ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

நாளை மறுநாள் நிகழும் சந்திர கிரகணம் : இந்தியாவில் பார்க்கமுடியுமா?

நாளை மறுநாள் நிகழும் சந்திர கிரகணம் : இந்தியாவில் பார்க்கமுடியுமா?

முழு சந்திர கிரகணம்

முழு சந்திர கிரகணம்

அடுத்த முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்று நிகழும். இருப்பினும், ஒரு பகுதி சந்திர கிரகணம் அடுத்த அக்டோபர் 2023 இல் நிகழும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

கடந்த அக்டோபர் 25 அன்று நிகழ்ந்த பகுதி சூரிய கிரகத்தை அடுத்து நவம்பர் 8 அன்று முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது.

பூமியின் நிழலில் முழு நிலவு மறந்து விலகும் நிகழ்வு தான் முழு சந்திர கிரகணம் எனப்படுகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரு நேர்கோட்டில் சீரமைக்கும்போது சந்திர கிரகணம் நிகழும். கிட்டத்தட்ட 91.9 % சந்திரன் பூமியின் நிழலில் ஒளிந்துகொள்வதால் சூரியனின் நேரடி ஒளி அதன் மீது படைத்து.  இதனால் நிலவு தன் ஒளியை இழக்கிறது.

​​முழு சந்திரனும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் விழுவது   அம்ப்ரா என்று அழைக்கப்படுகிறது. அம்ப்ராவிற்குள் சந்திரன் இருக்கும்போது, ​​அது சிவப்பு நிறத்தைப் பெற்று ரத்த-சிவப்பு தோற்றத்தை காணும் அறிய வாய்ப்பைத் தருகிறது.

இரத்த-சிவப்பு நிலவு :

"ஒளி அலைகளாகப் பயணிக்கிறது மற்றும் ஒளியின் வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு இயற்பியல் பண்புகளைக் கொண்டுள்ளன. நீல ஒளியானது குறுகிய அலைநீளம் கொண்டது மற்றும் நீண்ட அலைநீளம் கொண்ட சிவப்பு ஒளியை விட பூமியின் வளிமண்டலத்தில் உள்ள துகள்களால் எளிதில் சிதறடிக்கப்படுகிறது," என்கிறது நாசா.

சந்திர கிரகணத்தின் போது, ​​சந்திரனை அடையும் ஒரே சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்கிறது. பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்ட சிவப்பு நிறம் நிலவில் பட்டு ஒளிர்வதால் நிலவு சிவப்பாக தெரிகிறது.

கிரகணத்தின் போது பூமியின் நிழலை நிலவில் பதிக்கும் நிலைகளை மூன்று கட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது:

அம்ப்ரா-இது இருண்ட, மையப் பகுதியைக் குறிக்கும்

பெனும்ப்ரா - எனப்படும் வெளிப்புற பகுதி மற்றும்

அனப்பிரா - அம்ப்ராவுக்கு அப்பால் உள்ள நிழலாடிய பகுதி.

2041க்குள் "நிகர பூஜ்ஜிய கார்பன்" சுற்றுலாத் தலமாக மாறும் மதுரா-பிருந்தாவனம்!

அடுத்த முழு சந்திர கிரகணம் 2025 இல்…

2025 ஆம் ஆண்டு வரை முழு சந்திர கிரகணம் நிகழாது என்பதால் நவம்பர் 8 சந்திர கிரகணம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அடுத்த முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்று நிகழும். இருப்பினும், ஒரு பகுதி சந்திர கிரகணம் அடுத்த அக்டோபர் 2023 இல் நிகழும்.

முழு சந்திர கிரகணம் எங்கு தெரியும்?

வட/கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பகுதி, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் இந்த கிரகணம் தெரியும்.

இந்தியாவின் பெரும்பகுதியில் கிரகணம் தெரியாது என்றாலும்,  கொல்கத்தா போன்ற கிழக்கு பகுதிகளில் மட்டுமே இதன் இறுதி நிலைக்களைக் காணலாம். கொல்கத்தாவில் சந்திரன், கிழக்கு அடிவானத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு உதயமாகும் என்று கணக்கிடப்படுகிறது. மேகமூட்டம் இல்லாமல் இருந்து வானத்தின் வெளிச்சம் குறைந்தால் 5.11 மணி வரை நிகழும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்புள்ளது. சந்திர கிரகணம் முடியும் பிற்பகுதியை இந்தியாவின் கிழக்கு பகுதி மக்கள் காணமுடியும் .

நாசாவின் கூற்றுப்படி, நவம்பர் 8 அன்று, ஒரு பகுதி சந்திர கிரகணம் அதிகாலை 4:44 EST (2:14pm IST) மணிக்கு நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளட் மூன் என்றும் அழைக்கப்படும் முழு கிரகண நிலை,  சுமார் ஒரு மணி நேரம் கழித்து 05:17 am EST (2:47pm IST) மணிக்கு நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. IST மாலை 4:29 மணிக்கு கிரகணம் உச்சத்தில் இருக்கும் மற்றும் காலை 6:42 EST (4:12pm IST) மணிக்கு முடிவடையும். இந்திய பகுதிக்கு அது பகலாக இருப்பதால்தான் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Eclipse, India, Lunar eclipse, NASA