இந்தியாவில் ’தகவல் சேமிப்பு மையம்’ அமைக்க டிக்டாக் முடிவு!

நாடு முழுவதும் 10 கோடி டிக் டாக் பயன்பாட்டாளர்களும், 5 கோடி ஹெலோ(helo) பயன்பாட்டாளர்களும் உள்ளதாகவும், அவர்களை பற்றிய தகவல்களை சேமித்து வைப்பதற்காக, இந்தியாவில் "டேட்டா சேமிப்பு" மையம் அமைக்கப்படும் என

Web Desk | news18
Updated: July 22, 2019, 9:36 PM IST
இந்தியாவில் ’தகவல் சேமிப்பு மையம்’ அமைக்க டிக்டாக் முடிவு!
டிக் - டாக்
Web Desk | news18
Updated: July 22, 2019, 9:36 PM IST
டிக்டாக் செயலியை பயன்படுத்தும் இந்தியர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தியர்களின் தகவல்களை இந்தியாவிலேயே சேமிக்க  "டேட்டா சேமிப்பு" மையத்தை நிறுவ உள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய காலங்களில்,  பிரதான மக்களின் முக்கிய பொழுதுபோக்காக  டிக்டாக் அமைந்துள்ளது.  டிக்டாக் செயலியை பயன்படுத்தும் இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டு, சீன நிறுவனங்களுக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதுதொடர்பாக, பல்வேறு கட்சிகள், அமைச்சர்கள் அண்மையில் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.


இதுதொடர்பாக, டிக்டாக் நிறுவனத்தை இயக்கும் முதன்மை நிறுவனமான ’பைட் டான்ஸ்’ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் 10 கோடி டிக் டாக் பயன்பாட்டாளர்களும், 5 கோடி ஹெலோ(helo) பயன்பாட்டாளர்களும் உள்ளதாகவும், அவர்களை பற்றிய தகவல்களை சேமித்து வைப்பதற்காக, இந்தியாவில் "டேட்டா சேமிப்பு" மையம் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், டிக்டாக் பயன்படுத்தும் இந்தியர்களின் தகவல்கள், அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் சேகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also Watch: பிகில் லீக்கானது எப்படி?

Loading...

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...