ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இப்போ 4ஜி.. விரைவில் 5ஜி - பிஎஸ்என்எல் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!

இப்போ 4ஜி.. விரைவில் 5ஜி - பிஎஸ்என்எல் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)

BSNL 4G & 5G | தனியார் நிறுவனங்கள் கொடுக்க உள்ள மலிவு விலையை விட பிஎஸ்என்எல் நிறுவனம் குறைவான விலைக்கு 5ஜி சேவையை வழங்கும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி தொடங்கி 7 நாட்கள் நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்திற்கு ஒதுக்கப்பட்டதில் 51,236 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை விற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலமாக மத்திய அரசுக்கு ரூ. 1.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

இந்திய தொலைதொடர்பு துறையில் முன்னணியில் விளக்கும் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றைகளை 88,078 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதற்கு அடுத்ததாக 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை 43,084 கோடி ரூபாய்க்கு ஏர்டெல் நிறுவனம் ஏலம் எடுத்தது. வோடஃபோன் ஐடியா நிறுவனம் 18,799 கோடிக்கும், அதானி நிறுவனம் 212 கோடி ரூபாய்க்கும் அலைக்கற்றை உரிமங்களை வாங்கியுள்ளன.

டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6வது இந்திய கைபேசி மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலமாக டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூர் உள்ளிட்ட 8 நகரங்களில் சேவையை தொடங்கி, இந்தியாவிலேயே 5ஜி சேவையை தொடங்கிய முதல் நிறுவன் என்ற பெருமையை பார்தி ஏர்டெல் பெற்றது.

இதனையடுத்து தசரா பண்டிகையை முன்னிட்டு ஜியோ நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய 4 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகியவையும் விரைவில் 5ஜி சேவையை தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நடுத்தர மற்றும் சிறு, குறு நடுத்தர வணிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 4ஜி சேவை தொடர்பான அறிவிப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Also Read : ஜியோ 5ஜி சேவையின் 3 முக்கிய சிறப்பம்சங்கள் இதுதான்! விவரம்!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (சிஎம்டி), பி.கேபூர்வார், இந்த ஆண்டு நவம்பர் முதல் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் அரசாங்கத்தின் டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (C-DoT) தலைமையிலான கூட்டமைப்பு ஆகியவை உள்நாட்டில் 4ஜி சேவையை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கரம் கோர்த்துள்ளன. அதேபோல் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 5ஜி சேவையை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய பயனர்களின் குறைந்தபட்ச வருமானத்தைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாக 4ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், அரசாங்கத்தின் டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் பீட்டா சோதனைகளை நடத்தி வருவதாகவும், விரைவில் 5ஜி சேவையை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Also Read : இனி இந்த வசதிக்கு பணம் கட்டணும்! பிஸினஸைத் தொடங்கிய யூடியூப்! விவரம் இதுதான்!

தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி இருந்தாலும், மலிவு விலையிலேயே டேட்டா வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இந்திய கைபேசி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி கூட, “முன்பு, 1ஜிபி டேட்டாவின் விலை சுமார் ரூ.300 ஆக இருந்தது, இப்போது ஒரு ஜிபிக்கு ரூ.10 ஆகக் குறைந்துள்ளது. சராசரியாக, இந்தியாவில் ஒரு நபர் மாதத்திற்கு 14 ஜிபி பயன்படுத்துகிறார். இதற்கு மாதம் ரூ.4,200 செலவாகும் ஆனால் ரூ.125-150 செலவாகிறது. அரசின் முயற்சியே இதற்கு வழிவகுத்தது” எனத் தெரிவித்திருந்தார். அப்படியானால் தனியார் நிறுவனங்கள் கொடுக்க உள்ள மலிவு விலையை விட பிஎஸ்என்எல் நிறுவனம் குறைவான விலைக்கு 5ஜி சேவையை வழங்கும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Published by:Selvi M
First published:

Tags: 5G technology, BSNL, India