இந்த பண்டிகை காலத்தில் ஆப்பிள் மொபைல் போனை வாங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறீர்களா? அப்பொழுது நிச்சயம் இந்த செய்தி உங்களுக்கு தான்.
பண்டிகை காலங்கள் வரிசையாக வரவிருக்கிறது. வழக்கமான நேரத்தில் இருப்பது போல் அல்லாமல், பண்டிகை காலங்களில் எல்லா பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கும். கொரோனா பெருந்தொற்றில் இருந்து வரும் இந்நேரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பியுள்ளது. இந்த சூழலில் அமேசான், பிளிப்கார்ட், மீசோ போன்ற வணிக நிறுவனங்கள் தற்போதே பண்டிகை கால சலுகை என்று அறிவித்து விற்பனையை நடத்தி வருகின்றன.
தீபாவளியை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனமும் தற்போது பல்வேறு சலுகைகளை வரிசையாக அறிவித்து வருகிறது. நீங்கள் ஐபோன் 12 அல்லது ஐபோன் 12 மினி வாங்கினால் உங்களுக்கு ஒரு ஜோடி ஆப்பிள் ஏர்பாட்ஸ் இலவசமாக பெறலாம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சலுகை ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவோருக்கு மட்டும் பொருந்தும். மேலும் இது அக்டோபர் 7ம் தேதி துவங்குகிறது.
Also read... ட்விட்டர் வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி? - ஈஸியான டிப்ஸ்!
ஐபோன் 8 அல்லது வேறு எந்த மாடல் மொபைல் வாங்கினாலும்
ரூ .9000 முதல் ரூ. 46,120 வரை தள்ளுபடி பெறலாம். புதிய ஐபோனை வாங்கும் போது செக் அவுட் நேரத்தில் வாங்கி கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் இலவச ஏர்பாட்ஸ்களை வழக்கமான கம்பி சார்ஜிங் கேஸுடன் பெறலாம். வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் கொண்ட ஏர்பாட்ஸ்களை கூடுதலாக 4000 ரூபாய்க்கு வாங்கலாம். இதன் விலை ரூ .18,900 என பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் ஏர்பாட்ஸ் புரோ ரூ. 10,000 கூடுதலாக செலுத்தி வாங்கலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
ஐபோன் 13 வாங்கினால் இலவச ஏர்பாட்ஸ்களைப் பெற முடியுமா?
இல்லை. இந்த சலுகை பழைய ஐபோன் 12, 12 மினி மாடல்களுக்கு மட்டுமே.
இலவச ஏர்பாட்ஸ்களைத் தவிர வேறு என்ன ஆபர் ஆப்பிள் நிறுவனம் வழங்குகிறது?
தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாடல்களுக்கு மட்டும் சலுகைகளை ஆப்பிள் வழங்குகிறது. ஏஏர்பாட்ஸ்களில் ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஈமோஜிகள் அல்லது டெக்ஸ்ட் (Text) சேவைகளைப் பெறலாம். முன்னதாக ஆப்பிள் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மேக்புக், ஐமேக் மற்றும் ஐபேட் மாடல்களை வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்கியது. ஆப்பிளின் இந்த பொருட்கள் வழக்கம் போல், ஆப்பிளின் கிஃப்ட் பேக்காக அளிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.