ட்விட்டர், வாட்ஸ்அப், டிக்டாக் மீது வழக்குப்பதிவு...! தேசவிரோத கருத்துக்களை பரப்பியதாக புகார்

- News18 Tamil
- Last Updated: February 28, 2020, 12:22 PM IST
ட்விட்டர், வாட்ஸ்அப், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்கள் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தேசவிரோத கருத்துக்களை பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ட்விட்டர், வாட்ஸ்அப், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்கள் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிஏஏ, என்ஆர்சி ஆகியவற்றிற்கு எதிராக பாகிஸ்தானிலிருந்து சில சமூகவிரோத சக்திகள் கருத்துக்களை பதிவிட்டுள்ளதாகவும், அதனை இந்தியாவில் சமூக வலைதளங்களில் பரப்புவதாகவும் கூறி, ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நம்பல்லி நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் சில்வேரி ஸ்ரீசைலம், மனுத் தாக்கல் செய்தார். அதில், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரப்பப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், ட்விட்டர், வாட்ஸ்அப், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்கள் மீது இணையதள குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அடுத்த சில நாட்களில் சமூகவளைதலங்களின் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தேசவிரோத கருத்துக்களை பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ட்விட்டர், வாட்ஸ்அப், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்கள் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிஏஏ, என்ஆர்சி ஆகியவற்றிற்கு எதிராக பாகிஸ்தானிலிருந்து சில சமூகவிரோத சக்திகள் கருத்துக்களை பதிவிட்டுள்ளதாகவும், அதனை இந்தியாவில் சமூக வலைதளங்களில் பரப்புவதாகவும் கூறி, ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நம்பல்லி நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் சில்வேரி ஸ்ரீசைலம், மனுத் தாக்கல் செய்தார்.
அடுத்த சில நாட்களில் சமூகவளைதலங்களின் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.