Work From Home பிளானில் 70GB டேட்டா.. அட்டகாசமான பிளானை அறிமுகம் செய்தது BSNL..

Work From Home பிளானில் 70GB டேட்டா.. அட்டகாசமான பிளானை அறிமுகம் செய்தது BSNL..

கோப்புப் படம்

ரூ. 199 பிளான் இந்தியாவில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கிடைக்கிறது, இது BSNL ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களால் டிசம்பர் 31, 2020 வரை பயன்படுத்தப்படும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மத்திய அரசிற்கு சொந்தமான (Bharat Sanchar Nigam Limited (BSNL)) நிறுவனம், மற்ற தனியார் டெலிகாம்களுடன் போட்டியிடுவதற்காகவே அதன் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' (‘Work From Home') ப்ரீபெய்ட் STV பிளான்களை அறிமுகப்படுத்தியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவில் டேட்டா நுகர்வு கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்த வண்ணம் இருக்க, கோவிட்-19 (Covid-19) தொற்றுநோய் பரவலானது பல ஆபிஸ் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய (Work From Home) கட்டாயப்படுத்தியது, இதன் விளைவாக டேட்டா பயன்பாடு மேலும் அதிகரித்தது. 

2020 மார்ச் மாதத்தின் போது இந்திய டெலிகாம் நிறுவனங்களிடம் தினசரி டேட்டா நன்மையை கொண்ட நிலையான ப்ரீபெய்ட் பிளான்கள் போதுமானதாக இருந்தன. அந்த நேரத்தில் ஒருகாலத்தில் தேவைப்படாது என்று நீக்கப்பட்ட டேட்டா-ஒன்லி (data-only) பிளான்களின் தேவை மீண்டும் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கோவிட்-19 (Covid-19) தொற்றுநோய் பரவலானது, டெலிகாம் நிறுவனங்களை டேட்டா ஒன்லி பேக்களை  (data-only packs) மீண்டும் கொண்டு வரும்படி கட்டாயப்படுத்தியது. அவைகள் Work From Home பிளான்கள் என்கிற வேறு பெயருடன் வெளியாகின. 

இதில் கவனிக்கவேண்டியது ஏர்டெல்லின் ரூ. 251 ஹோம் ப்ரீபெய்ட் பிளானில் 50GB டேட்டாவிற்கு கூடுதல் வேலிடிட்டி கிடைப்பதில்லை. உங்கள் தற்போதைய பேக்கின் வேலிடிட்டி காலம் வரை கூடுதல் டேட்டா செல்லுபடியாகும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த பிளான் இந்தியாவின் எல்லா வட்டங்களிலும் கிடைப்பதில்லை. மறுபுறம், Vi 28GB வேலிடிட்டி அதே விலையில் 50GB இன்டர்நெட் டேட்டாவை வழங்குகிறது. 

Vi பயனர்கள் பலவிதமான பிரபலமான இந்தி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைக் கொண்ட Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான (English TV shows and movies) அணுகலை அனுபவிக்க முடியும். 

Also read... McDonald's உணவு வகைகளை இனி எளிதாக WhatsApp ஆப் மூலமே ஆர்டர் செய்யலாம்!

இதற்கிடையில், BSNL 'வொர்க் ஃப்ரம் ஹோம்' (‘Work From Home') மையப்படுத்தப்பட்ட ப்ரீபெய்ட் பிளான்களில் இருந்து ரூ. 56ல் தொடங்கி 10 நாட்களுக்கு 10GB டேட்டாவை உள்ளடக்கியது. ரூ. 1151 க்கு மற்றொரு ப்ரீபெய்ட் பிளான் உள்ளது, இது 40 நாட்களுக்கு 40GB இன்டர்நெட் டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. சமீபத்தில், அரசுக்கு சொந்தமான டெல்கோ ரூ. 199 ப்ரீபெய்ட் பிளானை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது 2GB தினசரி டேட்டா மற்றும் காலிங் (calling) நன்மைகளை 250 நிமிட FUP வரம்புடன் வழங்குகிறது. ரூ. 199 பிளான் இந்தியாவில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கிடைக்கிறது, இது BSNL ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களால் டிசம்பர் 31, 2020 வரை பயன்படுத்தப்படும். கடைசியாக, BSNL 2021 ஜனவரி 1 முதல் அதன் தற்போதைய ரூ. 186 பிளானை  திரும்பப் பெறும் என்று கூறப்படுகிறது. இந்த பிளானில் 2GB தினசரி காலிங் மற்றும் டேட்டாவுடன் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். கேரளா மற்றும் BSNL 4G நெட்வொர்க்கைக் கொண்ட இந்தியாவின் பிற வட்டங்களில், நிறுவனத்தின் ரூ. 251 பேக் ஆனது தனியார் டெலிகாம்களுக்கு இணையாக 4G டேட்டாவை வழங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: