ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

கூடிய விரைவில் அனைத்திற்கும் ஒரே சார்ஜர்..! தீவிரம் காட்டும் மத்திய அரசு..!

கூடிய விரைவில் அனைத்திற்கும் ஒரே சார்ஜர்..! தீவிரம் காட்டும் மத்திய அரசு..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான ஒருங்கிணைந்த யுஎஸ்பி சார்ஜர்களை உருவாக்குவதற்கான தரக்கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது…

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இப்போது எல்லாம் எலக்ட்ரானிக் மயமாகி வருகிறது. செல்போன், வாட்ச், லேப்டாப் ஹெட்போன் என ஒவ்வொருவரும் பல எலக்ட்ரானிக் சாதனங்களை சுமந்து கொண்டு தான் வீட்டில் இருந்து வெளியில் புறப்படுகிறோம். அவற்றிற்கெல்லாம் சார்ஜ் ஏற்றுவதற்கான கேபிள்களையும் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த சிரமங்களை தவிர்க்கும் நோக்கத்தில் தான் அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களுக்கும் சார்ஜ் ஏற்றும் வகையில் புதிய சி-டைப் யுஎஸ்பி சார்ஜர்கள் உருவாக்க வேண்டியது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இதையடுத்து கான்பூரில் உள்ள ஐஐடியில் புதிய நவீன ஒருங்கிணைந்த சார்ஜர்களை உருவாக்குவதற்கான முயற்சியில் எலக்ட்ரானிக் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிய சி-டைப் யுஎஸ்பி சார்ஜர்களுக்கான தரக் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய தர நிர்ணய அமைவனம். இது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு  அமைச்சகம் எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பாளர்களுடன் பல கட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : உயிரை காக்கும் ஸ்மார்ட் வாட்ச் : ஐபோனின் இந்த அசத்தல் வசதி பற்றி தெரியுமா?

கான்பூர் ஐஐடி சார்பில் புதிய ஒருங்கிணைந்த சார்ஜர்கள் குறித்து அறிக்கை பெறப்பட்டதும், தயாரிப்பாளர்களுடன் ஆலோசித்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார் மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்  துறை செயலர் ரோஹித் குமார் சிங்.

இந்த நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய யூனியன் அரசுகளுடனும் கலந்து ஆலோசிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏனென்றால் ஐரோப்பிய யூனியனில்இருக்கும் எலக்ட்ரானிக் சாதன தயாரிப்பாளர்கள் இந்தியாவிற்காக மட்டும் சாதனங்களை தயாரிக்கவில்லை. இந்த நடைமுறையில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் குறித்து மற்ற நாடுகளில் இருக்கும் எலக்ட்ரானிக் சாதன தயாரிப்பாளர்களுடன் கலந்து ஆலோசிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சார்ஜர்கள் பயன்பாட்டில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் குறித்து கடந்த நவம்பர் மாதம் 16 முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மின் கழிவுகளை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை குறித்து மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமும் ஆய்வு நடத்தி வருகிறது.

சர்வதேச பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் பிரதமர் மோடி கூறியிருந்ததை நிறைவேற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த LiFE Mission- நோக்கிய பயணத்தில் இது முக்கியமான முன்னேற்றம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : முடியை வைத்து சுற்றுசூழலை பாதுகாக்க முடியுமாம்... இந்த கதையைக் கேளுங்களேன் !

புதிய ஒருங்கிணைந்த சார்ஜர் பயன்பாட்டிற்கு வரும்போது, மின் சாதன கழிவுகள் பெருமளவு குறையும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மின்கழிவுகள் குறைவது சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்பதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு ஊக்குவித்து வருவதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Central govt, Technology