1,312 ரூபாய்... தினமும் 5ஜிபி டேட்டா!- புதிய ப்ரீபெய்டு ப்ளான் அறிவித்த BSNL

முதற்கட்டமாக ஆந்திர பிரதேஷ் மற்றும் தெலங்கானா பகுதிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்படும். தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பை தவிர இதர மாநிலங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1,312 ரூபாய்... தினமும் 5ஜிபி டேட்டா!- புதிய ப்ரீபெய்டு ப்ளான் அறிவித்த BSNL
பி.எஸ்.என்.எல்
  • News18
  • Last Updated: January 11, 2019, 11:27 AM IST
  • Share this:
பாரத் சன்சார் நிகாம் லிமிடேட் என அழைக்கப்படும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிதாக 1,312 ரூபாய்க்கு ப்ரீபெய்டு ப்ளான் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 5ஜிபி டேட்டா, 1000 எஸ்.எம்.எஸ் என 365 நாளுக்கான ப்ரீபெய்டு ப்ளானை பி.எஸ்.என்.எல் கொண்டுவந்துள்ளது.

முதற்கட்டமாக ஆந்திர பிரதேஷ் மற்றும் தெலங்கானா பகுதிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்படும். தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பை தவிர இதர மாநிலங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் அதிகம் டேட்டா பயன்படுத்தாதோருக்கு பெரிய பயனாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதாவது டேட்டா அல்லாமல் வாய்ஸ் கால் செய்வதற்கு ஏற்ற ப்ரீபெய்டு ப்ளான் ஆக இத்திட்டம் இருக்கும். இதேபோல், 500, 1,000, 1,500, 2,000, 2,200, 2,500 மற்றும் 3 ஆயிரம் ரூபாய் ப்ளான்களின் கீழ் வாடிக்கையாளர்கள் பயனடையலாம்.

மேலும் பார்க்க: அழவைத்த அஜித், சிரிக்கவைத்த சிவா... விஸ்வாசம் படம் ரசிகர்களுக்கு எப்படி..?
First published: January 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்