1 ஜிபி டேட்டா இனி 3.21 ஜிபி..!- சர்ப்ரைஸ் கொடுத்த BSNL

இத்திட்டம் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: January 17, 2019, 2:12 PM IST
1 ஜிபி டேட்டா இனி 3.21 ஜிபி..!- சர்ப்ரைஸ் கொடுத்த BSNL
பி.எஸ்.என்.எல்
Web Desk | news18
Updated: January 17, 2019, 2:12 PM IST
BSNL டெலிகாம் நிறுவனம் 399 ரூபாய்க்கு 74 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கி வந்தது. இந்த ப்ளான் தற்போது அதே விலையில் ஒரு நாளைக்கு 3.21 ஜிபி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் புதிய ஆஃபர் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக BSNL அறிவித்துள்ளது. வழக்கமான ப்ளானில் 1ஜிபி/1 நாள் மட்டும் என்று இருந்துவந்தது. தற்போது, இது 3.21 ஜிபி ஆக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி, 74 நாட்களுக்கான ப்ளான், 399 ரூபாய் என்றே தொடர்கிறது BSNL.

ஆனால், இத்திட்டம் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இந்த 399 ரூபாய் ப்ளான் உடன் ஒரு நாளுக்கு 100 எஸ்.எம்.எஸ்-கள், மற்றும் எல்லையில்லா வாய்ஸ் கால் என வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த 399 ரூபாய் ப்ளானை அறிமுகப்படுத்திய BSNL ஆறு மாத காலத்துக்குப் பின்னர் புதுப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: ஆல் இன் ஆல் அரசியல் | 17-01-2019
First published: January 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...