுறைப்படுத்த முடியாது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற கையடக்க மின்னணு சாதனங்களுக்கு பொதுவான சார்ஜரை தயாரிக்க வேண்டும் என நிறுவனங்களை வலியுறுத்த வேண்டும் கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.

Also Read : தடை செய்யப்பட்டது VLC மீடியா பிளேயர் - உலக சினிமா விரும்பிகளின் ஆஸ்தான பிளேயர்!

top videos

    இன்று ஸ்மார்ட்போன் வாங்கும் ஒவ்வொரு யூஸர்களும், அதற்காக தனித்தனி சார்ஜர்களை வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆப்பிள் ஐபோன்களுக்கு லைட்னிங் கனெக்ட் வகை சார்ஜர்களும், ஆண்ட்ராய்டு போன்களுக்கு விதவிதமான சார்ஜர் வகைகளும் பயன்பாட்டில் உள்ளன. எனவே யூஸர்களின் சுமையை குறைக்கும் விதமாக, ஆண்ட்ராய்டு, ஐபோன் உள்ளிட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஒரே வகையான சி டைப் சார்ஜர்களை விரைவில் அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    First published:

    Tags: Central government, Smartphone, Technology