ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

87 ரூபாய்தான்.. தினமும் 1ஜிபி இண்டர்நெட்.. அசத்தலான ப்ளானை அள்ளித்தரும் BSNL!

87 ரூபாய்தான்.. தினமும் 1ஜிபி இண்டர்நெட்.. அசத்தலான ப்ளானை அள்ளித்தரும் BSNL!

BSNL புதிய பிளான்

BSNL புதிய பிளான்

இந்த திட்டம் உங்களுக்கு மொத்தம் 14 ஜிபி டேட்டவை வழங்கும். டேட்டா லிமிட்  முடிந்த பிறகு, இன்டர்நெட்டின் வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தகவல் தொடர்பு நிறுவங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் போட்டி போட்டுகொண்டு புதிய புதிய ரீசார்ஜ் பிளான்களை வெளியிட்டு வருகிறது. 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த இரண்டு நிறுவங்களுக்கும் ஈடு கொடுக்கும் விதமாக BSNL புதிய ஒரு பிளானை அறிமுகம் செய்துள்ளது.

5ஜி ஓட்டத்தில் தகவல் தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையையும் சரமாரியாக ஏற்றி வருகின்றன. 100 ரூபாய்க்கு கீழ் பிளான் இல்லை எனும் நிலையில் 87 ரூபாய்க்கு ஒரு புதிய பிளானை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 87 ரூபாய் திட்டத்தின் கீழ்  பயனர்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் 14 நாட்களுக்கு கிடைக்கும். அதன்படி இந்த திட்டம் உங்களுக்கு மொத்தம் 14 ஜிபி டேட்டவை வழங்கும். டேட்டா லிமிட்  முடிந்த பிறகு, இன்டர்நெட்டின் வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும். இது தவிர, இந்த திட்டத்தில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த திட்டம் பயனர்களுக்கு 100 ரூபாய்க்கும் குறைவான எஸ்எம்எஸ் வசதியை வழங்குகிறது. அத்துடன் இந்த திட்டத்தில் கூடுதலாக  நீங்கள் ONE97 கம்யூனிகேஷன்ஸ் ஹார்டி கேம்ஸ் மொபைல் சேவையை பெறுவீர்கள்.

இப்போதுள்ள நிலையில் வெறும் அழைப்பு மற்றும் குறைந்த டேட்டா உள்ள பிளான் இருந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு தனியாக பிளான் கிடைப்பதில்லை. அவர்களுக்கு  இது கச்சிதமாகப்  பொருந்தும். சென்னை மற்றும் தமிழ்நாடு BSNL வட்டத்திற்கு இது தற்போது செயலில் உள்ளது. விருப்பம் உள்ளவர்கள்,  https://www.bsnl.co.in/  இணையதளத்திலும், கூகுள் பே, போன்பே , உள்ளிட்ட ஆப்கள் மூலமாகவும் ரேச்சர்ஜ் செய்துகொள்ளலாம்

First published:

Tags: BSNL, Recharge Plan