முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / பேஸ்புக், வாட்ஸ்ஆப் போலி செய்திகளுக்குச் செக்! ஐடி சட்டத்தில் புதிய திருத்தம்...

பேஸ்புக், வாட்ஸ்ஆப் போலி செய்திகளுக்குச் செக்! ஐடி சட்டத்தில் புதிய திருத்தம்...

பேஸ்புக், வாட்ஸ்ஆப்

பேஸ்புக், வாட்ஸ்ஆப்

விசாரணை என வரும் போது சமுக வலைத்தள நிறுவனங்கள் அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு உதவ வேண்டும்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமுக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் புதிய திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.

புதிய திருத்தங்களின் படி நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது அமைதி கருதி வதந்திகளைக் கண்காணித்துப் போலி செய்திகள் என்றால் அவற்றை 24 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட சமுக வலைதள பக்கம் நீக்க வேண்டும்.

போலி செய்திகளை நீக்கியது மட்டுமில்லாமல், அதை யார் பதிவேற்றியது எனக் கண்டறிந்து அவர்கள் குறித்த விவரங்களையும் சேமித்துச் சம்மந்தப்பட்ட கணக்கின் மீது சமுக வலைதள நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம்.

அதுமட்டுமில்லாமல் போலி செய்திகள் பரப்பியது குறித்த விவரங்களை விசாரணைக்காக 180 நாட்கள் வரை சேமித்து வைக்க வேண்டும். விசாரணை என வரும் போது சமுக வலைதள நிறுவனங்கள் அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு உதவ வேண்டும்.

புதிய திருத்தங்கள் குறித்துச் சமுக வலைத்தள நிறுவனங்கள் அவர்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் பார்க்க: அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு அரசு புதிய கட்டுப்பாடு

First published:

Tags: Facebook, Fake News, Twitter, WhatsApp