• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • டிக்டாக் செயலி மீதான தடை நீட்டிப்பை அடுத்து, இந்திய டிக் டாக் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தாய் நிறுவனம் பைட் டான்ஸ் முடிவு..

டிக்டாக் செயலி மீதான தடை நீட்டிப்பை அடுத்து, இந்திய டிக் டாக் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தாய் நிறுவனம் பைட் டான்ஸ் முடிவு..

டிக் டாக்

டிக் டாக்

இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்படும் முன்னர், 200 மில்லியனுக்கும் மேலான ஆக்டிவ் யூசர்களை அது கொண்டிருந்தது

  • Share this:
    டிக் டாக் செயலி மீதான தடையை மத்திய அரசு மேலும் நீட்டித்ததையடுத்து இந்தியாவில் பணிபுரிந்து வரும் டிக் டாக் ஊழியர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் முடிவு செய்துள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதவாக்கில் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவம் ஊருடுவல் முயற்சிகளை மேற்கொண்டது. இதனை முறியடிக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். சீன ராணுவத்தினரின் ஊடுருவல் முயற்சியை தடுக்க முற்பட்ட போது கைகளாலும், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களாலும் சீன ராணுவத்தினர் தாக்கினர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    லடாக்கில் சீன ராணுவத்தினர் அத்துமீறலை அடுத்து சீனா மீதான பிடியை மத்திய அரசு இறுக்கியது, அதன் ஒரு பகுதியாக தொழில்நுட்ப ரீதியில் சீன மொபைல் செயலிகளால் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன மொபைல் செயலிகளுக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. அதனையடுத்து பப் ஜி உள்ளிட்ட மேலும் 200 செயலிகளுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

    டிக் டாக்


    இதனிடையே சைபர் பாதுகாப்பு தொடர்பாக இந்நிறுவனங்கள் அளித்த பதிலில் திருப்தி இல்லை என்பதால் இச்செயலிகள் மீதான தடை தொடருவதாக மத்திய அரசு கடந்த வாரம் தெரிவித்துள்ளது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மீண்டும் டிக் டாக் செயலியின் செயல்பாடு எப்போது தொடங்கப்படும் என்ற நிச்சயமன்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க இருப்பதாக டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் தனது ஊழியர்களிடம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் செய்தியில், டிக் டாக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது எப்போது என்பது குறித்து அறுதியிட்டு கூற இயலாத சூழல் ஏற்பட்டிருப்பதால் இந்தியாவில் எங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதை தவிர வேறு வழியில்லை. பிஸினஸ் நடைபெறாத சூழலிலும் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்க்களுக்கு 6 மாதங்களுக்கும் மேலாக ஆதரவு அளித்து வந்துள்ளோம். ஆனால் இந்தியாவில் மில்லியன் கணக்கிலான யூசர்களுக்காகவும், நூற்றுக்கணக்கிலான கலைஞர்கள், கதை சொல்பவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்காக மீண்டும் எங்களின் இயக்கத்தை தொடங்குவதை எதிர்நோக்கியுள்ளோம், மிக அவசிய தேவைகளில் உள்ளவர்களை மட்டும் தக்க வைக்க முடிவெடுத்துள்ளோம் என பைட் டான்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

    இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்படும் முன்னர், 200 மில்லியனுக்கும் மேலான ஆக்டிவ் யூசர்கள அது கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: