Home /News /technology /

இந்தியாவில் பிரம்மாண்டமான வைஃபை திட்டம்: PM-WANI உடன் கைகோர்க்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்!

இந்தியாவில் பிரம்மாண்டமான வைஃபை திட்டம்: PM-WANI உடன் கைகோர்க்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்!

 வைஃபை கனெக்ஷன்

வைஃபை கனெக்ஷன்

நகரங்கள், டவுன்கள் ஆகிய இடங்களில் பிஎஸ்என்எல் தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன.

பல்வேறு புதிய அம்சங்களுடன் ஒவ்வொரு நாளும் தொழில் நுட்ப உலகில் இணைய வசதி மேம்பட்டு வருகிறது. தனிப்பட்ட பயன்பாட்டுக்காக பலரும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா திட்டம் முதல் அன்லிமிடட் திட்டம் வரை மொபைல் மற்றும் வைஃபை திட்டங்கள் பயன்படுத்தி வந்தாலும், சில அரசு மற்றும் தனியார் சேவைகள் பொது இடங்களில் இணைய சேவையை இலவசமாக வழங்கி வருகின்றன.

PM-WANI என்ற, பிரதம மந்திரியின் பப்ளிக்- வைஃபை அக்சஸ் நெட்வொர்க் இன்டர்ஃபேஸ் என்பது இந்தியாவில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தடையற்ற வைஃபை அக்சஸ் கிடைக்கும். இந்த மாதத்தின் தொடக்கத்தில், நாட்டில் 100 ரயில் நிலையங்களில் இலவச WiFi சேவை இந்தத் திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, இதனை மேலும் விரிவாக்க, பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பாரத் சன்ச்சார் நிகாம் லிமிடெட், 30,000 WiFi ஹாட்ஸ்பாட்களை PM-WANI உடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை, டெலிகாம் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி, இந்திய ரயில்வே இணைய சேவையும், இதே இன்டர்ஃபேசில் இணையும் திட்டமும் உள்ளது என்று கூறப்பட்டது.

தொலைத்தொடர்புத் தகவல் துறையின் DDG ஆன, திரு. விவேக் நாராயண், பிராட்பேண்ட் இந்தியா ஃபோரம் நிகழ்வில் பேசிய போது, சுற்றுலா, ஸ்மார்ட் சிட்டி போன்ற பல பகுதிகளில் PM-WANI Wi-Fi ஹாட்ஸ்பாட்கள் திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியம் உள்ளது மற்றும் இறுதி-கட்ட கிராமங்களின் இணைப்பும் காணப்படுகிறது என்பதைக் குறிப்பிட்டார்.

வரும் ஜூன் மாதத்தில் பிஎஸ்என்எல் தனது 30,000 ஹாட்ஸ்பாட்களை PM-WANI உடன் மைகிரேட் செய்ய இருக்கிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே இந்திய ரயில்வே 100 ரயில் நிலையங்களை இணைத்துள்ளது. அது மட்டுமின்றி இதில் அனைத்து ஹாட்ஸ்பாட்களும் உள்ளடங்கும். ஏற்கனவே ரயில்வேயில் 17,000 ஹாட்ஸ்பாட்டுகள் இருக்கின்றன. இனி ஒட்டுமொத்த ஹாட்ஸ்பாட்டுமே வரும் ஜூன் மாதம், பிஎம் வாணி திட்டத்துடன் இணைக்கப்படும் என்றும் நிகழ்வில் கூறப்பட்டது.

Also see... இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம் எப்போது.?

அதாவது, ரயில்வேயின் தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அனைத்தும் ஹாட்ஸ்பாட் இணைப்புகளும் இந்த PM-WANI இன்டெர்ஃபேஸ் திட்டத்தின் கீழ் தான் இயங்கும் என்று கூறப்படுகிறது.

நகரங்கள், டவுன்கள் ஆகிய இடங்களில் பிஎஸ்என்எல் தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த திட்டத்தில் BSNL மைக்ரேட் ஆவது மூலமாக, ரயில் இணைய நெட்வொர்க்கில் தொலைதூர கிராமங்களுக்கும் கிடைக்கும்.

தனியார் மொபைல் டேட்டா சேவைகள் தவிர்த்து, நாடு முழுவதும் பிராட்பேண்ட் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில், எந்த விதமான கட்டணம் இன்றி, டேட்டா அலுவலகங்கள் மற்றும் கிரானா ஸ்டோர்ஸ் மூலமாக பொது வைஃபை நெட்வொர்க்குகள் சேவையை அமைக்க கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: BSNL, Pm, Wifi

அடுத்த செய்தி