ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

மொத்தமாக ரூ.2200 கோடி ஃபைன்.. அதிகார துஷ்பிரயோகம்.. அடிமேல் அடிவாங்கும் கூகுள்!

மொத்தமாக ரூ.2200 கோடி ஃபைன்.. அதிகார துஷ்பிரயோகம்.. அடிமேல் அடிவாங்கும் கூகுள்!

கூகுள்

கூகுள்

ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் நிறுவனம் அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்தியுள்ளது என்று தொடர்ந்து இரண்டு முறை கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சில நாட்களுகுக் முன்பு, காம்ப்படிஷன் கமிஷன், தனது அதிகாரம் செலுத்தக்கூடிய நிலையைக் கூகுள் ஆண்ட்ராய்டு தளம் பயன்படுத்தும் மொபைல் சாதனங்களில் தவறாகப் பயன்படுத்தி உள்ளதாக 1337.76 கோடியை அபராதமாக விதித்துள்ளது. முதல் அபராதம் வெளியான தகவல் பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், தற்போது மீண்டும் கூகுளுக்கு 936 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில்நுட்ப சாதனங்களை, சேவைகளை மற்றும் இதர தயாரிப்புகளை வழங்கிவரும் நிறுவனங்கள், முறைகேடான வணிகத்தில் ஈடுபடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் பல விதமான கெடுபிடிகளையும், விதிமுறைகளையும் அமல்படுத்தி இருக்கிறது. அதிகாரம் செலுத்துமிடத்தில் முதன்மையான இடத்தில் வகிப்பதை தனக்குச் சாதமாகப் பயன்படுத்தியுள்ளது, அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது என்று கூகுளின் மீது பல விதமான குற்றச்சாட்டுக்கள் உள்ளது.

  முதலில், கூகுளுக்கு தன்னுடைய ஆண்ட்ராய்டு ஓஎஸ் தளத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக காம்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா தெரிவித்த நிலையில், தற்பொழுது பிளே ஸ்டோர் கொள்கைகளிலும் சந்தை நிலவரத்தில் தனது ஆதிகத்தைக் கூகுள் மீண்டும் சாதகமாகப் பயன்படுத்தி இருக்கிறது என்று ரூ.936.44 கோடியை அபராதமாக விதித்துள்ளது. உடனடியாக இதை முடிவுக்குக் கொண்டு வரும் நிறுத்தல் உத்தரவைப் பிறப்பித்த சிசிஐ, ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து, அதற்குள் தனது கொள்கைகள் நடத்தையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூகுளுக்கு உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், தனது பிளே ஸ்டோரில், மூன்றாம் தரப்பு ஆப் டெவலப்பர்களின் செயலிகளையும் அனுமதிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.

  இந்த முறை கூகுள் பிளே ஸ்டோரில் கூகுள் பிளேவின் பில்லிங் சிஸ்டத்தில் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது என்று காம்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. கூகுள் பிளேவில் அதன் ஒரு அங்கமாக பில்லிங் சிஸ்டம் செயல்பட்டு வருகிறது. யூசர்கள் செயலிகளுக்கு, செயலிகளில் உள்ள தயாரிப்புகளுக்கு, அப்கிரேட் செய்வதற்கு இந்த பேமண்ட் சிஸ்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  ஆனால் ஆப் டெவலப்பர்களைப் பொறுத்தவரை கூகுள் பிளேவில் அவர்கள் வழங்கும் அனைத்து ஆப்ஸ்களுக்குமே அவர்கள் கூகுள் பிளேவின் பில்லிங் சிஸ்டத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. எனவே app டெவலப்பர்கள் தனது செயலிக்குள்ளேயே வேறு ஒரு மாற்று பேமென்ட் முறையை யூசர்களுக்கு வழங்க முடியாது என்ற நிலை இருந்து வந்தது.

  அதாவது, யூசர்கள் ஒரு குறிப்பிட்ட செயலியை வாங்க வேண்டும் என்றாலோ அல்லது செயலியில் இருக்கும் ஏதேனும் ஒரு சேவை அல்லது தயாரிப்பை வாங்க வேண்டும் என்றாலோ அவர்கள் கூகுள் ப்ளே பில்லிங் சிஸ்டத்தை மட்டுமே பயன்படுத்தி வாங்க முடியும். மாற்று முறை அல்லது செயலிக்கு வெளியே பேமெண்ட் செலுத்தும் முறையைக் கூகுள் அனுமதிக்கவில்லை.

  Also Read : இந்த மாதத்தில் இது 2வது முறை.. எச்டிஎப்சி வங்கியின் புதிய அறிவிப்பு என்ன தெரியுமா?

  இந்த விதியை ஆப் டெவலப்பர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் தங்களின் செயலியைப் பட்டியலிட முடியாது என்று கூகுள் கட்டுப்பாடு விதித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் முழுக்க முழுக்க கூகுள் பிளேவின் பில்லிங் சிஸ்டத்தின் அடிப்படையில், ஒரு மோனோபோலி மார்க்கெட்டாக இயங்கி வருவதால் ஆப் டெவலப்பர்களுக்கு வேறு வாய்ப்பே இல்லை என்று காம்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

  ஆனால் இந்த மோனோபோலி பில்லிங் சிஸ்டம் என்பது மூன்றாம் தரப்பு ஆப் டெவலப்பர்களுக்கு மட்டும் தான். கூகுள் தன்னுடைய பாலிசியில் தனது சொந்த சேவைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு இந்த கட்டுப்பாட்டை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக யூடியூப் எடுத்துக் கொள்ளலாம்: யூடியூப் பொறுத்தவரைக் கூகுள் பிளேவின் பில்லிங் சிஸ்டத்தின் வழியாகத்தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற எந்தவித கட்டுப்பாடும் கிடையாது என்பதையும் சி சி ஐ கண்டறிந்துள்ளது. இது வரை கூகுள் தரப்பில் இதற்கு விளக்கம் தரப்படவில்லை.

  Published by:Janvi
  First published:

  Tags: Google, Google play Store