பைபர் திட்டங்களை நிறுத்திய பி.எஸ்.என்.எல் - ஏன் தெரியுமா?

பைபர் திட்டங்களை நிறுத்திய பி.எஸ்.என்.எல் - ஏன் தெரியுமா?

பி.எஸ்.என்.எல்

பிராட்பேன்ட் இன்டர்நெட் சேவைகளை வழங்கி வருகிறது. 2020ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் பைபர் பேசிக், பைபர் வேல்யூ, பைபர் பிரீமியம் மற்றும் பைபர் அல்ட்ரா சேவைகளை வழங்கிய பி.எஸ்.என்.எல், பின்நாட்களில் பல்வேறு புதிய திட்டங்களையும் சேர்த்து வழங்கியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தொலைத்தொடர்பு துறையில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் பல்வேறு பைபர் திட்டங்களை திடீரென நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் பார்த் பைபர் (‘Bharat Fibre) என்ற பெயரில் பிராட்பேன்ட் இன்டர்நெட் சேவைகளை வழங்கி வருகிறது. 2020ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் பைபர் பேசிக், பைபர் வேல்யூ, பைபர் பிரீமியம் மற்றும் பைபர் அல்ட்ரா சேவைகளை வழங்கிய பி.எஸ்.என்.எல், பின்நாட்களில் பல்வேறு புதிய திட்டங்களையும் சேர்த்து வழங்கியது. இந்நிலையில், திடீரேன பல்வேறு திட்டங்களையும் பி.எஸ்.என்.எல் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் பாரத் பைபர் யூசர்கள் பைபர் பேசிக் பிளஸ் ( Fibre Basic Plus), ப்ரீமியம் பேசிக் பிளஸ் (Fibre Premium Plus) ஆகிய இரண்டு திட்டங்களை மட்டுமே தேர்வு முடியும் எனவும் கூறியுள்ளது.

பைபர் பேசிக் பிளஸ் திட்டத்திம் வரிகள் இல்லாமல் 599 ரூபாய், பைபர் ப்ரீமியம் பிளஸ் வரிகள் இல்லாமல் 1,227 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களுக்கும் கிடைக்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

BSNL பைபர் பேசிக் பிளஸ்

பி.எஸ்.என்.எல் பைபர் பேசிக் பிளஸ் பிராட்பேண்ட் திட்டம் 599 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை தேர்வு செய்யும் யூசர்கள் 60 Mbps வேகத்தில் தகவல்களை பதிவிறக்கம் அல்லது பதிவேற்றம் செய்துகொள்ள முடியும். 3,300GB டேட்டா கிடைப்பதுடன், வேலிடிட்டிக்குப் பிறகு 2 Mbps வேகத்தில் இணைய சேவையை தொடர முடியும். பேசிக் பிளஸ் திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்புகளையும் யூசர்கள் மேற்கொள்ள முடியும்.

BSNL பைபர் ப்ரீமியம் பிளஸ்

பி.எஸ்.என்.எல் பைபர் ப்ரீமியம் பிளஸ் பிராட்பேண்ட் திட்டம் 1,277 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் யூசர்களுக்கு பதிவிறக்கம் / பதிவேற்றும் வேகம் அதிகபட்சம் 200 Mbps வரை கொடுக்கப்படுகிறது. 3,300 ஜி.பி டேட்டா கிடைப்பதுடன், வேலிடிட்டி முடிந்த பிறகு இன்டர்நெட் வேகம் 15 Mbps ஆக குறைக்கப்படும்.

Also read... ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த LinkedIn - ஒருவாரம் விடுமுறை!

அகற்றப்பட்ட திட்டங்களில் ஒன்றான பைபர் பேசிக் மாதத்திற்கு ரூ .449 மட்டுமே செலவாகும். என்ட்ரி லெவல் பைபர் பிராட்பேண்ட் திட்டங்களில் சிறந்ததாக கருத்தப்பட்ட இந்த திட்டத்தில் யூசர்கள் 30 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டதுடன், 3,300 ஜிபி டேட்டாவும் வழங்கப்பட்டது. இந்த திட்டங்களை ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறுத்த திட்டமிட்டிருந்த பி.எஸ்.என்.எல் நிறுவனம், அதன் வரம்பை நடப்பாண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீடித்திருந்தது. பி.எஸ்.என்.எல் பைபர் பிராட்பேண்ட் திட்டங்களுக்கு ஏர்டெல் எக்ஸ்டீம் பைபர் மற்றும் ஜியோ பைபர் என்டிரி லெவல் திட்டங்கள் கடும் போட்டியாக இருக்கின்றன.

இந்த சவாலை சமாளிக்க வேண்டுமென்றால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் பைபர் திட்டங்களை நிறுத்தாமல் முறைப்படுத்த வேண்டும் என யூசர்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், தவிர்க்க முடியாத காரணங்களால் என்ட்ரி லெவல் பைபர் திட்டங்களை பி.எஸ்.என்.எல் நிறுத்தியுள்ளது. மேலும், இதில் புதிய திட்டங்கள் சேர்க்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் பி.எஸ்.என்.எல் பைபர் யூசர்களிடையே உள்ளது. தொலைத்தொடர்பு துறையிலும் பைபர் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், பி.எஸ்.என்.எல் விரைவில் புதிய திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: