உலகின் முதல் பேப்பர் பாட்டீல் பீர்... அறிமுகம் செய்கிறது கார்ல்ஸ்பெர்க்

வருகிற 2030-ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை 30 சதவிகிதம் வரையில் குறைக்கும் குறிக்கோளை கார்ல்ஸ்பெர்க் கையிலெடுத்துள்ளது.

உலகின் முதல் பேப்பர் பாட்டீல் பீர்... அறிமுகம் செய்கிறது கார்ல்ஸ்பெர்க்
மாதிரி படம்
  • News18
  • Last Updated: October 11, 2019, 8:14 PM IST
  • Share this:
உலகளவில் முதன்முறையாக பேப்பர் பாட்டீல் மூலம் பீர் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது கார்ல்ஸ்பெர்க் நிறுவனம்.

டென்மார்க் பீர் நிறுவனமான கார்ல்ஸ்பெர்க் பேப்பர் பாட்டீல் அறிமுகம் செய்கிறது. பேப்பரில் மட்டுமல்லாது மரத்தாலான ஃபைபர் பாட்டீல்களையும் கார்ல்ஸ்பெர்க் அறிமுகம் செய்யும் முயற்சியில் உள்ளது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் கார்ல்ஸ்பெர்க் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறது.

இதுகுறித்து கார்ல்ஸ்பெர்க் துணைத் தலைவர் மிரியம் ஷிங்கில்டன் கூறுகையில், “தொடர்ந்து எங்களது பேக்கேஜிங் முறைகளில் புதுமையை புகுத்த விரும்புகிறோம். பசுமையை வலியுறுத்தும் ஃபைபர் பாட்டீல்களுக்கு முக்கியத்துவம் தர முயற்சிக்கிறோம். புதுமையை உலகளவில் நடைமுறைப்படுத்த பல தொழில்நுட்ப உதவிகளும் தேவைப்படுகிறது. அதற்கான கூடுதல் கால அவகாசமும் தேவைப்படுகிறது” என்றுள்ளார்.


வருகிற 2030-ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை 30 சதவிகிதம் வரையில் குறைக்கும் குறிக்கோளை கார்ல்ஸ்பெர்க் கையிலெடுத்துள்ளது. இதற்கான பணியை கடந்த 2015-ம் ஆண்டே தொடங்கிவிட்டதாகவும் கூறுகிறது கார்ல்ஸ்பெர்க்.

மேலும் பார்க்க: #GoBackModi ஹேஷ்டேக்கை சீன மொழியில் ட்ரெண்ட் செய்த தமிழர்கள்..!
First published: October 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading