’கால் ஆஃப் ட்யூட்டி’ மொபைல் டோர்னமெண்ட்.. வெல்பவர்களுக்கு ரூ.7 லட்சத்துக்கான பரிசுப் பொருட்கள்..

’கால் ஆஃப் ட்யூட்டி’ மொபைல் டோர்னமெண்ட்.. வெல்பவர்களுக்கு ரூ.7 லட்சத்துக்கான பரிசுப் பொருட்கள்..

’கால் ஆஃப் ட்யூட்டி’ டோர்னமெண்டின் பிரமாண்டமான இறுதிப் போட்டி டிசம்பர் 28ம் தேதி நடைபெறவுள்ளது.

  • Share this:
தெற்காசியாவின் முன்னணி ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களில் ஒன்றான நோட்வின் (NODWIN) கேமிங் தனது முதல் கால் ஆஃப் ட்யூட்டி டோர்னமெண்டை அறிவித்துள்ளது. இது கால் ஆஃப் ட்யூட்டி மொபைல் இந்தியா சேலஞ்ச் 2020 என்று அழைக்கப்படும் ஒரு மொபைல் போட்டியாகும். இந்தப் போட்டிகளுக்கான முன்பதிவுகள் நவம்பர் 20ம் தேதி முதல் ஆரம்பமானது. மேலும், இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் சுமார் ரூ.7,00,000-க்கும் அதிகமான பரிசு பொருட்களை அறிவித்துள்ளனர்.

நோட்வின் யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளில் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கால் ஆஃப் ட்யூட்டி மொபைல் இந்தியா சேலஞ்ச் மூலம், விளையாட்டுக்கான ஒரு வலுவான வெளியை உருவாக்குவதை நோட்வின் கேமிங் நோக்கமாகக் கொண்டுள்ளது எனக் கூறியுள்ளது. விளையாட்டாளர்கள் தங்களின் பெயரை நிலைநிறுத்தும் ஒரு தளமாக இந்தப் போட்டி செயல்படும் என்று நோட்வின் எம்.டி. மற்றும் இணை நிறுவனர் அக்ஷத் ரத்தீ கூறியுள்ளார்.

Also read: ஆன்லைன் கேம்கள் விளையாடுவதிலும் நன்மைகள் உள்ளன... என்னென்ன தெரியுமா..?

இதில் எல்லோரும் பதிவுசெய்து பங்கேற்க முடியும். 5v5 போட்டிக்கு மொத்தம் 4 கோப்பைகள் வெற்றிபெறவேண்டும், அத்தோடு பேட்டில் ராயல் மோட் வெற்றிபெறவேண்டும். வெல்பவர்களுக்கு மொத்தம் 6,48,000 ரூபாய்க்கான பரிசுப் பொருட்கள் காத்திருக்கிறது. இரண்டு முறைகளுக்கான கோப்பைகளையும் வென்றவர்கள் டிசம்பர் 28ம் தேதி நடைபெறவிருக்கும் பிரமாண்டமான இறுதிப் போட்டிக்குச் செல்வார்கள். கால் ஆஃப் டூட்டியில் விளையாட ஆர்வமா? அப்படியானால் மொபைல் விளையாட்டாளர்கள் நோட்வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் போட்டிகளுக்குப் முன்பதிவு செய்யலாம்.

இந்தியாவில் PUBG தடைக்குப் பிறகு அனைவரும் அதிமாக எதிர்பார்த்த கால் ஆஃப் ட்யூட்டி கேம் அக்டோபர் மாதம் முதல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களில் பயன்பாட்டிற்கு வந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் அதன் பீட்டா வெர்ஷனை இந்தியாவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்க்கது. மேலும் கால் ஆஃப் ட்யூட்டி கேமின் பீட்டா வெர்ஷன், குறைந்த அளவிலான பயனர்களுக்கு மட்டுமே முதற்கட்டமாக வெளியிடப்பட்டது. பின்பு ஆக்டோபர் 1ம் தேதி முதல் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கும் இந்த கேம் பயன்படுத்தக் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், PUBG மொபைல் என்பது இந்திய விளையாட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விளையாட்டாக PUBG Mobile India என்ற புதிய பெயரில் வருகிறது. இந்திய விளையாட்டாளர்களுக்காக PUBG மொபைல் இந்தியா எப்போது தொடங்கப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் எப்போது வேண்டுமானாலும் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: