• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Bynge App: எழுத்தாளர்களின் விறுவிறுப்பான தொடர்களை வாசிப்பதோடு, அவர்களுடன் விவாதிக்கலாம்!

Bynge App: எழுத்தாளர்களின் விறுவிறுப்பான தொடர்களை வாசிப்பதோடு, அவர்களுடன் விவாதிக்கலாம்!

BYNGE   app

BYNGE app

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் Bynge செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளரின் விறுவிறுப்பான தொடர்களை வாசிக்கலாம்.

  • Share this:
    தமிழகத்தில் முதன்முறையாக தொடர்கதைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் செயலி BYNGE. பிரபல எழுத்தாளர்களின் கதைகளை இலவசமாக, உங்கள் மொபைலில் BYNGE APP மூலம் வாசிக்கலாம். தமிழ் நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் புனைவு மற்றும் புனைவல்லாத படைப்புகளை, சிறிய அத்தியாயங்களாக இங்கே படிக்கலாம்.

    சாரு நிவேதிதா, ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், பவா செல்லத்துரை, பா.ராகவன், காஞ்சனா ஜெயதிலகர் போன்ற இன்றைய பல பிரபலங்களின் கதைகள்… கல்கி, நா.பார்த்தசாரதி, லா.ச.ராமாமிர்தம், சாவி, ராஜம் கிருஷ்ணன் கி.வா.ஜகந்நாதன், வல்லிக்கண்ணன், சு.சமுத்திரம் போன்றவர்களின் காலங்கள் தாண்டியும் பேசப்படும் சரித்திரம், சமூகம் மற்றும் காதல் கதைகளையும் தற்போது இலவசமாக நீங்கள் படிக்கலாம். இன்னும் பல பிரபல எழுத்தாளர்களும் இளம் எழுத்தாளர்களும் புதுமுகங்களும் BYNGE செயலியில் இணையப் போகிறார்கள்.

    கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் Bynge செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளரின் விறுவிறுப்பான தொடர்களை வாசிப்பதோடு, அவர்களோடு விவாதிக்கவும் செய்யலாம். த்ரில்லர், காதல், அமானுஷ்யம், சரித்திரம், குடும்பம் என ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான கதைகளை நீங்கள் படிக்கலாம்.

    புத்தகக் காட்சிக்குச் சென்று புத்தகங்கள் வாங்க முடியவில்லை என்று இனி நீங்கள் வருந்த வேண்டாம். BYNGE உங்களுக்கு புக் ஃ பேர் அனுபவத்தை நிச்சயம் தரும்.

    பல தரப்பு வாசகர்கள் வாசிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரானான சாரு நிவேதிதா ''இந்தச் செயலியில் தொடர் படிப்பது ஒரு புத்தகக் கடைக்குள் செல்வதற்கும் ஒரு பெரிய புத்தக விழாவுக்கே செல்வதற்குமான வித்தியாசத்தைத் தருகிறது. ஒரு எழுத்தாளரின் படைப்பைத் தேடிப்போய் படிப்பதை விட எல்லா எழுத்தாளர்களின் படைப்பும் ஒரே இடத்தில் இருந்தால் உங்களுக்கான சாய்ஸ் அதிகமாகிறது,'' என்றார்.

    “ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களை எடுத்துச் செல்வதே எங்கள் நோக்கம். இன்றைய இலக்கியங்கள் நாளையத் திரைப்படங்களாகவோ வெப் சீரியல்களாகவோ மாறும் என்று நம்புகிறோம்,” என்கிறார் நோஷன் பிரஸ்ஸின் இணை இயக்குனர் மற்றும் BYNGE செயலியின் நிர்வாக இயக்குனரான நவீன் வல்சகுமார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: