ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியாவில் விஎல்சி வீடியோ பிளேயருக்கு தடை நீக்கம்… மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் விஎல்சி வீடியோ பிளேயருக்கு தடை நீக்கம்… மத்திய அரசு அறிவிப்பு

vlc player

vlc player

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கழித்து விஎல்சி மீடியா பிளேயர் மென்பொருளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக மத்திய மின்னணு மற்றம் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  இந்தியாவில் விஎல்சி வீடியோ பிளேயர் மென்பொருளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மத்திய தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது.

  இணைய பயன்பாட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது விஎல்சி மீடியா பிளேயர். இந்த மென்பொருள் இருந்தால் தான் இணையத்திலும் சரி நமது கணினியிலும் சரி வீடியோ காட்சிகளை பார்க்க முடியும். இணையம் மற்றும் கணினி பயன்படுத்தும் பெரும்பாலோனோர் இந்த மென்பொருளை பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் 90 விழுக்காடு வீடியோக்கள் விஎல்சி ஃபார்மேட்டில் தான் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதனால் இந்த மென்பொருள் மிக அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

  ஆனால் இந்த விஎல்சி மீடியா பிளேயர் மென்பொருளை கடந்த ஏப்ரல் மாதம் திடீரென தடை செய்தது மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், விஎல்சி மீடியா பிளேயருக்கு தடை விதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த வீடியோ லேன் நிறவனம், என்ன காரணம் என விளக்காமல் தங்கள் மென்பொருளுக்கு தடை விதிப்பது சட்டவிதிகளுக்கு புறம்பானது எனக் கோரி  நோட்டீஸ் அனுப்பினர். வீடியோ லேன் நிறுவனத்திற்கு ஆதரவாக IFF எனப்படும் இணைய சுதந்திர அமைப்பும் களமிறங்கியது.

  எந்த முன்னறிவிப்பும் இல்லாமலும் , தடைசெய்யப்படப் போகும் மென்பொருளுக்கு சொந்தமான நிறுவனத்திடம் எந்த விளக்கமும் கேட்காமல் தடை விதித்திருப்பது சட்டவிரோதம் என வாதிட்டது IFF. இதே போல் முன்னறிவிப்பின்றி தடைசெய்யப்பட்ட பல்வேறு நிகழ்வு தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் IFF முன்வைத்தது.

  இதையடுத்து அக்டோபர் மாதம் மத்திய தொழில்நுட்பத் துறை விடியோ லேன் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் வாடிக்கையாளர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பரிமாறும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி ஏற்கனவே தடை செய்யப்பட்ட ஒன்மியோஜி அரினா நிறுவனத்துடன் விடீயோ லேன் நிறுவனம் தொழில்நுட்ப தொடர்பில் இருப்பதால் விஎல்சி மீடியா பிளேயர் மென்பொருள் தடை செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

  அதையும் எதிர்த்து வீடியோ லேன் நிறுவனமும், IFF அமைப்பும் சட்டப்போராட்டம் நடத்தின. இத்தனைக்கும் பிறகு, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கழித்து விஎல்சி மீடியா பிளேயர் மென்பொருளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக மத்திய மின்னணு மற்றம் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது.

  இதையும் படிங்க: மிக்ஸ்டு-ரியாலிட்டி ஹெட்செட்... வேகமெடுக்கும் ஆப்பிள்.... சிறப்பம்சம் என்ன?

  விஎல்சி மீடியா பிளேயர் மென்பொருள் இந்தியாவில் இணைய பயன்பாட்டாளர்களில் 80 விழுக்காடு  பேர் பயன்படுத்துகிறார்கள். இந்த மென்பொருள் தடை செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் விஎல்சி பிளேயரை பல்வேறு பிராக்சி இணைய தளங்கள் மூலம் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தனர். இது இணைய பயன்பாட்டாளர்களை மேலும் தொழில்நுட்ப மற்றும் தகவல் பரிமாற்ற சிக்கலுக்குத் தான் ஆளாக்கியுள்ளது என கவலை தெரிவிக்கிறார் வீடியோ லேன் நிறுவனத்தின் தலைவர் ஜீன் பேப்டைஸ்ட் கெம்ப்ஃ. தற்போது விஎல்சி மீடியா பிளேயருக்கான தடை நீக்கப்பட்டிருப்பதால் இணையவாசிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Central government