இந்தியாவில் பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்ய உதவும் App-கள்!

மாதிரி படம்

டிஜிட்டல் வாலட்டில் நீங்கள் பெரும் பணத்தை உங்களது வங்கி கணக்கில் மாற்றி கொள்ளும் வரை அதை உங்களால் கையில் பணமாக பெற முடியாது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கிரிப்டோ நாணயத்திற்கு எப்போதும் இரு பக்கங்கள் உள்ளன. இதன் விலைகள் சரிந்தால் மீண்டும் வாங்கலாம், ஏனெனில் மீண்டும்தான் மதிப்பு உயரும் போது லாபகரமானதாக இருக்கும். மற்றொன்று உங்கள் இழப்புகளை குறைத்து அதிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தும். உருவம் இல்லாத டிஜிட்டல் பரிவர்த்தனையை போன்றதே கிரிப்டோ கரன்சி. உதாரணமாக டிஜிட்டல் வாலட்டில் நீங்கள் பெரும் பணத்தை உங்களது வங்கி கணக்கில் மாற்றி கொள்ளும் வரை அதை உங்களால் கையில் பணமாக பெற முடியாது. அதைப் போல தான் இந்த நாணயமும்.

எனினும் இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸி பரிமாற்றங்களை ஆதரிக்க வங்கிகள் விருப்பமின்மையை காட்டும் சூழ்நிலைக்கு மத்தியில் நாம் இருக்கிறோம். தற்போது பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சி விலைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளன. இது தொடர்பாக டெஸ்லா மோட்டார் சிஇஓ எலோன் மஸ்க் ட்வீட் செய்வதையும், நிதி நிறுவனங்கள் மற்றும் கட்டண நிறுவனங்களை கிரிப்டோகரன்ஸிகளில் வர்த்தகம் செய்வதைத் தடுக்கும் சீனாவின் புதிய வழிகாட்டுதல்களும் பயமுறுத்துகிறது. ஆனால் தனிநபர்கள் இந்த புதிய விதிகளின் எல்லைக்குள் இல்லை.

எனினும் தீவிர முதலீட்டாளர்கள் இதை லேசான ஒரு தடுமாற்றமாகவே நினைக்கிறார்கள். இதனால் கிரிப்டோ கரன்ஸி விலைகள் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க கூடும். மேலும் பிட்காயின், எத்தேரியம், லிட்காயின், கார்டானோ, டாக் கோயின், ஷிபா இனு மற்றும் பாலிகோன் உள்ளிட்ட கிரிப்டோகரன்ஸிகளில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் மக்களை எளிதாக முதலீடு செய்ய அனுமதிக்கும் பல App-கள் இந்தியாவில் உள்ளன.

CoinSwitch Kuber, CoinDCX, ZebPay மற்றும் WazirX ஆகியவை இதற்கான பிரபலமான App-கள். CoinDCX Go எனப்படுவது எளிமையான ஒன்றாகும், இது முதலீடு செய்வதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிப்டோ நாணயங்களை பட்டியலிடுகிறது. கிரிப்டோ வர்த்தக App-களில் பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலில் அனுப்பப்படும் தனித்துவமான OTP களுடன் இரட்டை அங்கீகாரத்தை அமைக்க CoinDCX App- உங்களை அனுமதிக்கிறது. CoinSwitch Kuber App எந்த தொலைபேசியிலிருந்தும் நீங்கள் உள்நுழையும் ஒவ்வொரு முறையும் மின்னஞ்சலில் அறிவிப்புகளை அனுப்புகிறது.

CoinDCX உங்கள் கணக்கு உள்நுழைந்திருக்கும் தோராயமான இருப்பிடத்தைப் பற்றியும் உங்களுக்குத் தெரிவிக்கும் மெசேஜ்களை அனுப்புகிறது. ஒருவேளை நீங்கள் உங்கள் அக்கவுண்ட்டை பயன்படுத்தவில்லை என்றால், உரிய நடவடிக்கைக்கு அலாரம் மணிகள் ஒலிக்கும். உங்கள் அக்கவுண்டை அமைப்பதற்கான செயல்முறை மேற்கண்ட எல்லா App-களிலும் மிகவும் ஸ்டான்டர்டாக உள்ளது, இது எந்தவொரு வர்த்தகம் மற்றும் பண பரிமாற்றம் தொடர்பான பயன்பாடுகளுக்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறது.

இந்த App-களின் வாலட்டில் பணத்தைச் சேர்த்து உங்கள் வர்த்தகத்தை துவங்கும் முன், நீங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை எண்களை பகிரும் KYC செயல்முறையை முடிக்க வேண்டும். இந்த செயல்முறையை CoinSwitch App விரைவாக நிறைவு செய்தது, CoinDCX சுமார் 24 மணிநேரம் எடுக்கிறது, WazirX சற்று நேரம் எடுக்கிறது. CoinDCX மற்றும் WazirX ஆகியவை சில வரம்புகளுடன், கிரிப்டோ App வாலட்டில் பணத்தைச் சேர்க்கவும், டிஜிட்டல் நாணயத்தை வாங்கவும் யூஸர்களை அனுமதிக்கின்றன. அனைத்து கிரிப்டோகரன்ஸிகளும் வர்த்தகத்திற்கு கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஷிபா இனு கிரிப்டோ நாணயம் CoinSwitch Kuber App-ல் பட்டியலிடப்படவில்லை. ஆனால் CoinDCX அல்லது WazirX-ல் ஷிபா இனு பயன்படுத்தி வர்த்தகம் செய்யலாம். கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கான எந்தவொரு ஒழுங்கு முறையும் வெளிப்படையாக இல்லாத காரணத்தினாலும், இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுடன் இணைந்து பணியாற்ற எந்த வங்கிகளும் இன்னும் முறையான ஆர்வம் காட்டவில்லை. வர்த்தகத்திற்கான வாலாட்டில் பணத்தைச் சேர்ப்பதற்கான விருப்பங்கள் மிகவும் குறைவாக இருப்பதற்கான காரணம் இது தான். அடிப்படையில் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட App-ன் வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுவதற்கு லிமிட் செய்யப்பட்டிருக்கிறீர்கள்.

கிரிப்டோ கரன்ஸி வாங்க அந்த பணம் உங்கள் சேர்க்கப்படுகிறது. கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்துவதற்கான விருப்பமும் இல்லை, மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள், பின்னர் அந்த பணம் கிரிப்டோகரன்சி வாங்க உங்கள் பணப்பையில் சேர்க்கப்படும். கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்துவதற்கான விருப்பமும் இல்லை. CoinDCX பணம் சேர்க்க ஒரு விருப்பமாக MobiKwik மொபைல் வாலட் ஆதரிக்கிறது. மேலும் பிரபலமான 3 App-களில் எதுவும் Paytm, PhonePe அல்லது Google Pay உள்ளிட்ட பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் வாலட்டை ஆதரிக்கவில்லை.

Also read... நிதி பற்றாக்குறையா? இந்த ஆப்-ஐ பயன்படுத்தி PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணத்தை ஈசியாக பெறலாம்!

சில நாட்களுக்கு முன்பு, WazirX App தனது அனைத்து யூஸர்களுக்கும் ஒரு தகவலை அனுப்பியது. அதில் வங்கி பரிமாற்றங்கள் (bank transfers) இனி ஒரு விருப்பமாக கிடைக்காது என்று கூறப்பட்டிருந்தது. ஏனெனில் அவர்களின் App வாலட்டில் பணத்தைச் சேர்ப்பதற்காக அவர்களின் Paytm வங்கி கணக்கு இனி வங்கி பரிமாற்றங்களை பெறாது. எனவே இப்போது WazirX App மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் செய்வதற்கான விருப்பம் P2P முறையாகும். CoinSwitch-ல் வங்கி பரிமாற்றங்கள் பெரும்பாலும் கிடைக்காது. இதை அந்த App தனது முகப்பு திரையிலேயே ஒரு பேனராக தெளிவாகக் காண்பிக்கும். இது அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள சிக்கல்களைக் குறிப்பிடுகிறது.

CoinSwitch ஒரு பேடிஎம் வங்கி கணக்கையும் பயன்படுத்துகிறது. சமீபத்திய நாட்களில், ZebPay மற்றும் CoinSwitch ஆகியோர் தங்கள் கணக்குகளுக்கு Paytm வங்கியின் வரையறுக்கப்பட்ட அல்லது சப்போர்ட் முடிந்ததை பதிவு செய்துள்ளனர். ரியல் டைம் பேமென்ட் சிஸ்டமை இயக்கும் (UPI real-time payments system) நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை தடை செய்ய மறுத்துவிட்டது. அதற்கு பதில் கிரிப்டோ கரன்ஸிகளை உள்ளடக்கிய பரிவர்த்தனைகள் தொடர்பாக தங்கள் சொந்த வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு வங்கிகளை கேட்டு கொண்டுள்ளது.

கிரிப்டோ கரன்ஸிகளை தடைசெய்யும் 2018 விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தியதிலிருந்து ரிசர்வ் வங்கி எந்த வழிகாட்டுதல்களையும் வெளியிடவில்லை. ஆண்டின் தொடக்கத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கிரிப்டோவில் மிகவும் அளவீடு செய்யப்பட்ட அணுகுமுறை இருக்கும்” என்று தெளிவுபடுத்தினார். உலகளாவிய கிரிப்டோ பரிமாற்றம் பாக்ஸ்ஃபுல் எண்களின் படி, டிசம்பர் 2020 நிலவரப்படி, இந்தியா ஆசியாவின் இரண்டாவது பெரிய பிட்காயின் சந்தையாகும். அமெரிக்கா, நைஜீரியா, சீனா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பின்னால் உலகின் ஆறாவது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: