BSNL REVISES BROADBAND PLANS TO OFFER UP TO 200 MBPS SPEED WITH UP TO 4TB HIGH SPEED DATA VAI GHTA
BSNL-ன் புதிய broadband திட்டங்கள் - High Speed + கூடுதல் டேட்டா சேவைகளுக்கு அதிரடி விலைகுறைப்பு
கோப்புப் படம்
பி.எஸ்.என்.எல் Broadband வாடிக்கையாளர்களுக்கு 200Mbps வேகத்துடன் கூடுதல் டேட்டா மற்றும் இலவச Hotstar subscription உள்ளிட்ட பல சலுகைகளுடன் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு work from home ஆப்சனை வழங்கின. இதனால், இன்டர்நெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் புதிய ஆஃபர்களை அள்ளி வீசினர். அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனமும் புதிய ஆஃபர்களை அறிவித்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்து வரும் புதிய திட்டங்களுடன் கூடிய அதிரடி சலுகைகள் தனியார் நிறுவனங்களையே திக்குமுக்காட வைத்துள்ளது.
ஜியோ vs ஏர்டெல் vs பி.எஸ்.என்.எல்
தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால், அவர்கள் டேட்டா ஒன்லி பேக் (Data only pack) என்ற திட்டத்தை விரும்புகின்றன. தற்போது இந்த திட்டத்தில் ஜியோ நிறுவனம் கூடுதலான டேட்டாக்களை வழங்குவதால் பெரும்பாலானோர் ஜியோவை மட்டுமே நாடுகின்றனர். Data only package -ல் ரூ.151, ரூ.201, ரூ.251 என்ற மூன்று திட்டங்களை கொடுக்கும் ஜியோ, ரூ.151க்கு 30 ஜிபி, ரூ.201க்கு 40 ஜிபி, ரூ.251க்கு 50 ஜிபி என 30 நாள் வேலிடிட்டியில் டேட்டாக்களை கொடுக்கிறது.
ஏர்டெல் நிறுவனமும் ரூ.151, மற்றும் ரூ.201 டேட்டா ஒன்லி திட்டங்களுக்கு ஜியோ கொடுக்கும் அதே டேட்டாக்களை கொடுக்கும் நிலையில், ரூ.251 திட்டத்தில் மட்டும் வேலடிட்டி இல்லாமல் 50 ஜிபி-யைக் கொடுக்கிறது. ஆனால், பி.எஸ்.என்.எல் மற்ற இருநிறுவனங்களின் திட்டங்களைக் காட்டிலும், ரூ.251 திட்டத்தில் 70 ஜிபி வழங்கப்படும் என அறிவித்தது. இதே ஏர்டெல்லும் 251 திட்டத்தினை வழங்குகிறது. இது 4ஜி டேட்டாவாகும். இந்த திட்டத்தின் மூலம் 50 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதில் வேலிடிட்டி என்பது கிடையாது.
உங்களது தற்போதைய பேக் முடிவடையும் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். இவற்றோடு 401 ரூபாய் திட்டமும் உள்ளது. இதில் 30ஜிபி டேட்டாவோடு, டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவையும் ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. எனினும் இது 28 நாட்கள் வேலிட்டிட்டியை கொண்டது. இது தவிர ஏர்டெல் 48 ரூபாய் மதிப்பிலான பட்ஜெட் திட்டத்தினையும் வழங்குகிறது. இதன் மூலம் 3 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.
பி.எஸ்.என்.எல் Broadband திட்டங்கள்
தற்போது, பி.எஸ்.என்.எல் நிறுவனம் Broadband வாடிக்கையாளர்களுக்கும் புதிய ஆஃபர்களை அதிரடியாக வழங்கியுள்ளது. அத்துடன், சென்னை வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாரத் பைபர் திட்டத்தில் ரூ.499-க்கு 100 GB, 20Mbps திட்டத்தில் வேகம் அதிரடியாக 50Mbps ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.799க்கு வழங்கப்பட்ட 300 ஜிபி திட்டத்தின் வேகம் 50 Mbps -லிருந்து 100Mbps ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டேட்டாவை முழுவதுமாக உபயோகபடுத்திய பிறகு, மேலும், இணையத்தை பயன்படுத்தும்போது இருக்கும் நெட்வொர்கின் வேகம் 2 Mbps-லிருந்து 5Mbps-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கூடுதலாக Disney+ Hotstar பிரீமியம் சப்ஸ்கிரிப்சனும் வழங்கப்படுகிறது. 600 ஜிபி திட்டம் 849 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேகம் 100 Mpbs- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500GB பாரத் பைபர் திட்டத்தின் வேகமும் 100 Mbps ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 949 ரூபாய்க்கு இந்த திட்டத்தை தேர்தெடுத்தால் Disney+ Hotstar பிரீமியம் சப்ஸ்கிரிப்சனும் கொடுக்கப்படுகிறது. மேலும், 750 ஜபி, 33 ஜிபி திட்டங்களின் வேகம் அதிகபட்சமாக 200Mbps வேகத்தில் வழங்குகிறது.
750 ஜிபி 1,277 ரூபாய்க்கும், 33GB CUL பாரத் பைபர் திட்டம் 1,999 ரூபாய்க்கும் பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. பி.எஸ்.என்.எலின் இந்த அறிவிப்பு மற்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரும் போட்டியை உருவாக்கியுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் - திட்டங்களை அதிகளவு தேர்தெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல், தொலைத்தொடர்பு சந்தையில் குறைவான அளவு மட்டுமே வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்று வருவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதிரடியாக இந்த புதிய திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.