25% கேஷ்பேக் ஆஃபர் வழங்கும் BSNL!

இந்த ஆஃபர் கடந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்த நிலையில் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

25% கேஷ்பேக் ஆஃபர் வழங்கும் BSNL!
பி.எஸ்.என்.எல்
  • News18
  • Last Updated: March 9, 2019, 1:47 PM IST
  • Share this:
BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 25 சதவிகிதம் கேஷ்பேக் ஆஃபர் வழங்குகிறது.

BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வருகிற மார்ச் 31-ம் தேதி வரையில் 25 சதவிகிதம் கேஷ்பேக் ஆஃபர் வழங்குகிறது. லேண்ட்லைன், ப்ராட்பேண்ட் மற்றும் வைஃபை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. புதிதாக BSNL-ன் எந்தத் திட்டத்தின் கிழ் இணைந்தாலும் அந்தப் பயனாளர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த கேஷ்பேக் ஆஃபர் க்ரெடிட் ஆக மட்டுமே வழங்கப்படும். பணமாக வழங்கப்படமாட்டாது. க்ரெடிட் மூலம் வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்த கட்டணங்கள் செலுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆஃபர் கடந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்த நிலையில் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


டெஸ்க்டாப் அல்லது மொபைல் பயன்பாடுகளுக்காக BSNL சேவைகள் எதைப் பயன்படுத்தினாலும் இச்சலுகைகள் பொருந்தும். இந்தியா முழுமைக்கும் இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: தூர்தர்ஷனின் டியூனுக்கு நடனமாடி வியப்பில் ஆழ்த்திய இளைஞர்!
First published: March 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்