• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ரூ. 49 முதல் ரீசார்ஜ் பிளான் - BSNL-ன் புதிய ப்ரீபெய்ட் பிளான்கள்!

ரூ. 49 முதல் ரீசார்ஜ் பிளான் - BSNL-ன் புதிய ப்ரீபெய்ட் பிளான்கள்!

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

ரூ.106 மற்றும் ரூ.107 விலை கொண்ட திட்டங்களில் 100 நாட்களாக இருந்த வேலிடிட்டி தற்போது 84 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் Vi ஆகியவை சில ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான கட்டணங்களை உயர்த்திய சில நாட்களிலேயே, அரசாங்கத்திற்கு சொந்தமான டெல்கோ பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனமும் சில திட்டங்களுக்கான கட்டணங்களை மறைமுகமாக உயர்த்தியுள்ளது.

மறைமுக கட்டண உயர்வு என்பது திட்டத்தின் விலை அப்படியே இருந்தாலும் அதில் கிடைக்கும் நன்மைகள் குறைக்கப்படும் என்று அர்த்தம். அதாவது பிஎஸ்என்எல் அதன் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தாமல் அப்படியே வைத்திருந்தாலும், அந்த திட்டங்களின் வேலிடிட்டியை குறைத்துள்ளது.

தாராளமான வாலிடிட்டியை வழங்கும் திட்டங்களுக்கு பெயர்போனது தான் பிஎஸ்என்எல். இந்த நிலையில் வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, சராசரி மொத்த வருவாயை (AGR) அதிகரிக்க அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண விலையை மேலும் அதிகரிக்கலாம் என்று அறிக்கைகள் ஊகிக்கின்றன.

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை பொறுத்தவரை ரூ .49, ரூ .75, ரூ .94 மற்றும் ரூ .106, ரூ .107, ரூ .197 மற்றும் ரூ .397 விலை கொண்ட சிறப்பு கட்டண வவுச்சர்களின் வேலிடிட்டியை குறைத்துள்ளது. இந்த திருத்தங்கள் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் கேரள தொலைத்தொடர்பபில் அமலில் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ |  வெறும் ரூ.1000 முதலீடு உங்களை லட்சாதிபதி ஆக்கும்.. நீங்கள் செல்ல வேண்டிய இடம் இதுதான்!

அதாவது, முதலில் ரூ .49 விலையில் உள்ள நுழைவு நிலை சிறப்பு கட்டண வவுச்சர் 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டிருந்தது. அது இப்போது 24 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் எந்த ஒரு நெட்வொர்க்கிற்கும் கால் செய்தால் தள்ளுபடி அழைப்பு விகிதத்தின் படி, நிமிடத்திற்கு 45 பைசா சார்ஜ் செய்யப்படும். மேலும் இந்த திட்டத்தில் 2 ஜிபி இலவச டேட்டா மற்றும் மொத்தம் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை டெல்கோ வழங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த மாதம், ஏர்டெல் தனது ரூ .49 நுழைவு நிலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை முற்றிலுமாக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் நுழைவு நிலை ப்ரீபெய்ட் பேக்குகள் இப்போது ரூ .79 ஸ்மார்ட் ரீசார்ஜில் இருந்து தொடங்குகிறது. மேலும் டூயல் டேட்டாவுடன் வாடிக்கையாளர்களுக்கு நான்கு மடங்கு அதிக அவுட்கோயிங் நிமிடங்களை வழங்குகிறது.

ALSO READ |  ஜியோமார்ட் டிஜிட்டல்: அமேசான், பிளிப்கார்ட்டுக்கு சவால் அளிக்க களத்தில் இறங்கும் ரிலையன்ஸ்

இதையடுத்து, பிஎஸ்என்எல்லின் ரூ .75 ப்ரீபெய்ட் திட்டத்தின் வாலிடிட்டி 50 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அது முன்பு 60 நாட்களாக இருந்தது. இந்த பேக் மூலம் எந்த நெட்வொர்க்கிற்கும் 100 நிமிட இலவச வாய்ஸ் கால்ஸ், 2 ஜிபி இலவச டேட்டா மற்றும் 50 நாட்களுக்கு இலவச பிஎஸ்என்எல் டிஃபால்ட் ட்யூன்களை பெறலாம். இலவச வாய்ஸ் கால்கள் முடிந்த பிறகு, அவுட்கோயிங் கால்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனம் நிமிடத்திற்கு 30 பைசா வசூலிக்கிறது.

இந்த பிரிவில் அடுத்தது BSNL இன் ரூ. 94 STV திட்டம் உள்ளது. இதன் வாலிடிட்டி தற்போது 90 நாட்களில் இருந்து 75 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 75 நாட்களுக்கு 3 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது. இது முதல் 60 நாட்களுக்கு BSNL டிஃபால்ட் ட்யூன்களை இலவசமாக வழங்குகிறது. இலவச அழைப்புகளுக்குப் பிறகு, அனைத்து அவுட்கோயிங் வாய்ஸ் கால்களுக்கும் நிமிடத்திற்கு 30 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.

ALSO READ | பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இதை நோட் பண்ணுங்க.. பிரபல வங்கியில் மாறிய ரூல்ஸ்!

இதையடுத்து ரூ.106 மற்றும் ரூ.107 விலை கொண்ட திட்டங்களில் 100 நாட்களாக இருந்த வேலிடிட்டி தற்போது 84 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்ட வவுச்சர்களும் எந்த ஒரு நெட்வொர்க்கிற்கும் 100 நிமிட இலவச வாய்ஸ் கால்கள் மற்றும் 3 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் இலவச BSNL டிஃபால்ட் ட்யூன்களை 60 நாட்களுக்கு அனுபவிக்கலாம்.

பிஎஸ்என்எல்லின் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தில் 180 நாட்களாக இருந்த வாலிடிட்டி தற்போது 150 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் ஜிங் மியூசிக் பயன்பாட்டிற்கான சந்தாவை வழங்குகிறது. ரீசார்ஜ் செய்த முதல் 18 நாட்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனம் இந்த பிரீபீஸை வழங்குகிறது.

ALSO READ |  ரூ. 449 ப்ரீபெய்ட் பிளானில் மாற்றங்கள் செய்துள்ள vi - தினமும் கூடுதல் டேட்டா!

கடைசியாக, பிஎஸ்என்எல்லின் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வாலிடிட்டி கொண்ட ஒரு வருடாந்திர திட்டமாகும். இருப்பினும், இது இப்போது 300 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ், இலவச லோக்தூன் உள்ளடக்கம் மற்றும் இலவச பிஎஸ்என்எல் டிஃபால்ட் ட்யூன்கள் ஆகியவற்றை வழங்கும். ரீசார்ஜ் செய்த முதல் 60 நாட்களுக்கு இலவசங்கள் கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: