Home /News /technology /

பம்பிள் அதன் புதிய முயற்சியுடன் சேஃப்ட்டிக்காக நிற்கிறது.!

பம்பிள் அதன் புதிய முயற்சியுடன் சேஃப்ட்டிக்காக நிற்கிறது.!

Bumble

Bumble

Stand for Safety with Bumble | இந்தியாவில் சென்டர் ஃபார் சோஷியல் ரிசர்ச் (சிஎஸ்ஆர்) மற்றும் ந்யாயா உடன் இணைந்து பம்பிள் ஒரு சேஃப்ட்டி ஹாண்ட்புக் ஐ வெளியிட்டுள்ளது.

  இன்றைய டிஜிட்டல் உலகில் , டேட்டிங் பயன்பாடுகளின் உருவாக்கமும் பிரபலமும் மக்கள் ஆன்லைனில் அர்த்தமுள்ள இணைப்புகளை உருவாக்குவதிலும் புதிய நண்பர்களைக் கண்டறியும் விதத்தையும் மாற்றியுள்ளது. உடல் ரீதியாக தனிமைப்படுத்தலுக்கு மத்தியில் மக்கள் ஆன்லைன் இணைப்புகளை நாடியதால், பண்டமிக் நம் முழு வாழ்க்கையையும் இன்டர்நெட்டிற்கு மாற்றியுள்ளது.


  இருப்பினும், இணையத்தின் அதிகரித்து வரும் பயன்பாட்டினால், பாடி ஷேமிங், கான்செர்ன் ட்ரோலிங் மற்றும் பிற வகையான ஆன்லைன் அபியூஸ் போன்ற சிக்கல்கள், குறிப்பாக பெண்களுக்கு எதிராக, குறிப்பிட்டு சொல்வதானால் பண்டமிக் தொடங்கியதிலிருந்து அதிகரித்து வருகின்றன. இந்த சேஃப்ட்டி கான்செர்ன்ஸுக்கு பதிலளிக்கும் விதமாக, டிஜிட்டல் சேஃப்ட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆன்லைன் ஹேட் மற்றும் அக்ரேஷனை கண்டறிந்து எதிர்த்துப் போராடவும் தனது சமூகத்தை ஆதரிப்பதற்காக 'ஸ்டாண்ட் ஃபார் சேஃப்ட்டி ' பிரச்சாரத்துடன் பம்பிள் திரும்பியுள்ளது.


  இந்தியாவில் பம்பிள் நடத்திய சமீபத்திய நாடு தழுவிய கணக்கெடுப்பில், அதன் கணக்கெடுக்கப்பட்ட யூஸர்ஸ்களில் 50% பேர் ஆன்லைனில் வெறுக்கத்தக்க கன்டென்டை எதிர்கொண்டதாக பரிந்துரைத்தது இதற்கு காரணமாகும். கூடுதலாக, 4 பெண்களில் ஒருவர் தங்கள் உடல் தோற்றத்தை பற்றிய நெகட்டிவ் கமெண்ட்ஸையும் அப்யுஸையும் வாரத்திற்கு ஒரு முறையாவது எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், 48% பேர், ஆன்லைன் ஹேட் மற்றும் புலியிங் ஐ  எதிர்கொள்வது மற்றவர்களை நம்புவதை கடினமாக்குகிறது என்று கூறியுள்ளனர்.


  எனவே, பம்பிள் இன் இந்த விழிப்புணர்வு முயற்சியானது, ஆன்லைன் அபியூஸை கண்டறியவும், தடுக்கவும் மற்றும் எதிர்த்துப் போராடவும் இந்தியாவில் உள்ள அதன் சமூகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பான, இனிமையான மற்றும் இன்க்ளூஸிவ் இணையத்தை உருவாக்க உதவும் பம்பிளின் அர்ப்பணிப்பை 'ஸ்டாண்ட் ஃபார் சேஃப்ட்டி' மேலும் நிரூபிக்கிறது. சென்டர் ஃபார் சோஷியல் ரிசர்ச் (சிஎஸ்ஆர்), ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு மற்றும் ஒரு சுதந்திரமான திறந்த அணுகல் டிஜிட்டல் வளமான ந்யாயா ஆகியவற்றுடன் இணைந்து, பம்பிள், தங்களுடைய சமூகத்தில் டிஜிட்டல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆன்லைன் ஹேட், புலியிங் மற்றும் பாகுபாடுகளை அடையாளம் கண்டறிந்து போராடுவதற்கான  அதிகாரம் அளிக்கவும் ஒன் ஆஃப் எ கையின்ட் சேஃப்ட்டி ஹாண்ட் புக் ஐ வெளியிட்டுள்ளது. ஆன்லைன் ஹேட் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் போது, அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான வழிகள் பற்றிய எளிய, செயல்படக்கூடிய தகவல்களுடன் பொருத்தப்பட்டிருக்கும் இந்த ஹாண்ட்புக் ஐ மக்கள் அணுகலாம்.  "எங்கள் சமூகத்திற்கு  ஆதரவளிப்பதற்கும், ஆன்லைன்  அபியூஸ், பாகுபாடு மற்றும்  ஹராஸ்மெண்டை அடையாளம் கண்டு எதிர்த்துப் போராடுவதற்கும் முக்கியமான தகவல்களை அவர்களுக்கு  வழங்குவதற்காக இந்த ஒன்  ஆஃப் எ கையின்ட் சேஃப்ட்டி  ஹாண்ட் புக்கை உருவாக்க  சென்டர் ஃபார் சோஷியல்  ரிசர்ச் மற்றும் ந்யாயா  ஆகியவற்றுடன் இணைந்திருப்பதில்  நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்'. பம்பிள் கருணை, மரியாதை, இன்க்ளூசிவிட்டி  மற்றும் சமத்துவம் ஆகியவற்றின்  அடிப்படை மதிப்புகளில்  கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும்  முதல் நாளிலிருந்தே பம்பிளின்  மிஷனில் சேஃப்ட்டி ஒரு  மையப்புள்ளியாக உள்ளது. 'எங்களின் ‘ஸ்டாண்ட் ஃபார் சேஃப்ட்டி’ இனிஷியேட்டிவ் ஆனது, அனைத்து உறவுகளும் ஆரோக்கியமாகவும் சமத்துவமாகவும் இருக்கும் உலகத்தை உருவாக்குவதில் எங்களின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை மேலும் நிரூபிக்கிறது'. என பம்பிளின் பப்ளிக் பாலிசியின் எபிஎசி இன் தலைவர் மஹிமா கவுல் கருத்து தெரிவித்தார்.
  இதைத் தொடர்ந்து, சென்டர் ஃபார் சோஷியல் ரிசர்ச் மீடியா அண்ட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் ஜோதி வதேரா கருத்துத் தெரிவித்துள்ளார். குறிப்பாக பெண்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இணையத்தை பாதுகாப்பான மற்றும் அன்பான இடமாக மாற்றுவதற்கான அவர்களின் முயற்சிகளில் பம்பிள் இன் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பம்பளின் சேஃப்டி  ஹாண்ட் புக்கை உருவாக்குவது சரியான திசையில் ஒரு முக்கிய படியாகும், மேலும் இதன் நோக்கம் யூஸர்ஸ்களுக்கு ஏஜென்சியை வழங்குவதும், ஆன்லைன் ஸ்பேசில்  செல்லும்போது அவர்களின் நல்வாழ்வை வலுப்படுத்த சரியான கருவிகளைக் கொண்டு அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதும் ஆகும்.

  ஆன்லைனில் பாதுகாப்பான மற்றும் இன்க்ளூஸிவ் ஸ்பேசை வளர்ப்பதில் பம்பிள் உறுதிபூண்டுள்ளது, மேலும் இந்தியாவின் சமூக கலாச்சார மற்றும் பல மொழியியல் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பல இந்திய பிராந்திய மொழிகளில் அதிகமாக ஸ்டாப் வர்ட்ஸை சேர்ப்பதன் மூலம் அதன் வழிகாட்டுதல்களைப் புதுப்பிக்கும் நோக்கில் செயல்படும். கூடுதலாக, பயன்பாடு பாதுகாப்பில் கவனம் செலுத்தும் அதன் பல தயாரிப்பு அம்சங்களுடன் இந்த ஸ்பேசில் உள்ள மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கிறது. பம்பிளின் சமூக வழிகாட்டுதல்களுக்கு எதிராகச் செல்லும் எந்தவொரு நபரையும் யூஸர்ஸ்  தடுக்கலாம் மற்றும் புகாரளிக்கலாம். கூடுதலாக, அதன் சமூகம் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான டேட்டிங் எக்ஸ்பீரியன்சை பெற உதவும் வகையில் உருவாக்கப்பட்ட பயன்பாட்டிற்குள் உள்ள சேஃப்ட்டி + வெல்பீயிங் ரிசோர்ஸ்  மையத்தை மக்கள் எளிதாக அணுகலாம்.


  பம்பிள் அதன் ஜியோக்ராபிக் - ஸ்பெசிஃபிக் அம்சத்துடன் குறிப்பாக இந்தியாவில் உள்ள பம்பிள் சமூகத்தில் பெண்களின் ப்ரைவேசிக்கான  தேவையில் அதிக கவனம் செலுத்துகிறது. இது ஒரு பெண் தனது பம்பிள் டேட் ப்ரோஃபைலை உருவாக்க தனது பெயரின் முதல் முதலெழுத்தை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கிறது. பின்னர் அந்த பெண் அவள் ரெடி அண்ட் கம்ஃபார்ட்டபிள் ஆக உணரும் போது கனெக்ஷன்சுடன் முழுப் பெயரையும் பகிரலாம். பிரைவேட் டிடெக்டர், கோரப்படாத ந்யூட் பிக்ச்சர்ஸை தானாக கண்டறிந்து மங்கலாக்க ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்சை (எஐ)   பயன்படுத்தும் அம்சம், பம்பிள் யூசர்ஸை ந்யூட் பிக்ச்சர்ஸை  கண்டறிந்து மங்கலாக்க அனுமதிக்கிறது.
  ஒருவரின் தோற்றம், உடல் வடிவம், அளவு அல்லது ஆரோக்கியம் குறித்து கோரப்படாத மற்றும் இழிவான கருத்துகளை வெளிப்படையாகத் தடை செய்த முதல் சோஷியல் நெட்வொர்க்கிங்  பயன்பாடுகளில் பம்பிள் ஒன்றாகும்.


  எனவே, ' 'ஸ்டாண்ட் ஃபார் சேஃப்ட்டி" இனிஷியேட்டிவ் ஆனது, பம்பிள் ஐ இன்னும் பாதுகாப்பானதாகவும் இன்க்ளூஸிவ் ஆகவும்  மாற்றும், அதே நேரத்தில் மற்ற டிஜிட்டல் தளங்களும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்கவும் ஆன்லைன் டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங்கை பாதுகாப்பான இடமாக மாற்றவும் வழி வகுக்கும்.


  Promoted Content 
  Published by:Selvi M
  First published:

  Tags: Dating apps, Online dating app

  அடுத்த செய்தி