இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் இளம் பணக்காரராக இணைகிறார்‘BYJU's’ரவீந்திரன்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் விளம்பரதாரராக இடம்பெற்றிருந்த ஓப்போ விலகிய பின்னர் அந்த இடத்தை பைஜூஸ் கைப்பற்றியுள்ளது.

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் இளம் பணக்காரராக இணைகிறார்‘BYJU's’ரவீந்திரன்!
பைஜூஸ் செயலி
  • News18
  • Last Updated: July 30, 2019, 5:36 PM IST
  • Share this:
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் கற்பித்தல் செயலியாக ‘பைஜூஸ்’ உள்ளது. இதனது நிறுவனர் பைஜூ ரவீந்திரன் தற்போது இந்தியாவின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் விளம்பரதாரராக இடம்பெற்றிருந்த ஓப்போ விலகிய பின்னர் அந்த இடத்தை பைஜூஸ் கைப்பற்றியுள்ளது. இந்த மகிழ்ச்சியுடன் தற்போது பைஜூஸ் நிறுவனரின் ‘திங்க் அண்ட் லேர்ன் ப்ரைவேட் லிமிடெட்’ நிறுவனம் நிதிச்சுற்றில் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது.

இத்தகைய நன்மதிப்பு சர்வதேச அளவில் பைஜூஸ் நிறுவனம் கிளை விரிக்கப் பெரிதும் உதவும். பைஜூஸ் செயலியின் தொழில் நிறுவனத்தின் பெயரே ‘திங்க் அண்ட் லேர்ன் ப்ரைவேட் லிமிடெட்’. இந்நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2015-ம் ஆண்டு பைஜூஸ் செயலியாக வெளிவந்தது. பெங்களூருவில் முதன்முதலாக அறிமுகமான இந்தச் செயலி ஏழு ஆண்டுகளில் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டும் நிறுவனமாக உயர்ந்தது.


தகவல்களின் அடிப்படையில், 21 சதவிகித பங்குகளை இந்நிறுவனத்தில் தன்னக்கத்தே கொண்டுள்ள ரவீந்திரன், இந்தியாவின் இளம் பணக்காரராக உயர்ந்துள்ளார். பைஜூஸ் செயலியை சுமார் 35 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 2.4 மில்லியன் பேர் ஆண்டுக்கு 10ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையில் சந்தா செலுத்திப் பயன்பெறுகின்றனர்.

பைஜூஸின் வளர்ச்சி சர்வதேச அளவில் ஃபேஸ்புக், நாஸ்பெர்ஸ் வென்சர்ஸ், டென்செண்ட் ஹோல்டிங்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களின் கவனத்தையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: உணவு டெலிவரி சேவையிலும் கால் பதிக்கத் தயாராகும் அமேசான் இந்தியா!
First published: July 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்