Home /News /technology /

Xiaomi ஸ்மார்ட் டிவி முதல் செல்போன் வரை அதிரடி விலை குறைப்பு - ஆஃபரில் வாங்குங்கள்!

Xiaomi ஸ்மார்ட் டிவி முதல் செல்போன் வரை அதிரடி விலை குறைப்பு - ஆஃபரில் வாங்குங்கள்!

xiaomi

xiaomi

Xiaomi 8th anniversary sale | Xiaomi india தனது 8 வது ஆண்டு விழாவை வாடிக்கையாளர்களுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக, Xiaomi மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவிகள் உட்பட அதன் தயாரிப்புகளின் வரம்பில் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது.

மேலும் படிக்கவும் ...
    Xiaomi நிறுவனம் இந்தியாவில் தனது 8வது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில், இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி முதல் செல்போன், லேப்டாப்கள் என அனைத்தும் ஆஃபர் விலையில் கிடைக்க பெறவுள்ளது. இந்த விலை குறைப்பு சலுகையானது ஜூலை 8 முதல் ஜூலை 13 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

    எனவே வாடிக்கையாளர்கள் mi.com தளத்தின் உதவியோடு ஸ்மார்ட் சாதனைங்களைக் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளலாம். மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்களைப்பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 7500 வரை தள்ளுபடி கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் முழு விபரம் குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.

    Mi TV 4A 32 Horizon Edition: சியோமி 32 இன்ச் டிவியானது ரூ. 6,000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.13,999க்கு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

    32 இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி 5 ஏ மாடலின் விலை ரூ. 24,999 ஆக உள்ள நிலையில், சிறப்பு விற்பனையில் இந்த மாடல் டிவியை             ரூ. 14,999க்கு பெற முடியும்.

    ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 எச்டி ரெடி மாடலின் அசல் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 எச்டி ரெடி மாடலை ரூ.13,499-விலையில் வாங்க முடியும்.



    எம்ஐ டிவி 4ஏ Horizon Edition மாடலின் அசல் விலை ரூ.19,999-ஆக உள்ளது. ஆனால் சியோமி அறிவித்த சிறப்பு விற்பனையில் இந்த டிவியை ரூ.15,999-விலையில் வாங்க முடியும்.

    Also Read : 19 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ், அதிநவீன கேமிரா உடன் அறிமுகமான ஜியோமி 12 சிறப்பம்சங்கள்! 

    Redmi Smart TV X Series:

    இந்த டிவியை ரூபாய் 18 ஆயிரம் தள்ளுபடியுடன் ரூ. 24, 999 வாங்கலாம். 32 எச்டி ரெடி திரையை கொண்டுள்ள இந்த டிவியில், Dolby Audio DTS Virtual உடன் 30W ஸ்பீக்கர்கள் உள்ளன. பேட்ச்வால் 4 UI உடன் ஆண்ட்ராய்டு 10ல் டிவி இயங்குகிறது.

    RedmiBook 15 i3:

    ரூ. 21,500 தள்ளுபடியுடன் RedmiBook 15 i3 யை ரூபாய் 30,499க்கு கிடைக்கிறது. RedmiBook 15 i3 ஆனது 1920x1080 பிக்சல்கள் கொண்ட 15.6-இன்ச் FHD திரையைக் கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி storage உள்ளது. சமீபத்திய 11வது ஜெனரல் இன்டெல் டைகர் லேக் கோர் i3ல் இயங்குவதோடு, மல்டி-டச் டிராக்பேடுடன் வருகிறது மற்றும் 10 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது.



    Mi Notebook Ultra:

    ரூ.17,500 தள்ளுபடிக்கு பிறகு ரூ.54,499க்கு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. 3200x2000 பிக்சல்கள் மற்றும் 15.6-இன்ச் Mi Truelife யைக கொண்டுள்ளது. 8GB/16GB of RAM and 512GB of storage வுடன் fingerprint sensor மற்றும் 12 மணி நேர பேட்டரி ஆயுளைக்கொடுக்கிறது.

    Also Read : இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆண்ட்ராய்டு Tablets மற்றும் iPad மாடல்கள்.! 

    Xiaomi 11 Lite NE 5G:

    Xiaomi 11 Lite NE 5G ரூ.13,000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.18,999க்கு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி மெமரி கொண்ட சியோமி 11ஐ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூபாய் 31, 999 ஆக உள்ளது. ஆனால் சியோமி அறிவித்த சிறப்பு விற்பனையில் இந்த போனை ரூ.26, 999 விலையில் வாங்கலாம்.



    அதே போன்று 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் அசல் விலை ரூ. 84,999 ஆக உள்ள நிலையில், சலுகை விற்பனையில் ரூ. 66,999க்கு வாங்கலாம்.

    Also Read : ரூ.20,000 பட்ஜெட்டில் ஒரு தரமான 5ஜி போனை தேடுறீங்களா? 1 இல்ல 9 ஆப்ஷன்ஸ் இருக்கு!

    மேலும் சியோமி 11 ஐ ஹைப்பர் சார்ஜ் ஸ்மார்ட்போனை ரூ. 28, 999க்கு வாங்கலாம். முன்னதாக இதன் விலை ரூ.33,999 ஆக இருந்தது. எனவே இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் உடனே இந்த சலுகை விலை ஆஃபரை பயன்படுத்தி கொள்ள முந்துங்கள்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Offer, Technology, Xiaomi

    அடுத்த செய்தி