Home /News /technology /

4ஜி சேவைகள் மூலமாக வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் - பிஎஸ்என்எல் நம்பிக்கை

4ஜி சேவைகள் மூலமாக வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் - பிஎஸ்என்எல் நம்பிக்கை

BSNL

BSNL

BSNL 4G | தனியார் நிறுவனங்கள் 5 ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ள நிலையில் டெலிகாம் துறையில் போட்டிகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழலில், இனி வரக் கூடிய மாதங்களில் 4 ஜி சேவையை அறிமுகம் செய்ய பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் போன்ற தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் 4 ஜி சேவைகளை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டன. அடுத்த கட்டமாக 5 ஜி சேவையை அறிமுகம் செய்யும் முயற்சியை அந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

ஆனால், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இப்போது தான் 4 ஜி சேவையை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், 2022ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளின் மூலமாக ரூ.17,000 கோடி வருவாய் ஈட்ட முடியும் என்று பிஎஸ்என்எல் நம்புகிறது. இது முந்தைய நிதியாண்டின் இலக்கை ஒப்பிடுகையில் சற்று குறைவாகும்.

ஏனென்றால், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்க காரணமாக இருந்த கால் கணெக்ட் கட்டணங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அந்நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான பிகே.பூர்வார் தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் 5 ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ள நிலையில் டெலிகாம் துறையில் போட்டிகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழலில், இனி வரக் கூடிய மாதங்களில் 4 ஜி சேவையை அறிமுகம் செய்ய பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பூர்வார் கூறுகையில், “தனியார் நிறுவனங்கள் 5 ஜி சேவையை தொடங்குவது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் வளரும் தலைமுறையினருக்கு ஏற்ப சேவைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. வெகு விரைவில் பிஎஸ்என்எல் 4 ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. பல்வேறு சவால்களுக்கு இடையிலும் 2021 நிதியாண்டில் நிலையான வருவாயை எங்களால் ஈட்ட முடிந்தது. கடந்த 2021 நிதியாண்டில் ரூ.17,452 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இந்த ஆண்டு நாங்கள் ரூ.17,000 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்தார்.



கால் கனெக்ட் சார்ஜஸ் மூலமாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் ரூ.600 கோடி முதல் ரூ.800 கோடி வரையில் வருவாய் வந்து கொண்டிருந்தது. தற்போது அந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019 - 20 நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இழப்பு என்பது ரூ.15,500 கோடியாக இருந்தது. அது 2020 - 21 நிதியாண்டில் பாதியாக குறைக்கப்பட்டு ரூ.7,441 கோடியாக உள்ளது.

Also Read : ஆண்டிராய்டு யூஸர்களின் விவரங்களை திருடிய கூகுள்..

கடந்த நிதியாண்டைப் போலவே இந்த ஆண்டிலும் இழப்பு குறைவாக இருக்கும் என்று பிஎஸ்என்எல் தலைவர் பூர்வார் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிதியாண்டில் 4 ஜி சேவைகளை அறிமுகம் செய்யவும், வீடுகளுக்கு ஃபைபர் நெட் கனெக்‌ஷன் வழங்கவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. போட்டி நிறைந்த உலகில் பிஎஸ்என்எல் நலன்களை தக்க வைத்துக் கொள்ள அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
Published by:Selvi M
First published:

Tags: BSNL, Technology

அடுத்த செய்தி