கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்த நேரத்தில் உலக அளவில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. பெருநிறுவனங்களில் வெறும் பத்து விழுக்காடாக இருந்த Work From Home இப்போது கட்டாய நடைமுறைகளில் ஒன்றாகிவிட்டது. வெறும் 20 முதல் 30 விழுக்காடாக இருந்த ஆன்லைன் ஷாப்பிங் இப்போது 60 முதல் 70 விழுக்காடு வரை வளர்ச்சியடைந்து விட்டது. பொழுது போக்கு அம்சத்தை பொருத்தவரை OTT தளங்களின் பயன்பாடு அபரிமித வளர்ச்சியடைந்து விட்டது.
OTT தளங்களை ரசிகர்கள் பெருமளவில் விரும்புவதால் அதன் எண்ணிக்கையும் இந்தியாவில் பெருகிவிட்டது. குறிப்பாக அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், ஆஹா, ஜீ5 உள்ளிட்ட OTT தளங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக உள்ளன. குறிப்பிட்ட அளவு சந்தா செலுத்தி இந்த OTT தளங்களில் தங்களுக்கு பிடித்த திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரீஸ்கள் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.
OTT தளங்களின் வளர்ச்சியால் பெரிய பல முக்கியமான திரைப்படங்கள் OTT வெளியாகின்றன. இதற்கெல்லாம் குறிப்பிட்ட அளவு பணம் செலவாகும். ஆனால் பணம் செலவழிக்காமல் OTT தளங்களில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வெப் சீரீஸ்களை கண்டு மகிழலாம். அதற்கான வெப்சைட்கள் எவை என்பது குறித்து தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
ரோகு (Roku) : யூ-ட்யூபைப் போலவே இந்த ரோகு தளத்திற்கும் லாக் இன் (Log in) செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
ரோகு செயலியை உங்கள் டிவைசில் பதிவிறக்கம் செய்து விட்டால் போதும். நெட்ஃப்லிக்ஸ்ஸில் இருக்கும் டாப் ரேட்டட் திரைப்படங்கள் உள்ளிட் அனைத்தையும் பார்க்கலாம். இலவசம் என்பதற்காக தரம் எல்லாம் குறையாது. நல்ல குவாலிட்டியில் பார்க்க முடியும் . ஒரே தொல்லை விளம்பரம். அடிக்கடி விளம்பரங்கள் பாப் அப் ஆகும் அதை மட்டும் பொருத்துக்கொள்ள வேண்டும்.
உடு (Vudu): உலக அளவில் பிரபலமானது இந்த OTT தளம். இதில் திரையிடப்படும் வீடியோகளின் தரமுமம் நன்றாகவே இருக்கும். லாக் இன் செய்யாமல், சந்தா கட்டாமல் இலவசமாக இந்த தளத்தில் திரைப்படங்களை பார்க்கமுடியும். நாம் இலவசமாக இந்த தளத்தில் திரைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது,சந்தா செலுத்தச் சொல்லி அடிக்கடி நோட்டிபிகேஷன் மட்டும் வரும். வேறு ஒரு தொல்லையும் இருக்காது.
க்ரன்ச்சி ரோல் (Crunchy roll): க்ரன்ச்சி ரோல் என்பது காமிக்ஸ் மற்றும் அனிமேஷன் திரைப்படங்களுக்கு பௌர் பெற்ற OTT தளம். இந்தியாவில் இப்போது அனிமீ பிரியர்கள் பெருகிவிட்டார்கள். அதன் தொடர்ச்சி்யாகத்தான் பிரபல OTT தளமான நெட்பிலிக்ஸ் உள்ளிட்ட சில தளங்களில் கூட, இப்போது புதிதாக அனிமீ கேட்டகிரி சேர்க்கப்பட்டுள்ளது. சந்தா கட்டாமல் பயன்படுத்துகிறோம் என்பதால் அடிக்கடி விளம்பரங்கள் வந்து உங்கள் பொறுமையைச் சோதிக்கும்.
கிராக்கில் (Crackle): கிராக்கில் என்பது திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை மட்டுமின்றித் திரைப்படங்கள் தொடர்பான செய்திகளையும் வெளியிடும் ஒரு தளம். தற்போதைய திரைப்படங்கள் பற்றிய செய்திகள் மட்டுமல்ல அடுத்து வெளியாக உள்ள திரைப்படங்கள் தொடர்பான சுவாரஸ்யமான செய்திகளும் இந்த தளத்தல் கிடைக்கும். மேலும் மூவி அப்டேட்களும் இங்கு கிடைக்கும்.இது சோனி பிக்சர்ஸின் இலவச தளம் என்பதால் சோனி நிறுவனம் வெளியிடும் திரைப்படங்களை இந்த தளத்தில் இலவசமாக காணலாம்.
UPI இல் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா.. கவலை வேண்டாம்.. இதை செய்தால் போதும்
ட்யுபி டிவி (Tubi TV) : உங்களுக்கு பிடித்த அனைத்து வகையான திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள் எல்லாவற்றிற்குமான ஒரு சிறந்த தளம் இது. இந்த தளத்தை இணையதளம், செயலி என்று அனைத்து டிவைஸ்களிலும் பயன்படுத்தலாம். இதிலும் சில விளம்பர குறுக்கீடுகள் இருக்கும். ஆனால், திரைப்படங்கள் பார்ப்பதற்கு தரமான தளம் இது என்பதில் மாற்றமில்லை.
ப்ளூட்டோ டிவி (Pluto TV): இந்த ப்ளூட்டோ டிவி மற்ற தளங்களைப் போல் திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை வெளியிடாமல், தொலைக்காட்சி சேனல்களில் வரும் நிகழ்ச்சிகளை அப்படியே லைவில் வெளியிடும் ஒரு இணையதளமாகும். இது 250-க்கும் மேற்பட்ட சேனல்களில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சியின் எபிஸோட்களை அப்படியே லைவில் ஒளிபரப்புகிறது. உங்கள் விருபத்திற்கேற்ப தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்ப்பது போல் இந்த தளத்தை பயன்படுத்தலாம்..
ஷேர் டிவி (Share TV): ப்ளூட்டோ டிவியைப் போலவே ஷேர் டிவி தளமும், தொலைக்கட்சி நிகழ்ச்சிகளைத் திரையிடும் ஒரு தளம். இந்தத் தளத்தில் இருக்கும் தரமான மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், ஒருவேளை, ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் ஏதாவது ஒரு எபிசோடை வெளியிட முடியாத பட்சத்தில் அதை எங்கு இலவசமாகப் பார்க்கலாம் என்பதற்கான லிங்க் அந்தத் தளத்தில் கிடைக்கும். அந்த லிங்க்கை பயன்படுத்தி தடையின்றி நீங்கள் உங்கள் விருப்ப நிகழ்ச்சிகளை பார்த்துக்கொள்ளலாம்.
சுமோ (XUMO): இந்தத் தளத்தில் சுமார் 190 சேனல்களில் வரும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். இதற்காக லாக் இன் செய்யத் தேவையில்லை. மற்ற தளங்களைவிட இந்தத் தளத்தில் இருக்கும் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இதில் விளம்பரங்கள் வந்து உங்களைத் தொல்லை செய்யாது.
யூட்யூப் (Youtube): கடைசியாக இருப்பது நம் யூ-டியூப் தான். இந்த தளத்தை கிட்டத்தட்ட முதல் OTT தளம் என்றாலும் தவறில்லை. அதுாடு இந்த தளத்தைப் பற்றி நிறையச் சொல்லத் தேவையில்லை. யூட்யூப் மூலம் தனிநபர்கள், தனியார் சேனல்கள் வெளியிடும் வீடியோக்களைத் தாண்டி ஏராளமான திரைப்படங்களையும் பார்க்க முடியும். இது உலகளாவிய தளம் என்பதால் அனைத்து மொழிகளின் திரைப்படங்கள், வெப்சீரிஸ் ஆகியவையும் இங்குக் கிடைக்கும். அதைவிட இன்னொரு முக்கியமான வசதி… பெரிய நிறுவனங்கள் என்றில்லை.. நீங்களும் நானும் கூட ஒரு சேனல் தொடங்கி நமது வீடியோக்களையும் இந்த தளத்தில் வெளியிட முடியும். நமது வீடியேக்களுக்கு அதிக பார்வையாளர்கள் வருகிறார்கள் என்றால் நமக்கு வருமானத்தையும் தருகிறது யூ-டியூப் .
2 ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் ஒரே வாட்ஸ்அப்.. சூப்பர் அப்டேட் அறிவிப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Movies, OTT Release