பேஸ்புக், வாட்ஸ்அப், ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

சமூக வலைதளங்கள்

வேறு நபரின் புகைப்படங்களை சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் பதிவேற்றம் செய்ய தடை.

 • Share this:
  பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

  சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில், மத்திய அரசு தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

  அதன்படி, வேறு நபரின் புகைப்படங்களை சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் பதிவேற்றம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. அது மற்றவரின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவது என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  சமூக வலைதளங்களை போன்று நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், ஜி5 உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கும் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஓடிடி தளங்கள் தங்களது படைப்புகளுக்கு மூன்று அளவில் தணிக்கை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, வெளியீட்டாளர்களால் சுய கட்டுப்பாடு, வெளியீட்டாளர்களின் சுய ஒழுங்குபடுத்தும் அமைப்பு மற்றும் மேற்பார்வை வழிமுறை குழுவிடம் சான்று பெறவேண்டும். இதற்காக தனியாக அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்படுகிறார்.

  Must Read :  பெட்ரோல், டீசல், சிலிண்டரை அடுத்து பால் விலையும் உயர்கிறது லிட்டருக்கு ரூ.12 உயர்வு?

   

  மேலும் ஓடிடியில் பதிவு செய்யும்போது வன்முறை, ஆபாசம்,பாலினம் அடிப்படையில் படங்களை வகைப்படுத்த வேண்டும் என ஓடிடி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: