Home » News » Technology » BSNL RS 1999 PREPAID ANNUAL PLAN REVISED CHECK JIO AIRTEL VI RECHARGE PLANS VIN GHTA

நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டியுடன் BSNLன் ரூ.1999 ப்ரீபெய்ட் வருடாந்திர பிளானில் திருத்தம்!

ரூ.2,399 ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் (Reliance Jio prepaid annual plan) ஆண்டு பிளானும் உள்ளது. இது ஒரு நாளைக்கு 2GB டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிட்டெட் ஜியோ-டு-ஜியோ வாய்ஸ் கால் ஆகியவற்றை வழங்குகிறது.

நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டியுடன் BSNLன் ரூ.1999 ப்ரீபெய்ட் வருடாந்திர பிளானில் திருத்தம்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: December 30, 2020, 10:13 PM IST
  • Share this:
BSNL தனது ரூ. 1,999 வருடாந்திர ப்ரீபெய்ட் பிளானை (annual prepaid plan) திருத்தியுள்ளது. இந்த பேக் இப்போது 60 நாட்கள் லோக்தூன் சந்தா (Lokdhun subscription) மற்றும் 365 நாட்கள் ஈரோஸ் நவ் சந்தாவுடன் (Eros Now subscription) தொகுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நன்மைகள் முந்தையதைப் போலவே இருக்கின்றன. நீண்ட கால ரீசார்ஜ் பிளான் இன்னும் ஒரு நாளைக்கு 100 SMSகளையும் தினசரி 3GB டேட்டாவையும் வழங்குகிறது. டேட்டா தீர்ந்த பிறகு, இன்டர்நெட் வேகம் 80Kbps ஆக குறையும். எனவே வருடாந்திர அடிப்படையில், தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL, மொத்தம் 1095GB டேட்டாவை 365 நாட்களுக்கு அளிக்கிறது. 

ரூ .1,999 வருடாந்திர ப்ரீபெய்ட் பிளானில் இந்தியாவுக்குள் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (unlimited voice calling) சலுகைகள் உள்ளன. அனைத்து BSNL வாடிக்கையாளர்களும் BSNL ட்யூன்களுக்கான அன்லிமிட்டெட் பாடல் மாற்ற விருப்பத்துடன் இந்த பிளான் 365 நாட்கள் செல்லுபடியாகும். நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டியுடன், இந்த பிளான் பயனருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

டெலிகாம் டாக்கின் (TelecomTalk) படி , திருத்தப்பட்ட BSNL ஆண்டு பிளான் (annual plan) ஜனவரி 1, 2021 முதல் மக்களுக்கு கிடைக்கும். இது இந்தியாவில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் (Jio, Airtel and Vodafone) ஆகியவற்றின் வருடாந்திர ப்ரீபெய்ட் பிளான்களை பற்றி இங்கு பார்ப்போம்.


வோடபோன் வருடாந்திர ரீசார்ஜ் பிளான்கள் (Vodafone annual recharge plans): 

Vi (முன்னர் வோடபோன் என்று அழைக்கப்பட்டது) ரூ .1,499க்கான ப்ரீபெய்ட் பிளானை வழங்குகிறது, இது 24GB டேட்டாவையும் 365 நாட்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களையும் அளிக்கிறது. இந்த பிளானின் மூலம், வோடபோன் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிளானின் மொத்த காலத்திற்கு 3,600 லோக்கல் மற்றும் நேஷனல் SMSகளை (local and national SMS) அளிக்கிறது. எல்லா Vi பிளான்களையும் போலவே, பயனர்களும் Vi மூவிகள் மற்றும் டிவி ஆப்ஸ்களுக்கான (Vi Movies and TV apps) அணுகலைப் பெறுவார்கள். Vi இல் ரூ.2,399க்கு ப்ரீபெய்ட் ஆண்டு பிளான் உள்ளது, இதில் 1.5GB தினசரி டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் உண்மையிலேயே அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சலுகைகளை வழங்குகிறது.

ஏர்டெல் ஆண்டு ரீசார்ஜ் பிளான்கள் (Airtel annual recharge plans): ஏர்டெல் (Airtel) ரூ .1,498 வருடாந்திர ப்ரீபெய்ட் பிளானை வழங்குகிறது, இதில் 24GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் மொத்தம் 3,600 SMS ஆகியவை அடங்கும். இந்த நீண்டகால பிளானின் மூலம், தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹெலோட்டூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான (Airtel XStream Premium, Free Hellotunes, Wynk Music, and online classes)  அணுகல் போன்ற பிற நன்மைகளையும் வழங்குகிறது. இது ரூ .1,999 பிளான் இல்லை, ஏர்டெல் (Airtel) நேரடியாக ரூ .1,498 ஆண்டு ரீசார்ஜ் பிளானை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த பேக் தினசரி அடிப்படையில் 2GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 SMS வழங்கும். அடிப்படையில்  ஏர்டெல் (Airtel) பிளானின் அதே கூடுதல் நன்மைகளை பயனர்கள் பெறுகிறார்கள். ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளர்களுக்கு இரண்டு பிளான்களுடனும் ஃபாஸ்டேக்கில் (FASTag) ரூ.100 கேஷ்பேக் கிடைக்கிறது .

ஜியோவின் வருடாந்திர ப்ரீபெய்ட் பிளான்கள் (Jio annual prepaid plans): 

ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) அடிப்படை வருடாந்திர ப்ரீபெய்ட் பிளானிற்கு ரூ. 2,121 செலவாகும். 1.5GB தினசரி டேட்டாவைக் கொண்ட நீண்ட கால ரீசார்ஜ் பிளான், அதாவது பயனர்கள் மொத்தம் 504GB டேட்டாவைப் பெறுகிறார்கள். மற்ற பிளான்களைப் போலன்றி, ஜியோ-டு-ஜியோவுக்கு, ஜியோ நெட்வொர்க் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் நன்மைகளை மட்டுமே வழங்குகிறது. ஜியோ (Jio) அல்லாத ஜியோ வாய்ஸ் காலிற்கு (Jio to non-Jio calling) நிறுவனம் 12,000 நிமிடங்களை தருகிறது. பயனர்கள் ஒரு நாளைக்கு 100 இலவச SMS நன்மைகளையும், ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறுகிறார்கள். 

Also read... Airtel, Vi, Jio வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அட்டகாசமான சலுகைகள்!

ரூ.2,399 ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் (Reliance Jio prepaid annual plan) ஆண்டு பிளானும் உள்ளது. இது ஒரு நாளைக்கு 2GB டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிட்டெட் ஜியோ-டு-ஜியோ வாய்ஸ் கால் ஆகியவற்றை வழங்குகிறது. ஜியோ முதல் ஜியோ (Jio) அல்லாத அழைப்பிற்கு, வாடிக்கையாளர்களுக்கு 12,000 நிமிடங்கள் கிடைக்கும், இது அடிப்படையில் நீண்ட கால பிளானைப் போன்றது. மேலும் இந்த பேக் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. இது 365 நாட்களுக்கு வேலிடிட்டியை கொண்டுள்ளது.

BSNLன் ரூ. 1,999 சிறந்த பிளானா?

பயனர்கள் பெறும் நன்மைகளின் அடிப்படையில் மட்டும் பார்த்தால், BSNLன் ரூ. 1999 பிளான் மலிவானது மற்றும் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதில் உள்ள ஒரே பிரச்சினை என்னவென்றால், இது 3G சேவையை வழங்குகிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) போன்ற மற்ற ஆபரேட்டர்கள் 4G சேவையை வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 3G பயன்படுத்துவதில் உங்களுக்குச் சிக்கல் இல்லை என்றால் BSNLன் இந்த பிளான் சிறந்த பிளான் தான்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: December 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading