ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

5G சேவையை தொடங்க உள்ள BSNL - மத்திய அமைச்சர் சொன்ன தகவல்.!

5G சேவையை தொடங்க உள்ள BSNL - மத்திய அமைச்சர் சொன்ன தகவல்.!

5G சேவை

5G சேவை

BSNL 4G and 5G Service | சமீபத்திய India Mobile Congress நிகழ்வில் பேசிய பி.கே.புர்வார் BSNL 5G வெளியீட்டு தேதியை ஐடி அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL வரும் நவம்பர் முதல் 4ஜி சேவையையும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 5ஜி சேவையையும் நாட்டில் துவக்கும் என்று நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.கே.புர்வார் தகவல் தெரிவித்து உள்ளார்.

சமீபத்திய India Mobile Congress நிகழ்வில் பேசிய பி.கே.புர்வார் இந்த தகவலை தெரிவித்த நிலையில், BSNL 5G வெளியீட்டு தேதியை ஐடி அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் உறுதிப்படுத்தியுள்ளார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC-2022) நிகழ்ச்சியின் போது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த விஷயத்தை கூறினார்.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை IMC-22 நிகழ்வின் தொடக்க நாளில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் 5ஜி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டன. இதனிடையே இந்திய மக்களுக்கு மலிவு விலையில் 5G வழங்குவதற்காக 3 தனியார் மற்றும் ஒரு பொது டெலிகாம் நிறுவனம் இருக்கும் என இந்திய மொபைல் காங்கிரஸ் 2022 நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் வைஷ்ணவ் குறிப்பிட்டதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும் விலை விவரங்களை அவர் குறிப்பிடவில்லை.

வரும் 6 மாதங்களில் நாட்டில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என்றும், அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் 80-90% பகுதிகளில் 5ஜி சேவைகள் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கூறி உள்ளார். இதனிடையே BSNL இன்னும் 4G சேவையை கூட அறிமுகப்படுத்தவில்லையே, அடுத்த ஆண்டுக்குள் எப்படி 5G சேவையை நிறுவனம் வழங்க முடியும் என்று அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Also Read : ஜியோ 5ஜி சேவையின் 3 முக்கிய சிறப்பம்சங்கள் இதுதான்! விவரம்!

இதற்கு பதில் அளித்த அவர், 4G-யிலிருந்து 5G-க்கு மாறுவதற்கு நிறுவனத்திற்கு நீண்ட காலம் எடுக்காது. ஏனென்றால் BSNL-ன் 5G சேவையானது நான்-ஸ்டாண்டலோன் கட்டமைப்பின் மூலம் வழங்கப்படும். அதாவது இதன் மூலம் 5G சேவைக்கென்று புதிய அமைப்புகளில் அதிக முதலீடு செய்யாமல் தற்போதுள்ள நெட்வொர்க் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி சேவைகளை வழங்க BSNL திட்டமிட்டுள்ளது என்றார்.

BSNL நிறுவனம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்த கூடும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டு உள்ளார். நாட்டில் டெல்லி, வாரணாசி, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களில் ஏர்டெல் தனது 5ஜி சேவையை வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் மார்ச் 2023-க்குள் அனைத்து நகர்ப்புறங்களுக்கும், மார்ச் 2024க்குள் நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் 5G சேவையை வழங்க திட்டமிட்டு உள்ளது.

Also Read : Lava Blaze 5G: விரைவில் விற்பனைக்கு வர உள்ள இந்தியாவின் மலிவு விலை 5G ஸ்மார்ட் ஃபோன்

இதே போல ஜியோ இந்த மாதத்திற்குள் 5G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துவக்கத்தில் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, வாரணாசி, சண்டிகர், டெல்லி, ஜாம்நகர், காந்திநகர், மும்பை, புனே, லக்னோ, கொல்கத்தா, சிலிகுரி, குருகிராம் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் 5G சேவையை பெற உள்ளன. எனினும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் யாரும் இதுவரை 5G பிளான்களை வெளியிடவில்லை. 5ஜி திட்டங்களின் விலை குறித்தும் தெளிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: 5G technology, BSNL, India, Tamil News