ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

சிக்கலில் 5ஜி.. எக்ஸ்ட்ரா பணமா? 4ஜியைத் தேடும் மக்கள்.. குழப்பத்தில் டெலிகாம் நிறுவனங்கள்!

சிக்கலில் 5ஜி.. எக்ஸ்ட்ரா பணமா? 4ஜியைத் தேடும் மக்கள்.. குழப்பத்தில் டெலிகாம் நிறுவனங்கள்!

5ஜி சேவை

5ஜி சேவை

வெறும் 5 சதவீத மக்கள் மட்டுமே 5ஜி சேவை ஏற்கனவே அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 17 சதவீதம் பேர் இதைப் பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.

 • News18 Tamil
 • 5 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது 5ஜி சேவை. மிக பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொது மக்கள் இந்த 5ஜி சேவையை பற்றி எந்த ஒரு அக்கறையும் காட்டி கொண்டதாக தெரியவில்லை. 5ஜி சேவைகள் அறிமுகம் ஆகப் போகிறது, எந்த நிறுவனம் எவ்வளவு தொகை கொடுத்து ஏலம் எடுக்கிறது என்பது வரையில் இருந்த ஆர்வம் கூட அதன் பிறகு குறைந்துவிட்டது. முக்கியமாக இந்தியர்கள் பலரும் இந்த 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கென கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த விரும்பவில்லை, ஏற்கனவே இருக்கும் 4ஜி சேவையே போதுமானதாக இருப்பதாக கூறியுள்ளனர்.

  இன்டர்நெட் வேகத்தில் எந்த வித்தியாசமும் இல்லை

  மிகப்பெரும் சர்ச்சைகளுக்குப் பின் பெரும் எதிர்பார்ப்புடன் இந்தியாவில் அக்டோபர் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது 5ஜி சேவை. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வந்து விழாவை துவக்கி 5ஜி சேவையை அறிமுகபடுத்தி வைத்தார். தற்போது பயன்படுத்தும் 4ஜி இன்டர்நெட் சேவையில் கிடைக்கும் வேகத்தை விட பத்து மடங்கு அதிக வேகத்துடனும் மற்றவர்களுடன் வாய்ஸ் கால் பேசும் போது கிடைக்கும் அனுபவம் 4ஜி சேவையில் கிடைப்பதை விட மிகத் தெளிவாகவும் தரமானதாகவும் இருக்கும் என கூறி தான் விளம்பரப்படுத்தபட்டது.

  Read More : இந்த ஆப்களால் உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்டிற்கு ஆபத்து - மெட்டா எச்சரிக்கை

  அதே நேரத்தில், 5ஜி சேவையை குறித்து, யூசர்களிடம் கருத்து கணிப்பு ஒன்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அதில் டெலிகாம் நிறுவனங்கள் கூறியதை போல இன்டர்நெட் வேகத்தில் ஒன்றும் அதிக வித்தியாசம் தெரியவில்லை என்றும் காலின் தரம் மட்டுமே உயர்ந்துள்ளது என கூறியுள்ளனர். மற்ற வசதிகள் அனைத்தும் 4ஜி சேவையில் இருப்பதை போலவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.எனவே 5ஜி சேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் கூறியுள்ளனர்.

  எங்களுக்கு 4ஜி சேவைகள் போதும்

  தற்போது 4ஜி சேவையின் விலைக்கே 5ஜி சேவைகள் கிடைக்கும் என்று எல்லா டெலிகாம் நிறுவனங்களும் அறிவித்துள்ளன. ஆனால், வருங்காலத்தில் 5ஜிக்கு என தனி கட்டணம் வசூலிக்கபடலாம் என தெரிகிறது. அவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தால் அந்த சேவை எங்களுக்கு தேவையில்லை என்று பெரும்பாலனவர்கள் கூறியுள்ளனர். இப்பொழுது இருக்கும் 4ஜி சேவையே மிகவும் வசதியாக உள்ளது என்றும் அவர்கள் அந்த சர்வேயில் தெரிவித்துள்ளனர்.

  நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு

  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5ஜி சேவையில் யூசர்கள் அவர்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்பதையும், அதை இந்த புதிய 5ஜி சேவை நிறைவேற்றி உள்ளதா என்பதையும் கண்டறியும் பொருட்டு இந்தியாவில் உள்ள 318 மாவட்டங்களில் 29,000 மொபைல் யூசர்களிடம் 5ஜி சேவையை பற்றி கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 64% பேர் ஆண்கள் 36 சதவீதம் பேர் பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

  பங்கேற்பாளர்களில் 47 சதவீத மக்கள் இந்தியாவின் முதல் நிலை மெட்ரோ நகரங்களில் வசிக்கின்றனர். 34 சதவீத மக்கள் இரண்டாம் நிலை நகரங்களிலும் மீதமுள்ள 19% மக்கள் மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் வசிக்கின்றனர். தற்போதைக்கு இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களில் மட்டுமே 5ஜி சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

  Read More : கூலாக கலக்கும் கூகுள்! 6 ஆண்டுகளில் 30 மில்லியன் போன்கள் விற்பனை! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

  இந்த கருத்துக்கணிப்பில் வாடிக்கையாளர்களிடம் “இந்தியாவில் மிக விரைவில் 5ஜி சேவை நாடு முழுக்க பிரபலமாக உள்ளது. அப்போது, தற்போது உள்ள கட்டணத்தைவிட அதிக கட்டணம் செலுத்தி பயன்படுத்துவதில் எந்த அளவு நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள்” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதில் 43 சதவீத மக்கள் இப்பொழுது இருக்கும் 3ஜி, 4ஜி சேவைக்கான கட்டணத்தை விட ஒரு பைசா கூட அதிகம் செலுத்தி 5ஜி சேவையை சேவை பெற விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

  மற்ற 43 சதவீத மக்கள் தற்போது செலுத்தும் கட்டணத்தை விட பத்து சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்தி 5ஜி சேவையை பெற விரும்புவதாக தெரிவுத்துள்ளனர். 10,019 பேரிடம் கேட்கப்பட்ட இந்த கேள்வியில் 10 சதவீத மக்கள் அதிகபட்சம் 10 - 25 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் செலுத்தி 5ஜி சேவையை பெறலாம் என்றும், மீதமுள்ள 2 சதவீத மக்கள் 25 - 50 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் செலுத்தத் தயாராக உள்ளனர். மற்ற 2 சதவீத மக்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்று சரியாகக் கூற முடியவில்லை.

  இரண்டாவதாக, 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கு ஏற்ற 5ஜி மொபைல் தற்போது உங்களிடம் உள்ளதா? அந்த 5ஜி சேவையை பயன்படுத்துவதில் ஏதேனும் குறைபாடு உள்ளதா? இந்த 5ஜி சேவை பயன்படுத்துவதற்காக புதியதாக 5ஜி சப்போர்ட் உடைய மொபைலை வாங்க வேண்டுமா என்பதை கண்டறிய அவர்களின் மொபைலைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் தற்போது பெரும்பாலும் புழக்கத்தில் இருக்கும் மொபைல் அல்லது டேப்லட்களில் 5ஜி சேவை சப்போர்ட் இல்லை என்று கூறியுள்ளனர்.

  5ஜி டிவைஸ் இல்லாதவர்களிடம், அவர்கள் 5ஜி சேவையை பயன்படுத்த அதை சப்போர்ட் செய்ய கூடிய புதிய டிவைஸ் வாங்க விருப்பம் உள்ளதா என்றும், அப்படி வாங்க விருப்பப்பட்டால் எப்போது அவர்கள் அதை செய்வார்கள் என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. அதில் 20% மக்கள் ஏற்கனவே தங்களிடம் 5ஜி சேவையை சப்போர்ட் செய்யக்கூடிய ஸ்மார்ட் ஃபோன் இருப்பதாகஜ் கூறியுள்ளனர்.

  Read More : 5G மொபைல் டேட்டா... எதன் வேகம் அதிகம்? ஏர்டெல்-லா அல்லது ஜியோ-வா.?

  மொத்தம் 9,965 பேரிடம் கேட்கப்பட்ட இந்த கேள்வியில் 4 சதவீத மக்கள் இந்த வருடமே 5ஜி சேவையை சப்போர்ட் செய்யக்கூடிய டிவைஸை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 12 சதவீத மக்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்திற்குள் புதிய டிவைஸை வாங்க விரும்புவதாகவும், 8 சதவீத மக்கள் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வாங்க விரும்புவதாகும் தெரிவித்துள்ளனர்.

  5ஜி ஆதரவு சாதனங்கள் விலை அதிகம்

  தற்போது 5ஜி சேவை சப்போர்ட் உடைய டிவைஸ்களின் விலை அதிகமாக இருப்பதால் 10 சதவீத மக்கள் 2024 ஆம் ஆண்டில் 5ஜி சப்போர்ட் உடைய டிவைஸ்களை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட நான்கில் ஒருவர் 5ஜி சேவையை பற்றி எந்த கவலையும் இல்லை, அதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதை பயன்படுத்த புது மொபைல் வாங்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 22 சதவீத மக்கள் இதைப்பற்றி பிறகு யோசிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

  5ஜி சேவையில் உண்மையில் என்ன எதிர்பார்க்கிறார்கள்

  கடைசியாக 5ஜி சேவை பற்றி மக்களின் எதிர்பார்ப்பை தெரிந்து கொள்வதற்காக வாடிக்கையாளர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில் தற்போது உங்களுக்கு தெரிந்த வரையில் 5ஜி சேவையில் உங்களுக்கு என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்; அதற்காக எவ்வளவு செலவு செய்ய தயாராக உள்ளீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது;

  இந்த கேள்விக்கு அதில் 19% மக்கள் தரமான கால் பேசும் வசதியும், பேசும் அனுபவமும் அதிகமாக இருக்கும் வேண்டுமென தெரிவித்துள்ளார்கள். 5 சதவீதம் பேர் இன்டர்நெட்டின் எல்லை விரிவுபடுத்தப்பட அதிகரிக்க வேண்டும் எனவும்,12 சதவீத மக்கள் இன்டர்நெட்டின் வேகம் அதிகமாக இருக்கும் வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்

  Read More : இந்தியாவில் ஐபோன்களில் 5ஜி சேவை எப்போது கிடைக்கும் தெரியுமா?

  கிட்டத்தட்ட 10,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 3 சதவீத மக்கள் தேவையற்ற ஸ்பேம் மெசேஜ்கள் வருவதின் எண்ணிக்கை குறைய வேண்டும் எனவும், 39 சதவீத மக்கள் மேலே குறிப்பிட்டுள்ள நான்கு பிரச்சனைகளும் தீர்ந்தால் மட்டுமே 5ஜி-க்கு அப்கிரேட் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

  வெறும் 5 சதவீத மக்கள் மட்டுமே 5ஜி சேவை ஏற்கனவே அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 17 சதவீதம் பேர் இதைப் பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.

  கருத்துக்கணிப்பின் அடிப்படையில், மேலே கூறப்பட்டுள்ள படி பார்த்தால் 4ஜி சேவை விரைவாக வெற்றியடைந்த அளவிற்கு 5ஜி சேவை வெற்றி பெறாது எனவும், அதனை இந்திய முழுவதும் விரிவுபடுத்த இன்னும் சில காலம் எடுக்கும் என்ற சூழ்நிலையும் இருப்பதால் 6ஜி மூலம் பெரிய லாபம் பார்க்கலாம் என்றி இருந்த டெலிகாம் நிறுவனங்கள் தற்போது கடுப்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், நாடு முழுவதும் 5ஜி சேவைகளை வழங்கும் முயற்சியில் ஜியோ நிறுவனமும், முதலில் சில இடங்களில் ஏர்டெல் நிறுவனமும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதே போல, மொபைல் சாதனங்களும் 5ஜி சேவைகளுடன் புதிதாக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. உண்மையிலேயே மக்கள் 5ஜி சேவையை பயன்படுத்த மாட்டார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது!

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: 5G technology, Tamil Nadu