• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • BSNL வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்... 4 மாத இலவச பிராண்ட்பேண்டு சேவை அறிவிப்பு!

BSNL வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்... 4 மாத இலவச பிராண்ட்பேண்டு சேவை அறிவிப்பு!

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

இந்த சேவை அனைவருக்குமானதா? புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க அறிவுக்கப்பட்டதா? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

  • Share this:
பிஎஸ்என்எல் நான்கு மாத இலவச பிராட்பேண்டு சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. பல்வேறு மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கிடையே, பிஎஸ்என்எல் நிறுவனமும் தனக்கென்று பிரத்யேகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. பல நிறுவனங்கள் வழங்குவது போலவே, பல்வேறு புதிய பிராட்பேண்டு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வரும் நிலையில், சமீபத்தில், நான்கு மாத இலவச பிராட்பேண்டு சேவையை வழங்குவதாக வெளியான அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சேவை அனைவருக்குமானதா? புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க அறிவுக்கப்பட்டதா? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் வழங்கும் நான்கு மாத இலவச பிராட்பேண்டு சேவை அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் லேண்ட்லைன், பாரத் ஃபைபர் மற்றும் DSL - டிஜிட்டல் சப்ஸ்கிரைபர் லைன் ஆகிய சேவைகளை பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த சலுகை உண்டு. அதே போல, BBO WiFi வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேவை உண்டு.

டெலிகாம் டாக் (Telecom Talk) வெளியிட்ட அறிக்கையில், இந்த சலுகை நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், இச்சலுகையைப் பெற வேண்டுமானால், அதற்கு தகுதி பெற வேண்டும்.

வாடிக்கையாளர்கள் நான்கு மாத இலவச பிராட்பேண்டு சேவையைப் பெற, 36 மாத தொகையை ஒரே பேமெண்ட்டாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் மாதா மாதம் செலுத்தும் தொகையை, மூன்று ஆண்டுகளுக்கு எவ்வளவு ஆகும் என்று கணக்கிட்டு மொத்தமாக செலுத்தினால், உங்களுக்கு 40 மாதங்களுக்கான சேவைகள் வழங்கப்படும்.

Also Read : உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கிறதா? கண்டுபிடிக்க சூப்பரான டிப்ஸ்!

அதுமட்டுமின்றி, முன்பணமாக செலுத்துபவர்களுக்கு மற்ற சலுகைகளையும் பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டு கால மாத தொகையை, 24 மாதங்களுக்கான தொகையை முன்பணமாக செலுத்தி, இரண்டு மாதங்களுக்கு இலவச பிராட்பேண்டு பெறலாம். அதே போல, ஒரு ஆண்டு, அதாவது 12 மாதங்களுக்கான தொகையை ,முன்பணமாக செலுத்தினால் ஒரு மாதத்துக்கு இலவச பிராட்பேண்டு சேவை கிடைக்கும்.

பிஎஸ்என்எல் தளத்தில் இலவச பிராட்பேண்டு சேவையைப் பெறுவது எப்படி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி, நீங்கள் 1800003451500 என்ற இலவச அழைப்பு எண்ணுக்கு அழைத்து, சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். அது மட்டுமின்றி, கூடுதல் தகவல் தேவைப்பட்டால், நீங்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி நீங்கள் இலவச பிராட்பேண்டு சேவையைப் பெறுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

Also read : அக்டோபர் 15 முதல் விற்பனைக்கு வரும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 - ரூ.3,000 கேஷ்பேக் ஆஃபர் அறிவிப்பு!

இந்த பிராட்பேண்டு சலுகை, சில மாதங்களுக்கு முன்பு வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், தற்போது, நாடு முழுவதும் இலவச பிராட்பேண்டு சேவை வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் தவிர்த்து, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாரத் ஃபைபர் பிளான்கள் வழங்கப்படுகின்றன என்றும் டெலிகாம் டாக் தெரிவித்துள்ளது. பாரத் ஃபைபர் இணைய சேவையில், FTTH – ஃபைபர் டு தி ஹோம் பிராட்பேண்ட் சேவை ரூ. 449 முதல் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: