• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஜியோ, ஏர்டெல், BSNL - ரூ.399 விலையில் பெஸ்ட் பிராண்ட்பேன்ட் சேவைகள்!

ஜியோ, ஏர்டெல், BSNL - ரூ.399 விலையில் பெஸ்ட் பிராண்ட்பேன்ட் சேவைகள்!

மாதிரி படம்

மாதிரி படம்

ஆன்லைன் வழியாக குழந்தைகள் கல்வி கற்பது முதல் நெட்பிளிக்ஸ் பார்ப்பது வரை என மொபைல் டேட்டாவை பயன்படுத்துவது சாத்தியமில்லாதது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவிட் வைரஸ் இந்தியாவில் உச்சத்தை தொட்டிருப்பதால் வீட்டில் இருந்து வேலை செய்வது மேலும் சில காலங்கள் நீடிக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. இதனால், பிராண்ட்பேன்ட் சேவைகளை உபயோகப்படுத்துவதும் தவிர்க்க முடியாத அத்தியாவசிய தேவையாக மாறவிட்டது. ஆன்லைன் வழியாக குழந்தைகள் கல்வி கற்பது முதல் நெட்பிளிக்ஸ் பார்ப்பது வரை என மொபைல் டேட்டாவை பயன்படுத்துவது சாத்தியமில்லாதது. உங்களுக்கான வேகம் பிராண்ட்பேன்ட் சேவைகளில் அதிகம் கிடைக்கும். மேலும், குடியிருப்புகள் அதிகம் இருந்தால் மொபைல் நெட்வொர்கின் வேகம் மிகவும் குறைவாக இருக்கும்.

இவற்றுக்கு பிராண்ட்பேன்ட் சேவைகள் மட்டுமே தீர்வாக இருக்கும் என்பதால் பலரும் அதனை தேர்தெடுக்க தொடங்கியிருக்கின்றனர். ஜியோ பைபர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், ஏடிசி பிராண்ட்பேன்ட், பி.எஸ்.என்.எல், டாடா ஸ்கை, எக்ஸைட்டல் (Excitel) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் 500 ரூபாய்க்கும் குறைவாக பிரண்ட் பேன்ட் சேவைகளை வழங்கி வருகின்றன. ஆனால் அவற்றில் எது சரியாக இருக்கும் என பலருக்கும் குழப்பமாக இருப்பதால், பிராண்ட் பேன்ட் நிறுவனங்களின் சேவை மற்றும் அதற்கான விலைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ பைபர் நிறுவனம் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் மிகக் குறைவான விலையில் அதிக சலுகைகளை வழங்குகிறது. 399 ரூபாய் ஜியோ பைபர் பிராண்ட்பேன்ட் சேவையை தேர்தெடுத்தால் 30 Mbps வேகத்தில் அப்லோடு மற்றும் டவுன்லோடுகளை மேற்கொள்ளலாம். வீட்டு போன்கள் இருந்தால், அவற்றுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களை இந்தியா முழுவதும் வழங்குகிறது. அன்லிமிட்டெட் டேட்டா ப்ளானைக் கொண்டுள்ள இந்த திட்டத்தில் மாதம் முழுவதும் 3300 ஜிபி -களை FUP பாலிசி முறைப்படி வழங்குகிறது. அதற்கும் மேலாக டேட்டாவின் வேகம் குறைக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் 499 ரூபாய் விலையில் ஒரு மாதத்துக்கு 40 Mbps வேகத்தில் அப்லோடு மற்றும் டவுன்லோடுகளை மேற்கொள்ளலாம்.

Also read... நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபில் கடும் சரிவு - முதலீட்டாளர்கள் கவலை!

FUP பாலிசி முறைப்படி 3333 ஜி.பியை கொடுக்கிறது.இந்தியா முழுவதும் வாய்ஸ் கால்கள் இலவசம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் Wynk Music - ஐ இலவசமாக அனுபவிக்கலாம். ரிலையன்ஸ் ஜியோவின் மாதத்துக்கு 699 ரூபாய் திட்டத்தில் 100 Mbps வேகம் வழங்கப்படுகிறது. வீட்டு போன்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்கள் இந்தியா முழுமைக்கும் மேற்கொள்ள முடியும். பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் ஆகிய இரண்டுக்கும் 100 Mbps வேகம் சீராக கொடுக்கப்படுகிறது.

கூடுதலாக எந்த திட்டத்தின் சப்ஸ்கிரிப்சனும் கொடுக்கப்படவில்லை. கூடுதல் சப்ஸ்கிரிப்சன் வேண்டுமென்றால் மாதத்துக்கு 999 ரூபாய் விலையில் 150 Mbps வேகத்தில் கொடுக்கப்படும் பிராண்ட்பேன்ட் திட்டத்தை தேர்தெடுக்கலாம். ஏர்டெல் எக்ஸ்டீரிம் 100 Mbps இணய வேக திட்டம் மாதத்துக்கு 799 ரூபாய் விலையில் கொடுக்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஏர்டெல் எக்ஸ்டீரிம் வீடியோ மற்றும் விங் மியூசிக் சப்ஸ்கிரிப்சன் கூடுதலாக வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்களைப் போன்ற வாடிக்கையாளர்களை கவரும் திட்டங்கள் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் இல்லை. 499 ரூபாய் பி.எஸ்.என்.எல் பைபர் திட்டம் ஒரு மாதம் வேலிடிட்டி ஆகும். 30 Mbps ஸ்பீடில் இணைய சேவை வழங்கப்படுகிறது. ஜியோவின் பேஸிக் மாதாந்திர திட்டத்தைவிட கொஞ்சம் அதிக விலையாகும். பி.எஸ்.என்.எல்- நிறுவனத்தின் பைபர் வேல்யூ மாதத்துக்கு 799 ரூபாய் விலையில் 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் இந்த சேவை இல்லை என்றாலும், பெரும்பாலான முக்கிய நகரங்களில் நடைமுறையில் உள்ளது. MTNL பிராண்ட்பேன்ட் சேவை மும்பை மற்றும் டெல்லி நகரங்களில் வழங்கப்படுகிறது. FTH-777 பிளான் மாதத்துக்கு 777 ரூபாய் விலையில் 100mbps வேகத்தில் 800 ஜிபி கொடுக்கப்படுகிறது.

டாடா ஸ்கை பிராண்ட்பேன்ட் சேவை 50 Mbps வேகத்தில் 3 மாதம், 6 மாதம் மற்றும் 12 மாத வேலிடிட்டியில் pay in advance பிளானில் கொடுக்கப்படுகிறது. மற்ற திட்டங்கள் 100 mbps வேகத்தில் கொடுக்கப்படுகின்றன. அதாவது, ரூ.1797 விலையில் 3 மாதத்துக்கும், 3300 ரூபாய் விலையில் 6 மாதத்துக்கும், 6000 ரூபாய் விலையில் 12 மாதத்துக்கும் சேவைகள் வழக்கப்படுகின்றன. 599, 550, 500 ரூபாய் விலையில் மாத வேலிடிட்டியிலும் திட்டங்கள் உள்ளன. லேண்ட்லைன் மொபைல் வசதியுடன் 100 mbps வேகத்தில் 950 ரூபாய் மாதாந்திர திட்டமும், லேண்ட் லைன் போன் வசதி இல்லாமல் 850 ரூபாய் மாதாந்திர திட்டமும் TATA SKY கொடுக்கிறது. சந்தையில் இருக்கும் மற்ற பிராண்ட்பேன்ட் சேவைகளைக் காட்டிலும் அதிகபட்ச விலையாக இருக்கிறது.

டெல்லி என்.சி ஆர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் இருக்கும் Excitel பிராண்ட்பேன்ட் சேவை முன்கூட்டியே பணம் செலுத்தினால் 100 mbps வேகத்தில் அன்லிமிட்டெட் டேட்டா கொடுக்கிறது. 699 ரூபாய் மதிப்புள்ள திட்டத்துக்கு முன்கூட்டியே 3 மாத சந்தா தொகை செலுத்தினால் அந்த திட்டம் 565 ரூபாய்க்கு கொடுக்கப்படும். 4 மாதத்துக்கு முன்கூட்டியே செலுத்தினால் 508 ரூபாய்க்கும், ஒரு வருடத்துக்கு செலுத்தினால் 399 ரூபாய்க்கும் அந்த திட்டத்தை Excitel பிராண்ட்பேன்ட் சேவை கொடுக்கிறது. ACT Broadband சேவை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே உள்ளது. 710 ரூபாய் விலையில் 50Mbps இணைய வேகத்தில் மாதம் FUP of 3300GB டேட்டாவை வழங்குகிறது. சில நகரங்களில் 549 ரூபாய்க்கு 40Mbps வேகத்தில் இணைய சேவை கொடுக்கும் ACT, 799 ரூபாய் விலையில் மாதத்துக்கு 150Mbps இணைய வேகத்தில் பிராண்பேன்ட் லைனையும் கொடுக்கிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: