• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • மத்திய பட்ஜெட் 2021 எதிரொலியாக ஸ்மார்ட்போன் விலை உயர வாய்ப்பு.. சார்ஜர் தனியாக தான் வாங்க வேண்டும்...!

மத்திய பட்ஜெட் 2021 எதிரொலியாக ஸ்மார்ட்போன் விலை உயர வாய்ப்பு.. சார்ஜர் தனியாக தான் வாங்க வேண்டும்...!

மாதிரி படம்

மாதிரி படம்

உள்ளூர்மயமாக்கல் துறைகளுக்கு அரசாங்கம் ஒரு வலுவான உந்துதலை அளித்திருக்கிறது என கவுண்டர்பாயிண்ட் பிரச்சீர் சிங் ஒப்புக்கொள்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். தொழில்நுட்பம் மற்றும் மின்சாதன கேட்ஜெட்கள் பிரிவில் முக்கிய அறிவிப்பாக, “மொபைல் சார்ஜர் மற்றும் சில மொபைல் போன் பாகங்களுக்கான சுங்க வரி உயர்ந்திருக்கிறது.

மொபைல் போன்களுக்கு தேவைப்படும் சில பாகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு தற்சமயம் சுங்க வரி 2.5 சதவீதமாக மாற்றப்படுகிறது என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஸ்மார்ட்போன்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சார்ஜர் மற்றும் மொபைல் போன் பாகங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரிவிலக்கு ரத்து செய்யப்படுகிறது. 

உள்நாட்டு உற்பத்தி பெருமளவு அதிகரித்து இருக்கிறது. எனவே உள்நாட்டு மதிப்பு கூட்டல் காரணமாக சில பாகங்களுக்கான வரிவிலக்கை ரத்து செய்து 2.5 சதவீதம் வரி வசூலிக்கப்பட இருக்கிறது என அவர் தெரிவித்தார். வரி மாற்றம் காரணமாக இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலை தற்சமயம் இருப்பதை விட மேலும் அதிகமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து பேசிய கவுண்டர் பாயிண்ட் இந்தியாவின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் பிரச்சீர் சிங், ஸ்மார்ட்போன்ளுக்கு குறிப்பிடத்தக்க விலை உயர்வு இருக்கும், ஆனால் இந்த உயர்வு பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு தான் இருக்கும். இந்த நடவடிக்கையின் தாக்கம் ஜிஎஸ்டி அமல் படுத்தப்பட்ட போது நிகழ்ந்த விலை உயர்வை ஒத்ததாக இருக்கும்.  மேலும் ஐடிசியின் நவ்கேந்தர் சிங் குறிப்பிடுகையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் விளைவாக அதிகமான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சார்ஜர் இல்லாமல் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் முடிவை தேர்வு செய்யலாம். 

இந்தியாவில் ஏற்கனவே பல சார்ஜர்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசாங்கத்தின் நடவடிக்கை இந்தத் துறைக்கு ஒரு உந்துதலைத் தரும் என கூறுகிறார். மேலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ .15,000 க்கு மேல் உள்ள ஸ்மார்ட்போன்கள் விலை உயரலாம். 

Also read... Jio, Airtel, Vi நெட்வொர்க்குகளின் மிக குறைந்த விலை டேட்டா பிளான்கள்...!

உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு அதிக அழுத்தம்: 

உள்ளூர்மயமாக்கல் துறைகளுக்கு அரசாங்கம் ஒரு வலுவான உந்துதலை அளித்திருக்கிறது என கவுண்டர்பாயிண்ட் பிரச்சீர் சிங் ஒப்புக்கொள்கிறார். இதுகுறித்து விளக்கிய அவர், "பல உற்பத்தியாளர்கள் ஏற்கனவே தங்கள் தயாரிப்புகளை இந்தியாவில் தயாரிக்கிறார்கள், உதாரணமாக, பல மொபைல் பாகங்கள், கேமரா தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான துணை பாகங்களை தாங்களே தயாரிக்கிறார்கள் அல்லது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். ஆனால் தற்போது அரசாங்கத்தின் நடவடிக்கை அடிப்படையில் உள்ளூர் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே தயாரித்து கொள்ள அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது 

இதனால் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் சந்தை குறுகிய காலத்தில் வெற்றிபெறும் என தோன்றுகிறது, மேலும் மொபைல் போன்களின் உற்பத்தியாளர்கள் மீது குறுகிய கால அடிப்படையில் செலவுகள் அதிகரிப்பதை காணலாம். இது மின் சாதனங்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார். ஆனால் இது ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன்களுக்கான நுகர்வோர் தேவையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று கவுண்டர்பாயிண்ட் சிங் குறிப்பிடுகிறார். மேலும் இந்த நடவடிக்கையின் விளைவாக ஸ்மார்ட்போன்களின் விலை பெயரளவில் உயர்ந்தாலும் நுகர்வோர் தேவை குறையாது என அவர் தெரிவித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: