• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 3 மலிவு விலை ப்ரீபெய்ட் பிளான்களை திருத்திய BSNL - விலை குறித்த விவரம்!

3 மலிவு விலை ப்ரீபெய்ட் பிளான்களை திருத்திய BSNL - விலை குறித்த விவரம்!

3 மலிவு விலை ப்ரீபெய்ட் பிளான்களை திருத்திய BSNL

3 மலிவு விலை ப்ரீபெய்ட் பிளான்களை திருத்திய BSNL

ரூ.57 ரீசார்ஜ் திட்டம் 30 நாட்களுக்கு ப்ரீபெய்ட் இன்டர்நேஷ்னல் ரோமிங்கை ஆக்டிவேட் செய்ய அல்லது நீட்டிக்க உதவுகிறது.

  • Share this:
மத்திய அரசு நடத்தி வரும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் 3 மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையில் திருத்தம் செய்து இருக்கிறது. ரூ.56, ரூ.57 மற்றும் ரூ.58 என்ற விலையில் வழங்கி வந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை மேலும் சற்று குறைத்துள்ளது BSNL நிறுவனம். ஆனால் டேட்டா நன்மைகள் மற்றும் வேலிடிட்டி வகையில் இந்த திட்டங்களில் புதிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

இதுநாள் வரை ரூ.56-க்கு வழங்கப்பட்டு வந்த ப்ரீபெய்ட் பிளான் ரூ.2 குறைக்கப்பட்டு ரூ.54-க்கு வழங்கப்படும். ரூ.57 மற்றும் ரூ.58 என்ற விலையில் இருந்த ப்ரீபெய்ட் பிளான்கள் தலா ரூ.1 குறைக்கப்பட்டு முறையே ரூ.56 மற்றும் ரூ.57 என்ற மிகவும் மலிவு விலையில் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளது BSNL

மேலும் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளை மாற்றவில்லை என்றும் விலையை மட்டுமே குறைத்துள்ளதாகவும் நிறுவனம் கூறி இருக்கிறது. இந்த திருத்தப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களை ஆர்வமுள்ள சந்தாதாரர்கள் BSNLஅதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது வேறு எந்த மூன்றாம் தரப்பு செயலியின் மூலமும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

தற்போதைய நிலவரப்படி மேற்கண்ட திருத்தப்பட்ட மலிவு விலை ஸ்கீம்கள் கேரளா போன்ற தேர்வு செய்யப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே கிடைக்கின்றன. நாட்டில் உள்ள அனைத்து BSNL சந்தாதாரர்களுக்கும் தற்போது கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. நாடு முழுவதுமுள்ள அனைத்து BSNL யூஸர்களும் விரைவில் இந்த நன்மையை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கேரளாடெலிகாம்.இன்ஃபோவின் (KeralaTelecom.info) அறிக்கைப்படி தற்போது திருத்தப்பட்ட மலிவு ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

* புதிய ரூ.54 மதிப்பிலான BSNL-ன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 5,600 நொடிகள் டாக் டைம் மற்றும் 8 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

* BSNL-ன் ரூ.56-க்கான ப்ரீபெய்ட் திட்டம் ஜிங் என்டர்டெயின்மென்ட் மியூசிக்கிற்கான (Zing Entertainment music) அக்சஸுடன், 10GB டேட்டா மற்றும்10 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது.

* ரூ.57 ரீசார்ஜ் திட்டம் 30 நாட்களுக்கு ப்ரீபெய்ட் இன்டர்நேஷ்னல் ரோமிங்கை ஆக்டிவேட் செய்ய அல்லது நீட்டிக்க உதவுகிறது.

BSNL-ன் இந்த திருத்தப்பட்ட பிளான்கள் கேரளாவை தவிர ஆந்திரா, சத்தீஸ்கர், சென்னை, டாமன் மற்றும் டையூ, குஜராத் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பிற சரக்கிள்களுக்கும் பொருந்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

BSNL சந்தாதாரர்கள் தங்கள் ஸ்மார்ட் போனிலிருந்து 123 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் திருத்தப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களை வாங்கலாம். ரீசார்ஜ் போர்ட்டல்களிலும் இந்த புதிய BSNL திட்டங்களை ஒருவர் காணலாம். மேலும் விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் My BSNL ஆப் அல்லது BSNL வெப்சைட்டை பார்வையிடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: