தொழில்நுட்பம் மற்றும் வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் டிசிஎஸ், BSNL உடன் நெருக்கமாக செயல்படுகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள், இந்த நிறுவனத்தின் முதல் தொகுதி உபகரணங்களை வழங்க திட்டமிட்டுள்ளது. தற்போது நெட்வொர்க்குகள் மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்து பல சோதனைகளை நடத்தி வருகிறது.
அதன்படி பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (bsnl) விரைவில் 4ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு, இந்த 4ஜி சேவைகள் அடுத்த 18 முதல் 24 மாதங்களில் வெளியாகும் என்றும் bsnl கூறியுள்ளது. டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நெட்வொர்க் திட்டமிடல், தொழில்நுட்பம் மற்றும் வணிக அம்சங்களில் பிஎஸ்என்எல் உடன் இணைந்து செயல்படுவதாகவும் சமீபத்திய அறிக்கைகள் கூறுகிறது.
மேலும் 5G சேவைகளில், BSNL இன் 5G NSA (non-standalone) கோர் மற்றும் சாத்தியமான பேண்டுகளில் உள்ள ரேடியோக்கள் ஆய்வகங்களில் சோதனைக்கு தயார் நிலையில் உள்ளதாகவும், தற்போது இது சோதனைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
BSNL இன் இந்த 4G சேவை அடுத்த 18-24 மாதங்களில் பான்-இந்திய BSNL சந்தாதாரர்களுக்கு (pan-India subscribers) வெளிவரத் தொடங்கும் எனவும், 4ஜி சேவைகளைத் தவிர, BSNL வழங்கும் 5ஜி சேவையும் தற்போது தயாராகி, இறுதிச் சோதனை கட்டத்தில் இருப்பதாகவும், எகனாமிக் டைம்ஸின் சமீபத்திய அறிக்கை தெரியப்படுத்துகிறது.
Also Read : இந்தியாவில் Xiaomi புதிய மாடல் தயாரிப்புகள் வெளியானது.!
TCS இன் தலைமை இயக்க அதிகாரி (COO) மற்றும் செயல் இயக்குனர், N.கணபதி அறிக்கையில் கூறியது படி, "நாங்கள் BSNL உடன் சேர்ந்து வணிக வாய்ப்புகளின் பல பகுதிகளை பற்றிய உரையாடல்களை முடிக்கவிருப்பதாகவும், வணிகம் முறையே முதலாவதாக வரிசைப்படுத்துவதை திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் உபகரணங்களின் முதல் தொகுதி வெளியாகும் மற்றும் அவற்றின் தற்போதைய நெட்வொர்க் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு உட்பட பல சுற்று சோதனைகளின் முடிவுகள் மற்றும் செயல்முறைகள் சீராகச் சென்றதாகவும் அவர் கூறினார்".
மார்ச் மாதம் நடந்த ராஜ்யசபாவின் கேள்வி நேரத்தில், தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான்,பிஎஸ்என்எல் (BSNL) ன் 4ஜி சேவைகள் வெளியீட்டுத் திட்டத்தை வெளிப்படுத்தியதாக ஏற்கனவே வெளியான அறிக்கை பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. தொலைத்தொடர்பு நிறுவன வலையமைப்பின் சேவையை மேம்படுத்துவதற்காக தற்போதுள்ள அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Also Read : இந்த 8 ஆபத்தான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை உடனடியாக டெலீட் செய்யுங்கள்.!
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக போட்டியிடும் வகையில் அரசுக்கு சொந்தமான இந்த BSNL தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் போராடி வருவதாகவும், மற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களைப் போல் இல்லாமல், BSNLல் இன்னும் 4G இணைப்புக்கள் இந்திய அளவில் இல்லை எனவும் கூறியதோடு, இந்த சேவை 2020ல் தன் வெளியீட்டை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறப்பட்டிருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.