• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • வேலிடிட்டி நாட்களை அதிகரித்த பி.எஸ்.என்.எல்.. மற்ற நெட்ஒர்க்குகள் வழங்கும் சலுகை விவரங்களை அறிய க்ளிக் செய்யுங்க...

வேலிடிட்டி நாட்களை அதிகரித்த பி.எஸ்.என்.எல்.. மற்ற நெட்ஒர்க்குகள் வழங்கும் சலுகை விவரங்களை அறிய க்ளிக் செய்யுங்க...

பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல்

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் பிரீப்பெய்ட் திட்டங்களான ரூ.2,399 மற்றும் ரூ.1,999 ஆகியவற்றின் வேலிடிட்டி நாட்களை மாற்றி அமைத்துள்ளது.  

  • Share this:
கடும் போட்டி மிகுந்த துறையான தொலைத்தொடர்பு துறையில், வாடிக்கையாளர்களை தக்க வைக்க அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகும். ஏர்டெல்,  ஜியோ நிறுவனங்கள் நாளுக்கு நாள் புதுப்புது திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றனர். அவர்களோடு போட்டிபோடும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் - புதிய திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது. தற்போது, நீண்ட நாள் திட்டங்களாக இருக்கும் ரூ.2,399, மற்றும் ரூ.1,999 திட்டங்களின் வேலிடிட்டியை மாற்றியமைத்துள்ளது. ஜனவரி 10  ஆம் தேதியான இன்று தொடங்கும் இந்த சலுகை ஜனவரி 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. லிமிட்டெட் கால ஆஃபர் என்பதால் வாடிக்கையாளர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

BSNL கொடுக்கும் சலுகைகள் : 

1,999 ரூபாய் ரீச்சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர் கூடுதலாக 21 நாட்கள் வேலிடிட்டி பெறுவதுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களை அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் பெறலாம். நாள்ளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ், பி.எஸ்.என்.எல் டியூன்ஸ் மற்றும் அன்லிமிட்டெட் முறையில் காலர் டியூன்ஸை மாற்றிக்கொள்ளலாம். Eros Now subscription -ஐ 365 நாட்களுக்கு பெறலாம்.

2,399 ரூபாய் திட்டத்தின் வேலிடிட்டி தற்போது 600 நாட்கள் வழங்கப்படுகிறது. புதிய திட்டத்தின்படி உங்களுக்கு 365 நாட்கள் மட்டுமே வேலிட்டி கொடுக்கப்படும், அத்துடன் குடியரசு தின விழா ஆஃபருடன் சேர்த்து 72 நாட்கள் கூடுதலாக வழங்கப்படும். அதன்படி, புதிய திட்டத்தின்படி உங்களுக்கு 437 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். மேலும், பிப்ரவரி முதல், ரீச்சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ .2,399 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். 

நன்மைகளைப் பொறுத்தவரை, இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களை பெறுவீர்கள். FUP வரம்பு இல்லை. நாளொன்றுக்கு 3 GB டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ்கள் வழங்கப்படும். அன்றைய நாளின் டேட்டா நிறைவடைந்துவிட்டால், நெட்வொர்க் வேகம் 80Kbps ஆக குறைக்கப்படும். இதுதவிர, ரூ.1,999 திட்டத்தில் வழங்கப்படும் Eros Now subscription உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கூடுதலாக இந்த திட்டத்திலும் கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல்லின் ஒருவருட ரீச்சார்ஜ் பிளான் : 

ஏர்டெல்லின் 1,498 ரூபாய் வருட பிரீப்பெய்ட் திட்டம் 24 GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், மற்றும் 3,600 எஸ்.எம்.எஸ்-களை வழங்குகிறது. அத்துடன், Airtel XStream Premium, இலவச ஹலோ டியூன்ஸ், விங் மியூசிக் மற்றும் இலவச ஆன்லைன் வகுப்புகள் ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம். 2,498 ரூபாய் திட்டத்தில் நாளொன்றுக்கு 2 GB டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ்கள் 365 நாட்களுக்கு வழங்குகின்றன. இந்த இரு திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 100 ரூபாய் கேஷ்பேக் சலுகையையும் பெற்றுக்கொள்கின்றனர்.

ஜியோவின் நீண்ட நாள் திட்டங்கள் : 

ஜியோவின் 2,121 ரூபாய் பிரீப்பெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்களுக்கும் அன்லிமிட்டெட் அழைப்புகள், நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்-கள் வழங்கப்படுகிறது. மேலும், ஜியோ ஆப்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். 2,399 ரூபாய் திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ், ஜியோ to ஜியோ அன்லிமிட்டெட் அழைப்புகள், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு 12,000 நிமிடங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த திட்டத்திலும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். 2,599 ரூபாய் திட்டத்தில், மேற்கூறிய அனைத்து சலுகைகளும் வழங்கப்படுவதுடன், கூடுதலாக 10 ஜிபி டேட்டா மற்றும் Disney+Hostar subscription கூடுதலாக வழங்கப்படுகிறது.

வோடாபோன் திட்டங்கள் : 

வோடாஃபோன் தற்போது 1,499 ரூபாய் பிரீப்பெய்ட் (Prepaid) திட்டங்களை வழங்கி வருகிறது. இதில், 24 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. 3,600 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்.எம்.எஸ்களை அனுப்பிக்கொள்ளலாம். அத்துடன், Vi Movies மற்றும் TV apps -களை பெறலாம். Vi  ரூ. 2,399 திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, நாளொன்றுக்கு 100 SMS மற்றும் அன்லிமிட்டெட் அழைப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மேற்கூறிய திட்டங்களை ஆராய்ந்து, தங்களுக்கு உகந்த திட்டங்களை வாடிக்கையாளர்கள் தேர்தெடுத்து கொள்ளலாம்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: