• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 1 வருட வேலிடிட்டியுடன் கூடிய தினசரி டேட்டா பிளான்கள் - ரூ.500க்கு வழங்கும் BSNL!

1 வருட வேலிடிட்டியுடன் கூடிய தினசரி டேட்டா பிளான்கள் - ரூ.500க்கு வழங்கும் BSNL!

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

365 நாட்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டாவை வழங்கும் ஒரு வருடாந்திர பிளான் ஒன்றும் BSNL-ல் உள்ளது.

  • Share this:
பல்வேறு தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் மார்க்கெட்டில் இருக்கும் நிலையில் அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு சேவை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல விதமான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. BSNL வழங்கும் இந்த ப்ரீபெய்ட் பிளான்களில் சில, குறிப்பிட்ட விலையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் ப்ரீபெய்ட் பிளான்களை விட அதிக நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

ரூ.365 விலையில் BSNL வழங்கும் ப்ரீபெய்ட் திட்டம், வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு நன்மைகளை (annual benefits,) அளிக்கிறது. அதாவது இந்த பிளான் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதனிடையே 2 ஜிபி, 3 ஜிபி தினசரி டேட்டா பிளான்களை 365 நாட்கள் வரையிலான வேலிடிட்டியுடன் ரூ.500-க்கு கீழ் BSNL வழங்குகிறது. இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரூ.187 விலையில் BSNL வழங்கும் ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 SMS-களை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த பிரிவில் அடுத்தது ரூ.199 ப்ரீபெய்ட் பிளான் இருக்கிறது. இந்த பிளான் 250 நிமிடங்கள் FUP லிமிட்டுடன் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த பிளானின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் ப்ரீபெய்ட் திட்டங்களை ரூ.247 மற்றும் ரூ.250 விலைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு BSNL வழங்கி வருகிறது.

இந்த 3 ஜிபி தினசரி டேட்டா திட்டங்கள் மற்றும் 250 நிமிட FUP லிமிட் மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் உள்ளிட்ட நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. மேலும் இந்த பிளான்கள் நாளொன்றுக்கு 100 SMS மற்றும் 40 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகின்றன. அதே போல BSNL-ன் ஒர்க் ஃபரம் ஹோம் பிளான்களுக்கு ரூ.151 மற்றும் ரூ.251 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிளான்கள் முறையே 40 ஜிபி மற்றும் 70 ஜிபி டேட்டா நன்மைகளையும் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியையும் கொண்டு உள்ளன.

365 நாட்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டாவை வழங்கும் ஒரு வருடாந்திர பிளான் ஒன்றும் BSNL-ல் உள்ளது. இந்த ப்ரீபெய்ட் பிளானின் விலை ரூ.365 ஆகும். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், நாளொன்றுக்கு 100 SMS-கள் அடக்கம். இது Lokdhun content மற்றும் ஃப்ரீ காலர் ட்யூன்களுக்கான அணுகல் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

Also read... டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும் ரீசார்ஜ் பிளான்களின் கட்டணத்தை உயர்த்தியது Airtel: விவரங்கள் உள்ளே!

இது தவிர ரூ.500-க்கும் கீழ் உள்ள ப்ரீபெய்ட் ஸ்கீம்களில் BSNL ரூ.398-க்கு வழங்கும் பிளான், எந்தவித ஸ்பீட் கட்டுப்பாடும் இன்றி வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இது தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS உள்ளிட்ட நன்மைகளையும் கொண்டுள்ளது. இந்த பிளானின் வேலிடிட்டி 30 நாட்கள். அடுத்து BSNL ரூ.447 என்ற விலையில் 60 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கும் பிளான் 100 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட நன்மைகளை கொண்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: