கேப்பிடல் ஒன் நிறுவனத் திருட்டு: 100 மில்லியன் பேரின் சுயதகவல்களைத் திருடிய பெண் ஹேக்கர் கைது!

கேப்பிடல் ஒன் நிறுவனம்

பெண் ஹேக்கர் கேப்பிடல் ஒன் நிறுவனத்தின் பயனாளர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 100 மில்லியன் பேரின் தகவல்களையும் கனடாவைச் சேர்ந்த 6 மில்லியன் பேரின் தகவல்களையும் ஹேக் செய்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்காவின் பிரபல நிதி நிறுவனமான ‘கேப்பிடல் ஒன்’ நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், பயனாளர்கள் உள்ளிட்ட 100 மில்லியன் பேரின் சுய தகவல்கள் திருடப்பட்டதாகப் புகார் எழுப்பப்பட்டுள்ளது.

கேப்பிடல் ஒன் நிறுவனம் தனது பயனாளர்களின் தகவல்கள் திருடு போயிவிட்டதாகக் கொடுத்த புகாரின் பெயரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹேக்கர் ஆன சியாட்டிலைச் சேர்ந்த பெண் டெக்கி ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தப் பெண் ஹேக்கர் கேப்பிடல் ஒன் நிறுவனத்தின் பயனாளர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 100 மில்லியன் பேரின் தகவல்களையும் கனடாவைச் சேர்ந்த 6 மில்லியன் பேரின் தகவல்களையும் ஹேக் செய்துள்ளார்.

பெயர், முகவரி, பிறந்த தேதி, தொடர்பு எண், பண முதலீடுகள், சேமிப்புகள், பண வர்த்தகங்கள் என அனைத்தையும் ஹேக் செய்த இப்பெண்ணிடம் க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண் மட்டும் கிடைக்கப்பெறவில்லை. அதற்கு முன்னரே கைது செய்யப்பட்டுவிட்டதாக கேப்பிடல் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் சியாட்டில் மாகாணத்தைச் சேர்ந்த பைஜ் தாம்சன் என்ற 33 வயதுப் பெண் இந்தக் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அமேசான் இணைய சேவை நிறுவன ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: உணவு டெலிவரி சேவையிலும் கால் பதிக்கத் தயாராகும் அமேசான் இந்தியா!
Published by:Rahini M
First published: